DM-32..சாதிக்க வா.
Jan 31, 2022•8 min•Season 2Ep. 1
Episode description
இந்த உலக வாழ்க்கையில் சாதனை படைக்க ஆயிரம் பேர் முயற்சி செய்து கொண்டு தான் இருக்காங்க, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாதனை படைத்தும் இருக்காங்க ஆனாலும் இந்த சாதனைகள் எல்லாம் ஒரு நாள் மாறும், மாற்றமுடியும்..! ஏனென்றால் இந்த சாதனைகள் எல்லாம் நிரந்தரம் இல்லாதவைகள்.
அநித்தியமான உலகத்தில் செய்யப்படும் சாதனைகளும் செய்கின்ற மனிதர்களும் மாயைதான் ஆனால் நித்திய உலகத்தில் நாம் வாழ்கிற வாழ்க்கையும், அங்க நாம் பெற்றுக் கொள்ளும் நித்திய ஜீவனும் என்றும் மாறாதவை அவை நித்திய நித்திய காலமாக நம்மோடு கூட இருப்பவை ஆகையால் அழிந்து போகும் காரியத்திற்கே நாம் எவ்வளவு போராடுகிறோம் என்றால் அழியாத நித்திய ஜீவனுக்காக நாம் எவ்வளவாய் போராட வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..!
நாம் இரட்சிக்கப்பட்டு 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் அல்லது அறுபது ஆண்டுகள் ஆனாலும் நாம் நித்திய ஜீவனை பெறாவிட்டால் லாபம் ஒன்றுமே இல்லை ஆகையால் நாம் ஓடுகின்ற நம்முடைய விசுவாச ஓட்டமானது பரலோக வாழ்வை பெற்றுக் கொள்ளும்படியாக ஓட வேண்டும்.. நம்முடைய சாதனை நித்திய ஜீவனாகவும் பரலோக ராஜ்ஜியத்தில் பரிசுத்தரின் முகம் காணவேண்டும் என்பதே ஆகும்..!
ஆகவே நித்திய தேவனிடத்தில் நாம் பெலத்தை பெற்றுக்கொண்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள தொடர்ந்து விசுவாசப் பாதையில் நாம் சாதிக்கும் படியாக ஓடுவோம்...! வாருங்கள்..!
For the best experience, listen in Metacast app for iOS or Android
