The Political Pulse | Hello vikatan - podcast cover

The Political Pulse | Hello vikatan

Hello Vikatanhubhopper.com
The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

Stalin-க்கு சுற்றி சுற்றி சிக்கல், முறியடிக்குமா புது Agenda? பதறும் மந்திரிகள்! | Elangovan Explains

அதிமுக-பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' & 'ஓரணியில் தமிழ்நாடு' என இரண்டையும் கையிலெடுத்த மு.க ஸ்டாலின். 'அரசாங்கம்-கட்சி' நேரடியாக மக்களை சந்தித்தால், வாக்குகள் கிடைக்கும் என கணக்கு. ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடுமளவுக்கு, உட்கட்சியில் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். இதை சரிசெய்ய களையெடுப்பு அரசியல் கைகொடுக்கும் என நம்புகிறார். அதற்கேற்ப தஞ்சாவூர் மா.செ மற்றும் எம்.பி கல்யாண சுந்தரம் கட்சி பதவியை நீக்கி, அங்கே கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை பொறுப்பாளராய் நியமித்தி...

Jul 15, 202522 min

Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains

'கூட்டணி ஆட்சி' என மறுபடியும் கொளுத்திப் போட்டுள்ளார் அமித் ஷா. இதை முறியடிக்க, ஆந்திரா ஜெகன் மோகன் Formula-வை கையிலெடுகிறார் எடப்பாடி. முக்கியமாக சமுதாய ரீதியிலாகவோ, மண்டல ரீதியிலாகவோ, 6 துணை முதலமைச்சர்களை நியமிக்கும் வாக்குறுதி என புது ரூட் எடுக்கிறார். இன்னொரு பக்கம், திமுக நெருக்கடியை பயன்படுத்தி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக. அந்தவகையில் 'பேக்கேஜ் 50' என்ற அஜெண்டாவை முன் வைத்துள்ளார் திருமா. இதில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தொகுதியும் உண்டு என்கிறார்கள் விசிக-வினர். இதை எப்படி சம...

Jul 14, 202521 min

TRB Raja-வை சுற்றி DMK வார்? Stalin-க்கு சிக்கல் தரும் தொகுதிகள்! | Elangovan Explains

' நூறு தொகுதிகளுக்கு மேல் வீக்காக உள்ளது' என மு.க ஸ்டாலினுக்கு வந்திருக்கும் ஷாக் ரிப்போர்ட். இதை சரி செய்ய ரோடுஷோ உள்ளிட்ட மக்கள் சந்திப்பை தீவிர ப்படுத்துகிறார் ஸ்டாலின் ஆனாலும் பல மாவட்டங்களில் வெடிக்கும் உட்கட்சி மோதல். சமீபத்தில் திருவாரூர் சென்ற போது வெளிப்படையாகவே தெரிந்த டிஆர்பி ராஜா டீம் Vs பூண்டி கலைவாணன் டீம் போஸ்டர் யுத்தம். இந்த சின்ன சின்ன பிரச்சனைகளையும் சரி செய்ய தனி டீம் அமைத்துள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக பலவீனங்களை தமக்கு பலமாக மாற்ற திட்டமிடுகிறார். முக்கியமாக சவுத் தமிழ்நாட...

Jul 12, 202513 min

Ramadoss வீட்டில் ஒட்டும் கேட்கும் கருவி, EPS நம்பும் கலைஞர் Formula! | Elangovan Explains

'கூட்டணி ஆட்சி' என்பது எடப்பாடிக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. இதை சமாளிக்க 'கலைஞர் ஃபார்முலா-வை' கையில் எடுத்து, விரிவான மெசேஜை தட்டி விட்டுள்ளார். இதை பார்த்து அமித் ஷா தந்த Promise. இன்னொரு பக்கம் அப்பா மகள் சண்டையில், அம்மாவிடம் சென்று நியாயம் கேட்ட அன்புமணி. மேலும் தேர்தல் ஆணையம் மூலம் செக் வைக்க நினைக்க, இதையறிந்து நீதிமன்றம் செல்லும் ராமதாஸ். இடையில் , 'என்னை கண்காணிக்க, என் வீட்டில், ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர்' என பகீர் குண்டை வீசிய ராமதாஸ்.

