024_அந்நூர் - அந்த ஒளி
அத்தியாயம் : 24 அந்நூர் - அந்த ஒளி மொத்த வசனங்கள் : 64 இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர் வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர்' (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 24 அந்நூர் - அந்த ஒளி மொத்த வசனங்கள் : 64 இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர் வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர்' (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 23 அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர் மொத்த வசனங்கள் : 118 இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 22 அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம் மொத்த வசனங்கள் : 78 இந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
அத்தியாயம் : 21 அல் அன்பியா – நபிமார்கள் மொத்த வசனங்கள் : 112 மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யஃகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல் கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 20 தாஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26 வது எழுத்துக்கள். மொத்த வசனங்கள் : 135 தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.
அத்தியாயம் : 19 மர்யம் - ஒரு பெண்மணியின் பெயர் மொத்த வசனங்கள் : 98 இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம்(அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று கூறப்படுகிறது.
அத்தியாயம் : 18 அல்கஹ்ஃப் – அந்தக்குகை மொத்த வசனங்கள் : 110 இந்த அத்தியாயத்தின் 9வது வசனம் முதல் 26 வரை கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர்.
அத்தியாயம் : 17 பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் மொத்த வசனங்கள் : 111 இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும் அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வசனங்கள் வரை கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.
அத்தியாயம் : 16 அந்நஹ்ல் - தேனீ மொத்த வசனங்கள் : 128 இந்த அத்தியாயத்தின் 68, 69 ஆகிய இரு வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் முக்கியமான ஒரு செய்தி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்தின் பெயர் தேனீ என்று சூட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 15 அல் ஹிஜ்ர் - ஓர் ஊர் மொத்த வசனங்கள் : 99 ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.