DM-38 எதை நோக்கி ஓடுகிறோம்? What are we running towards ?
இந்த உலகத்தில் நாம் ஓடுகிற ஓட்டமானது கடவுளுடைய பாதையில் ஓடுகிறோமா? வழிமாறி பாவத்தின் பாதையில் ஓடுகிறோமா? என்பதைபற்றி நம்மை நாமே நீதானிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைப்பாகும்.!

இந்த உலகத்தில் நாம் ஓடுகிற ஓட்டமானது கடவுளுடைய பாதையில் ஓடுகிறோமா? வழிமாறி பாவத்தின் பாதையில் ஓடுகிறோமா? என்பதைபற்றி நம்மை நாமே நீதானிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைப்பாகும்.!
Namathu eakkangalai kartharidam kanneeeodu muraiyittaaal kavalai illamal vaazha mudium.!
Jesus Loves You
மற்றவர்களை குறை சொல்வதற்கு முன்பு நம்மை பற்றி நாமே யோசித்துப் பார்ப்போம், சிந்தித்துப் பார்ப்போம் .!
Trying
As
ஆபத்து காலத்தில் சோர்ந்து போவாய் ஆனால் உன் பலன் புரிகிறது என்று சொல்லும் கர்த்தர் நீ சோர்வு ஏற்பட்டு இருக்கும் போது உன் பலவீன நேரத்தில் அவர் உனக்கு உதவி தந்து உன்னை வெளிப்படுத்தி தொடர்ந்து நடத்துகிறார்.. ஆகவே நம் வாழ்வில் சோர்ந்து போகும் போது மனதை உடைக்கிற மனிதனை தேடுவதை விட உடைந்த மனதை ஒட்டுகிற கர்த்தரை தேடி நாம் கடந்து போவோம் இந்த வாழ்க்கையை...! எவ்வளவுதான் உடலில் பலம் நிறைந்த மனிதனாக இருந்தாலும் மனம் உடையும் போது அவன் சிறு குழந்தையாகவே மாறுகிறான் அப்படிதான் கர்த்தர் ஒவ்வொருவரையும் மனமுடைந்த வ...
இந்த உலக வாழ்க்கையில் சாதனை படைக்க ஆயிரம் பேர் முயற்சி செய்து கொண்டு தான் இருக்காங்க, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாதனை படைத்தும் இருக்காங்க ஆனாலும் இந்த சாதனைகள் எல்லாம் ஒரு நாள் மாறும், மாற்றமுடியும்..! ஏனென்றால் இந்த சாதனைகள் எல்லாம் நிரந்தரம் இல்லாதவைகள். அநித்தியமான உலகத்தில் செய்யப்படும் சாதனைகளும் செய்கின்ற மனிதர்களும் மாயைதான் ஆனால் நித்திய உலகத்தில் நாம் வாழ்கிற வாழ்க்கையும், அங்க நாம் பெற்றுக் கொள்ளும் நித்திய ஜீவனும் என்றும் மாறாதவை அவை நித்திய நித்திய காலமாக நம்மோடு கூட இருப்பவை ஆகையா...
வீணான கெட்ட காரியங்களுக்கு செவி கொடுக்கின்ற நாம் நல்ல உண்மையான, சத்தியமான விஷயத்திற்கு செவிகொடுக்க தயங்கக்கூடாது. சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று சொன்ன கர்த்தர் நாம் சத்தியத்திற்கு செவி கொடுக்கும் போது நமக்கு உதவி செய்து நமக்கு அநேக விடுதலை தருகிறார். ஆகவே சத்தியத்திற்கு செவி கொடுப்போம் விடுதலை அடைவோம் தேவனோடு நடப்போம்...!
விடுதலையோடு வாழ்கின்றேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பாவம் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் இது போல நாம் அனேக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதும் உண்மை. ஆகையால் இதேபோல அனேக கெட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் பாவம் சாபம் இது போன்ற காரியங்களில் அடிமையாக இருக்கும் நம்மை விடுவிக்கும் தலைப்பே இந்த விடுதலை தருகின்ற இயேசு...!
அன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற இன்பமும் துன்பமும் கசப்பும் நல்லதும் கெட்டதும் எல்லாம் நம்முடைய வாழ்க்கையோடு சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும் இன்பமும் ஏற்றமும் தாழ்வும் அவன் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகும்.. நமக்கு துன்பம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள கடவுளிடம் பலத்தை கேட்க வேண்டுமே தவிர எனக்கு துன்பமே இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று கேட்பவர் முட்டாள்... காரணம் வழிகள் தான் ஒருவரை வலிமையாக்கும் வழிகள் தான் ஒருவரை மேன்மைப்படுத்தும் வழிகள் தான் ஒருவரை சிந்திக்க வைக்கும் வழி...