Jul 11, 202517 min

BJP-யாகவே மாறிய EPS? Stalin போடும் சாதக கணக்கு! | Elangovan Explains

'பிஜேபியாகவே மாறிவிட்டார் எடப்பாடி' என ஸ்டாலின் விமர்சனம் . 'இந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம்' என எடப்பாடி விமர்சனம். இதற்கிடையே திருமாவும், எடப்பாடியும் மாறி மாறி அட்டாக் செய்து கொள்கின்றனர். இதை வைத்து ஸ்டாலின் சாதக கணக்கு போடுகிறார். முன்பு கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பு இருந்தது ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு அந்த வாய்ப்பு குறைவு. மேலும் அதிமுகவை காரணம் காட்டி அதிக தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகளாலும் டிமாண்ட் செய்ய இயலாது இதனாலேயே தன்னுடைய டாஸ்க் நிறைவேறியதாக ஸ்டாலின் கணக்கு.

Jul 11, 20259 min

'Vaiko Vs Mallai Sathya' பின்னணியில் ஸ்கெட்ச் போட்டதே Stalin? உடையும் கூட்டணி? | Elangovan Explains

மல்லை சத்யா கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என குற்றச்சாட்டும் வைகோ .வாரிசுக்காக என் மீது பழி சுமத்துவதா? என மறுக்கும் மல்லை சத்தியா. உடையும் அபாயத்தில் மதிமுக? இதற்கு பின்னணியில் திமுக லாபியோடு மல்லை சத்தியா செயல்படுகிறார் சமீபத்தில் மதிமுகவிலிருந்து திமுகவுக்கு சிலர் தாவினர். அதன் பின்னணியிலும் மல்லை சத்யாவே இருக்கிறார் மு.க ஸ்டாலினோடு நெருக்கமாக பயணித்து கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்பது துரை வைகோவின் டவுட் .அதே நேரத்தில் மதிமுக - திமுக கூட்டணி உடைந்தால் நல்லது என லாபக் கணக்கு போட்டு கவ...

Jul 10, 202519 min

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கும் சௌமியாவை, வீழ்த்த, தனது மகள் ஸ்ரீகாந்திமதியை களம் இறக்கியுள்ளார் ராமதாஸ். அதுதான் செயற்குழு கூட்டத்தில் காந்திமதி மேடை ஏறியதற்கான பின்னணி என்கிறார்கள் தைலாபுரம் ஆதரவாளர்கள். தற்போது அப்பா- மகன் யுத்தம், மகளா... மருமகளா ..? என புதிய வடிவம் எடுத்து பரபரப்பை எகிறச் செய்கிறது. இதில் ராமதாஸுக்கு எதிரா...

Jul 09, 202519 min

KN Nehru-வின் விசாரணையில் 'PTR-MOORTHY?' Stalin சம்பவம்! | Elangovan Explains

பள்ளி வேன் மீது மோதிய ரயில். பெரும் துயரத்தை ஏற்படுத்திய கடலூர் விபத்து. 1) கேட் கீப்பரின் அலட்சியமா? 2) வேன் டிரைவரின் அவசரமா? 3) அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையா? முக்கியமாக தொழில்நுட்ப காரணங்களா? எதனால் நடந்தது இந்த விபத்து? இன்னொரு பக்கம், மதுரையில் 5 மண்டல குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பின்னணியில் ரூ 200 கோடி முறைகேடு புகார். இதையொட்டி கே.என் நேரு விசாரணையில் இறங்கினார். அவர் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் ஆக்ஷனில் இறங்கிய மு.க ஸ்டாலின். ஆனாலும் இதை கையில் எடுத்து களமாட துடிக்க...

