054_அல் கமர் - சந்திரன்
அத்தியாயம் : 54 அல் கமர் - சந்திரன் மொத்த வசனங்கள் : 55 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இதற்குச் சந்திரன் என பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 54 அல் கமர் - சந்திரன் மொத்த வசனங்கள் : 55 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இதற்குச் சந்திரன் என பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 53 அந்நஜ்மு - நட்சத்திரம் மொத்த வசனங்கள் : 62 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயர் ஆனது.
அத்தியாயம் : 52 அத்தூர் - ஒரு மலையின் பெயர் மொத்த வசனங்கள் : 49 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.
அத்தியாயம் : 51 அத்தாரியாத் - புழுதி பரத்தும் காற்றுகள் மொத்த வசனங்கள் : 60 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இதன் பெயரானது.
அத்தியாயம் : 50 காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்து. மொத்த வசனங்கள் : 45 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 49 அல் ஹுஜ்ராத் - அறைகள் மொத்த வசனங்கள் : 18 இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில், அறைகளுக்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகத்தை அழைக்கக் கூடாது என்று கூறப்படுவதால் அறைகள் எனப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 48 அல்ஃபத்ஹ் - அந்த வெற்றி மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இதற்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது
அத்தியாயம் : 47 முஹம்மத் - இறுதித் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 38 இந்த அத்தியாயத்தின் 2வது வசனத்தில் முஹம்மது மீது அருளப்பட்டது என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டது
அத்தியாயம் : 46 அல் அஹ்காஃப் - மணற் குன்றுகள் மொத்த வசனங்கள் : 35 இந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத் தூதர் மணற் குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது
அத்தியாயம் : 45 அல் ஜாஸியா - மண்டியிட்டோர் மொத்த வசனங்கள் : 37 இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டவர்களாக இறைவன் முன் நிறுத்தப்படுவதைப் பற்றிக் கூறப்படுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 44 அத்துகான் - அந்தப் புகை மொத்த வசனங்கள் : 59 பத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 43 அஸ்ஸுக்ருஃப்- அலங்காரம மொத்த வசனங்கள் : 89 அலங்காரமான சொகுசு வாழ்க்கை பற்றி 34, 35 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 42 அஷ்ஷூரா - கலந்தாலோசனை மொத்த வசனங்கள் : 53 ஆலோசனை செய்தே முடிவு செய்ய வேண்டும் என்று 37வது வசனம் கூறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 41 ஃபுஸ்ஸிலத் - தெளிவுபடுத்தப்பட்டது மொத்த வசனங்கள் : 54 இந்த அத்தியாயத்தின் மூன்றாம் வசனத்தில் ஃபுஸ்ஸிலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 40 அல் முஃமின் - நம்பிக்கை கொண்டவர் மொத்த வசனங்கள் : 85 இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் முஃமின் என்ற சொல் இடம் பெறுவதால் இந்தப் பெயர் வந்தது.
அத்தியாயம் : 39 அஸ்ஸுமர் - கூட்டங்கள் மொத்த வசனங்கள் : 75 நல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 38 ஸாத் - அரபு மொழியின் 14 வது எழுத்து. மொத்த வசனங்கள் : 88 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
அத்தியாயம் : 37 அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர் மொத்த வசனங்கள் : 182 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 36 யாஸீன் - அரபு மொழியின் 28, மற்றும் 12 வது எழுத்துக்கள். மொத்த வசனங்கள் : 83 இந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 35 ஃபாத்திர் - படைப்பவன் மொத்த வசனங்கள் : 45 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஃபாத்திர் என்ற சொல் இடம் பெறுவதால் இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
அத்தியாயம் : 34 ஸபா - ஓர் ஊர் மொத்த வசனங்கள் : 54 ஸபா எனும் ஊரைப் பற்றியும் அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும் அவ்வூரார் நன்றி மறந்த போது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 33 அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர் மொத்த வசனங்கள் : 73 பல்வேறு எதிரிகள் கூட்டாகப் படை திரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும் அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வது வசனம் முதல் 27வது வசனம் வரை கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 32 அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல் மொத்த வசனங்கள் : 30 இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 31 லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர் மொத்த வசனங்கள் : 34 லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 30 அர்ரூம் - ரோமப் பேரரசு மொத்த வசனங்கள் : 60 ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும் பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 29 அல் அன்கபூத் - சிலந்தி மொத்த வசனங்கள் : 69 இந்த அத்தியாயத்தின் 41 வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களின் உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 28 அல் கஸஸ் - நடந்த செய்திகள் மொத்த வசனங்கள் : 88 இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்.
அத்தியாயம் : 27 அந்நம்ல்- எறும்பு மொத்த வசனங்கள் : 93 இந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.
அத்தியாயம் :26 அஷ் ஷுஅரா - கவிஞர்கள் மொத்த வசனங்கள் : 227 இந்த அத்தியாயத்தின் 221வது வசனம் முதல் 227 வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், அவர்களில் நல்ல கவிஞர்களும் கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் எனப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது மொத்த வசனங்கள் : 77 திருக்குர்ஆனை ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.