GTG
எல்லையில்லாத இந்த உலகில் நாம் எல்லையோடு வாழவேண்டும் சிலர் மிஞ்சி சில காரியங்களை செய்து அதனால் வருகின்ற கஷ்டங்களையும் கவலைகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டு தெரிகின்றனர். ஆகையால் நாம் மிஞ்சி வாழாமல் நாம் அடக்கம் உள்ளவர்களாய் அளவோடு கூட நாம் வாழ்ந்து முடிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் நமது சிந்தனை ஆசையோ கோபமோ மிஞ்சிப்போனால் அதனால் நமக்கு லாபம் அல்ல நஷ்டமே வரும் ஆகையால் நாம் எந்த ஒரு காரியத்திலும் மிதமிஞ்சி செய்யாமல் ஆவியில் அடங்கி இருப்போம்..
இந்த பூமியில் வாழ்கின்ற நாம் அனேக இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ஏக்கர் கணக்கில் நிலங்களை பிடித்துக் கொண்டிருக்கிறோம் மனிதர்களுடைய மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்... என்றாலும் எல்லாம் மாயை இருக்கிறது ஆம் வானத்துக்குக் கீழே பூமிக்கு மேலே அனைத்தும் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறார்.. எல்லாம் மாயை என்றாலும் நாம் பிடிக்க வேண்டிய ஒரு இடம் உண்டு அட ஆமாங்க கடவுள் கொடுத்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொண்ட நாம் அதை வைத்துத்தான் பரலோகத்தில் இடம் பிடிக்க வேண்டும். பரலோகத்தில் இடம்பிடிக்க நாம் முத...
இங்கு தேசத்தை நேசிப்பவர்கள் எவருமில்லை தேசத்தை நாம் எவ்வாறு நேசிக்கிறோமோ அதுபோல தேவனையும் நாம் நேசிக்க வேண்டும். காரணம் நமக்கு ஜீவனைக் கொடுத்து நம்மை பராமரித்துக் கொண்டு வருகின்ற நம்முடைய தேவன் நல்லவராய் இருந்து பல நன்மைகளை நமக்கு செய்து வருகிற படியால் அவரை நாம் கணப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் நாம் நம் தேவனை நேசிக்க வேண்டும் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரை நாம் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இது போன்ற நன்மையான காரியங்களை கற்றுக்கொள்வோம் கர்த்தரை கனம் பண்ணுவ...
ஒரு மனிதனுடைய மனதை மாற்றக்கூடிய சக்தி கடவுளுக்கு மாத்திரமே உண்டு அப்படிப்பட்ட கடவுளை குறித்துதான் பார்க்க இருக்கிறோம். தன் இஷ்டப்படி வாழ்ந்த ஒரு மனிதனுடைய வாழ்வை மாற்றின தேவன், நம்முடைய வாழ்க்கையும் மாற்ற வல்லவர் என்பதை விசுவாசத்தோடு நாம் நம்புவோம். தொடர்ந்து தேவனானவர் நம்முடைய பேச்சையும், குணத்தையும், இருதயத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றி நம்மை ஆசீர்வதிப்பாராக.
மனிதர்களை கனம் பண்ணுகின்ற நாம் கடவுளை கனம் பண்ண முயற்சிப்பதில்லை, கடவுளை கனம் பண்ண வேண்டிய விஷயத்தில் கனம் பண்ணியே ஆக வேண்டும், அப்படி பண்ணா விட்டாலும் அதுவும் பாவமே.. இதை செய்யாதே என்று கடவுள் சொல்லும்போது அவர் வார்த்தைக்கு இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து, மதிப்பு கொடுத்து நாம் செய்யாமல் இருப்பதே நல்லது. அதனை மீறி செய்யும்போதுதான் பாவமும் சாபமும், நோயும், பிரச்சனைகளும் வருகிறது. ஆகையால் பிரச்சனைகளை தவிர்க்க தேவ வார்த்தை கீழ்ப்படிவோம்.
தேவனிடத்தில் நம் தேவைகளை மட்டுமே கேட்டுவந்த நாம் தேவனுடைய திட்டம் ( ம ) இறைவனுக்கான காரியம் என்ன என்பதை நாம் கேட்டு அவருக்காக நாம் வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு ஏக்கத்தை தோன்றச் செய்யும் செய்திதான் இந்த ஒற்றைக் காலணி...!
ஒருவராலும் பிடிக்க முடியாதபடி மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறதும்,யார் கையிலும் சிக்காததுமான காலத்தையும், நேரத்தையும் பற்றிதான் நாம பார்க்கப் போறோம். கடவுள் கொடுத்த மிகச் சிறந்த ஒரு கிப்ட் தாங்க இந்தக் காலம். இந்தக் காலத்தை அநேகர் தவறாக பயன்படுத்திகிட்டு இருக்காங்க, வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் இப்படி செய்யாமல் காலத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள கடவுள் உதவி செய்வாராக..!
கட்டமைக்கப்பட்ட காலை போல கண் கண்ட இடமெல்லாம் சுற்றித் திரிவது வாழ்க்கையல்ல தனக்கென்று ஒரு கட்டுப்பாடு வாழ்வதுதான் வாழ்க்கை. ஆம் நம்முடைய ஆண்டவரும் சில கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளை வைத்திருக்கிறார். அதன்படி வாழ்பவர்களே கடவுளுக்கு பிரியமானவர்கள் மாறாக தன் விருப்பபடி நடப்பவர்கள் அனைவரும் பொய்யர்..! பொய்யில் நடவாதே..! நேர்மையை மறவாதே..!