Jul 08, 202519 min

BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Explains

தவெக-வின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் நடந்தது. விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர், பாஜக, அதிமுக கூட்டணி நிராகரிப்பு, ஆகஸ்டில் மாநாடு, செப்டம்பரில் சுற்றுப்பயணம் என ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இதில் சேலம் உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்னொரு பக்கம் கன்னியாகுமரியிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா என்று ஆலோசனைகள் ஓடுகிறது. இந்த முறை பாஜக-வை ஓபனாக, கடுமையாக அட்டாக் செய்துள்ளார் விஜய். இதற்கு பின்னணியில், விஜய் சந்தித்த சில நெருக்கடிகளும் காரணம் என்கிறார்கள் சீனியர் நிர்வ...

Jul 04, 202518 min

'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elangovan Explains

சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார். இதில் அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா யார்? 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது '420' கேஸ் போடப்பட்டு உள்ளது என பகீர் பின்னணிகள் வெளிவருகிறது. முக்கியமாக நிகிதாவுக்காக தற்போது அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார்? என விசாரணை நீள்கிறது. அதே நேரத்தில், சிவகங்கை சம்பவத்தை வைத்து நான்கு வழிகளில் எடப்பாடியும், 'ஜூலை 6' போராட்டத்தின் மூலம் விஜயும் தரும் நெருக்கடிகள். இதனால் தத்தளிக்கிறதா திமுக அரசு? இவை எல்லாவற்றையும்...

Jul 03, 202518 min

Ramadoss போட்ட 'அருள்' வெடி, டெல்லி பறந்த Anbumani, பின்னணியில் BJP? | Elangovan Explains

திமுக-வில் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். இது ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக மதிமுக,விசிக,கம்யூனிஸ்ட்-கள் என பலரும் தலா '12' தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், இதை சரிகட்ட 'ஓரணியில் தமிழ்நாடு' என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம் 'மோதிப்பார்க்கலாம் ' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் அன்புமணியும். கட்சியில் தன் தலைமைத்துவத்தை காப்பாற்ற டெல்லி பயணம் என வேகம் காட்டுகிறார். பின்னணியில் பாஜக தரும் அழுத்தங்கள் இருக்...

Jun 30, 202522 min

Ramadoss வைத்து Stalin கணக்கு, மாறும் கூட்டணி? | Elangovan Explains

ஒரு பக்கம் 'உடன்பிறப்பே வா' 'ஒன் அண்ட் ஒன்' மீட்டிங் நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின் ஆனாலும் மனம் விட்டு மாவட்ட செயலாளர் குறித்து, எம்எல்ஏ-க்கள் குறித்து புகார் சொல்ல முடியவில்லை என புலம்புகின்றனர் உடன்பிறப்புகள். பெரியளவில் வொர்க்அவுட் ஆகவில்லை. இருந்தாலும் மண்டல வாரியாக வியூகங்களை வகுக்க தவறவில்லை. அந்த வகையில் கோவையை கைப்பற்ற '26,359' என்கிற புது பார்முலா-வை கையில் எடுத்திருக்கும் செந்தில் பாலாஜி. இந்த நம்பர் கேம் மூலம் 'எஸ்.பி வேலுமணி -தங்கமணி' இருவரையும் வீழ்த்திவிடலாம் என கணக்கிடுகிறார் பால...

Jun 28, 202516 min

Amit shah வீசிய அரசியல் குண்டு, ஆடிப் போன EPS & Vijay டவுட்? | Elangovan Explains

'கூட்டணி ஆட்சி' என்று பேட்டி கொடுத்துள்ளார் அமித்ஷா. இது எடப்பாடிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. ஒரு லாபக் கணக்கில்லாமல் அமித்ஷா இதை பேசவில்லை. அதே நேரத்தில், இதை முறியடிக்க, புது ரூட் மேப் போட்டுள்ளார் எடப்பாடி. அதற்கு கடந்த மூன்று நாட்கள் நடந்த மீட்டிங்கில் எடுத்த முடிவுகளே அடிப்படை. இன்னொரு பக்கம் விஜய்க்கு வலை விரிக்கும் அமித்ஷா. நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறாரா விஜய் ? இதையெல்லாம் சமாளிக்க ஜூலை 04-ம் தேதி, முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளார் விஜய் என்கிறார்கள் த.வெ.க-வினர்.

Jun 27, 202520 min

Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss! | Elangovan Explains

'கலைஞரிடம், ஸ்டாலின் இருந்தது போல இருக்க வேண்டும். என் மூச்சிருக்கும் வரை, நான்தான் பாமக தலைவர்' என அதிரடி காட்டியுள்ளார் ராமதாஸ். இந்தளவுக்கு கோபப்படுவதற்கு பின்னணியில் 3 காரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். முக்கியமானது, 'ராமதாஸ்க்கு எதிராக காடுவெட்டி குரு குடும்பம் உள்ளிட்ட பலரிடம் டீல் பேசி வந்துள்ளார் சௌமியா அன்புமணி' என்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது பாமக-வில்? இன்னொருபக்கம், பாஜக-வின் 21 மாநில பதவிகளுக்கான லிஸ்டை தயாரித்து, அமித் ஷா டேபிளுக்கும் அனுப்பியுள்ளார் நயினார் நாகேந்திரன்....

Jun 26, 202518 min

உடையும் 'DMK-MDMK' கூட்டணி? Duraimurugan-ஐ கட்டம் கட்டும் அறிவாலயம்? | Elangovan Explains

துரைமுருகனின் பொது செயலாளர் பதவியை பறித்துவிட்டு வேறொரு சீனியருக்கு கொடுக்கும் திட்டம் என டாக். இதற்கு அச்சாரமாக, மேலிட மாப்பிள்ளை கேட்ட கேள்வியால், துரைமுருகன் அப்செட் என தகவல். இதனால் இன்னொரு பக்கம் எடப்பாடி ஹேப்பி. அவர் போடும் லாபக் கணக்கு. இன்னொரு பக்கம், 'திமுக - மதிமுக கூட்டணி' உடைகிறதா? காரணம் , சாரைசாரையாக திமுகவில் இணைந்த மதிமுகவினர். மு.க ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னலால், தட்டித் தூக்கிய செந்தில் பாலாஜி என்கின்றனர். முக்கிய பின்னணியாக, மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஸ்டாலினை சீண்டிய ச...

Jun 25, 202517 min

‘பழசை ஞாபகப்படுத்துங்க' BJP-க்கு அதிர்ச்சி தரும் EPS! கூட்டணி குஸ்தி! | Elangovan Explains

நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ். இந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இங்கே பிஜேபி-யை வெற்றி பெற வைக்க, மண்டல வாரியாக, ஆன்மீக மாநாடு என ஆறு முக்கியமான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் பாஜக கூட்டணியால் இரண்டு முக்கிய நெருக்கடியை சந்திக்கிறது அதிமுக. இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்காகவும் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ஆர்பி உதயகுமார் சில நகர்வை முன்னெடுத்துள்ளார். புது புது அசைன்மென்ட்களும் கொடுத்துள்ளார் எடப்பாடி....

Jun 24, 202517 min

'முருகன் மாநாடு' BJP-க்கு எதிராக Stalin கையிலெடுக்கும் 'ஐயனார் அரசியல்!' | Elangovan Explains

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது முழுமையாக இந்துக்கள் வாக்குகளை அறுவடை செய்து விடும் என நம்பிக்கையோடு லாபக் கணக்கு போடுகிறது பாஜக. அதே நேரத்தில் இந்த மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த காணொளி . அந்த நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார்,கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி , செல்லூர் ராஜு உள்ளிட்டோர். திராவிடத்திலிருந்து நழுவுகிறதா அதிமுக? என கடும் நெருக்கடியை சந்திக்கும் எடப்பாடி. அதே நேரத...