நேர்மையும் உண்மையும் மனித வாழ்க்கையின் சிறந்த குணங்களாகும் நற்குணங்களை நாம் இழக்காமல் வாழவேண்டும் நல்ல குணங்களை இழந்து நாம் வாழும் வாழ்க்கையானது மிகவும் மிருகங்களுக்கு சமமானதாகும். ஆகவே நாம் எங்கு இருந்தாலும் எங்கு சென்றாலும் எங்கு கிடைத்தாலும் நாம் உண்மையும் நேர்மையும் ஆக இருக்க வேண்டும். கடவுள் உங்களோடு கூட இருந்து உங்களை ஆசிர்வதிக்க வேண்டுமானால் நீங்கள் எப்பொழுதும் யார் முன்பும் நேர்மையும் உண்மையும் கடைபிடித்து வாருங்கள் கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பார்...! https://youtu.be/IpD...
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியானது உங்கள் இருதயத்தில் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் தருவது ஆகும். மேலும் உங்களை சிந்திக்க வைக்கவும், அனேக உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சியானது உருவாக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் யாரையும் காயப்படுத்துவதோ, கஷ்டப்படுத்துவதோதோ நிகழ்ச்சியின் நோக்கம் அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையை உணருங்கள் மாற்றம் அடையுங்கள்..!
Glory to God
PTL
நம்முடைய வாழ்க்கையில் சில மாறாத குணங்களும் பேச்சுக்களும் இருக்குமாயின் அவற்றை சீக்கிரமாக மாற்றிக்கொள்ளவேண்டும் காரணம் நம் பழைய மனுஷன் மறித்து புதிய மனுஷன் உயிர்த்திருக்கிறான் என்பதற்கான ஒரு மிகச் சிறந்த ஆதாரமே அது.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமாய் இருக்கிறது என்ற வசனத்தின் பிரகாரமாக வருகின்ற சத்தியத்தை தேவன் தாமே ஆசீர்வதித்து நம்முடைய விசுவாசத்தை பெருக உதவி செய்வாராக ஆமென்
கண்ணுக்குப் புலப்படாத தூசி கண்ணில் விழுந்தால் எப்படி நம்மால் நிம்மதியாக இருக்க முடியாதோ அதுபோல நம்ப வாழ்க்கையில் நமக்குத் தெரியாத சில தவறுகள் பாவங்கள் நம்மை நேர்வழியில் இருந்து தடம் புரளச் செய்யும் அப்படிப்பட்ட தப்பான வழிகளை நம்முடைய வாழ்க்கையில் சோதித்து அறிந்து அவைகளை நீக்கி நாம் வாழும்போது நாம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம். இதில் அனேக தன்னிடத்தில் இருக்கின்ற சிறு சிறு குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டும் பொழுதோ அல்லது பிறர் வெளிப்படையாக கூறும் போது அதை ஏற்பதில்லை மாறாக நான் தவறு ஒன்றும் ...
இந்த உலக மனிதர்கள் யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று கவலையோடு அமர்ந்திருக்கிற தேவஜனமே.! நாம் தேவனை புரிந்து கொள்கிறோமா??? என்ற கேள்வியோடு கூட இந்த வசனத்தை நாம் கேட்போம். மனிதர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாவிட்டால் நமக்கு எவ்வளவு வேதனையும், கசப்பும், கஷ்டமும் ஏற்படுகிறது. அதுபோலத்தான் நம்மை நேசிக்கின்ற, நமக்காக ஜீவனைத்தந்த தேவாதி தேவனை நாம் புரிந்து கொள்ளாத போது அவர் கஷ்டபடுகிறவராய் காணப்படுகிறார். ஆகையால் கர்த்தரை புரிந்துகொள்வோம் கருத்தோடு வாழ்வோம்.
மனித வாழ்க்கையில் வழிகள் என்பது மிக அவசியமான ஒன்று. அனேகர் தவறான வழிகளிலும் ஒருசிலர் நல்ல வழிகளிலும் சென்று கொண்டிருக்கிறார்கள். நமக்கான வழிகளை நாமே தெரிந்து கொண்டு நாம் அதில் பயணம் செய்யும்போது அதில் ஆயிரம் துன்பங்கள் வரலாம் ஆனால் கடவுள் காட்டும் பாதையில் நாம் நடக்கும்போது துன்பங்கள் வந்தாலும் துணையாளர் நம்மோடு கூட இருந்து அதில் தப்புவித்து நம்மை நடத்த வல்லவராயிருக்கிறார். ஆகையால் நம்முடைய சுய ஆசைகளை, சுய வழிகளை நாம் உடைப்போம் தேவ பாதையில் நடப்போம்..! என்ன நண்பர்களே நம்முடைய பாதையில் நாம் நடக்க...
வாலிபப் பிராயத்தில் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த தேவனுடைய சத்தியவசனம் கட்டாயம் தேவை ஆகவே தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள், பலப்படுங்கள், பரிசுத்தமாகுங்கள் கர்த்தருக்காய் எழும்பிப் பிரகாசியுங்கள்...Amen