Jun 24, 202524 min

Amit shah டீமின் 80 தொகுதிகள் லிஸ்ட், EPS-க்கு நெருக்கடி? | Elangovan Explains

ஒரு பக்கம் முருகன் மாநாட்டில் தீவிரமாக இருந்தாலும் தங்களுக்கு ஏதுவான தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர் பாஜகவினர். அந்த வகையில் 80 தொகுதிகளை கையில் எடுத்து, அதில் 50 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு வரை சென்று, பட்டியலை தயார் செய்துள்ளனர். இது தற்போது அமித் ஷா பார்வைக்கும் சென்றுள்ளது. முருகன் மாநாட்டில் கிடைக்கும் வெற்றி, பாஜக மீது திரும்பும் பொதுமக்கள் பார்வை இவையெல்லாம் திமுகவுக்கு அச்சுறுத்தலையும், இன்னொரு பக்கம் எடப்பாடி-யிடம் அதிக தொகுதிகளையும் பெற்று தரும் என டெல்லி கணக்கிடுகிறது. அந்த வகையில் முர...

Jun 21, 202519 min

S P Velumani வழக்கை வைத்து விளையாடும் Senthil Balaji & Ramadoss - Thiruma Alliance?

மாஜி அமைச்சர்களின் Files-களை தூசு தட்டும் மு.க ஸ்டாலின். முதற்கட்டமாக எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.காமராஜ், எஸ்.பி வேலுமணி வழக்குகளை தூசுதட்டுகின்றனர். அதில் முதல் ஹிட்லிஸ்டில் எஸ்.பி வேலுமணி உள்ளார். அவரை எதிர்த்து புதிய ஒரு ஆட்டத்தையும் ஆடத் தொடங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி. ஏனெனில் எஸ்.பி வேலுமணி, அண்ணாமலை, விஜய் என கோவை களம் டஃப்பாக உள்ளது. இதை முறியடித்து வெற்றி பெற புதிய வியூகங்கள் வகுத்துள்ளார் பாலாஜி. இன்னொரு பக்கம், ராமதாஸ் Vs அன்புமணி வார். இதில் அன்புமணியின் கூட்டுப் பிரார்த்தனை-யொட்டி...

Jun 20, 202522 min

டேபிள் நிறைய டேட்டாக்கள், மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains

தொகுதி வாரியாக 'ஒன் & ஒன்' மீட்டிங் நடத்தி வருகிறார் மு.க ஸ்டாலின். ஒவ்வொரு ஒ.செ-வுக்கும் கிட்டத்தட்ட ஆறு நிமிடம் வரை நேரம் கொடுக்கிறார். அதில் மாவட்ட செயலாளர், மந்திரிகள் குறித்தும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் கேட்கிறார். இதில் விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி டேட்டாக்கள் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதையொட்டி அங்கே இருக்கும் கோஷ்டி பூசல்கள் முக்கியமாக பொன்முடி வ்ச் லட்சுமணன் பிரச்சனை. இதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்கிறார். அடுத்து வீக் தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, இதில் உத...

Jun 19, 202523 min

மிட்நைட் விசாரணை, மாட்டிவிட்ட மகேஸ்வரி, திகிலில் பூவை ஜெகன்மூர்த்தி - ஜெயராம்! | Elangovan Explains

சிறுவன் கடத்தல் விவகாரம், இதில் ஏடிஜிபி ஜெயராம் எப்படி சம்மந்தப்பட்டார், யாரந்த மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் அப்பா வனராஜா பின்னணி. முக்கியமாக மகேஸ்வரி மூலமாக ஜெயராம் தொடர்பு எடுத்து அவர் மூலமாக பூவை ஜெகன் மூர்த்தியிடம் பேசி உள்ளனர். அவரும் தனுஷ் அம்மா லட்சுமிமியிடம் தனியார் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளார். இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்றெல்லாம் தகவல் . இதில் மூர்த்தி எப்படி சம்மந்தம், கோர்ட்டில் மற்றும் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள், பூவை-க்கு ஆதரவான வழக்கறிஞர் புளிய...

Jun 18, 202523 min

'Deputy CM' எதிர்பார்க்கும் CV சண்முகம்? எடப்பாடியை வட்டமடிக்கும் வியூகங்கள்! | Elangovan Explains

தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிக்குள்ளும் பல்வேறு களேபரங்கள் நடந்து வருகிறது. இதில் அதிமுகவில் எடப்பாடி-க்கோ, ஒருபக்கம் திமுக, இன்னொருபக்கம் பாஜக கூட்டணி, அடுத்து உட்கட்சி என சில நெருக்கடிகள் உள்ளன. பெரிதாக வெளியே தெரியவில்லை என்றாலும் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கிறது. இதை சரி செய்ய எடப்பாடி வகுக்கும் வியூகங்கள், அவர் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்ஸ், டிப்ஸ், இதில் முக்கியமாக சி.வி சண்முகத்தை துணை முதலைச்சராக்க வேண்டும் என வன்னியர் சங்கங்களிடம் இருந்து வந்திருக்கும் கோரிக்கைகள் என பல பரபரப்புகள். இன்னொ...

Jun 17, 202519 min

Stalin-க்கு நெருக்கடி தரும் Thiruma? Vijay-யுடன், Anbumani டையப்? | Elangovan Explains

'மன்னிச்சிடுங்க ஐயா' என ஓபனாகவே கேட்ட அன்புமணி ஆனாலும் சந்தேகிக்கும் ராமதாஸ். ஒருபக்கம் 123 பேர்களை மாற்றிய ராமதாஸ் இன்னொரு பக்கம் அவர் பிறந்தநாளிலேயே நடைபயணம் திட்டமிட்ட அன்புமணி. அட்டாகை, அமைதியாக டீல் செய்யும் அன்புமணி என்பதுமே ராமதாஸின் சந்தேகத்துக்கு வலுவான காரணம் என்கிறார்கள். முக்கியமாக விஜய் பக்கம் கூட்டணிக்கு நெருங்குகிறாரா அன்புமணி? என்னதான் நடக்கிறது பாமக-வில்? இன்னொருபக்கம் 'திருமா-கூட்டணி-உட்கட்சி' என புது பஞ்சாயத்தால் நெருக்கடியில் மு.க ஸ்டாலின். இதை சமாளிக்கவே புது ரூட் எடுத்துள்ள...

Jun 16, 202518 min

இரண்டு சிக்கல்கள், சமாளிப்பாரா Senthil Balaji, Annamalai-யால் EPS ஷாக்? | Elangovan Explains

வீக்காக இருக்கும் மேற்கு மண்டலம். அதை சரி செய்ய புது திட்டங்களை வகுத்திருக்கும் ஸ்டாலின். முக்கியமாக இரண்டு நெருக்கடிகள், அதை சமாளிப்பாரா செந்தில் பாலாஜி? மற்றொருபுறம், 'உடன்பிறப்பே வா' என தொகுதிவாரியாக ஒன் டு ஒன் சந்திக்க தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். அதாவது ஒரு பக்கம் எடப்பாடி, மறுபக்கம் அமித்ஷா. இரட்டை அட்டாக். இவர்களை முறியடிக்க மூன்று ரூட். அதன் மூலமாக அந்த ஒற்றை மிஷனை சக்சஸ் ஆக்கிவிடலாம் என்பது ஸ்டாலினின் நம்பிக்கை. இதற்காகவே புது வியூகத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். வொர்க்அவுட் ஆகுமா ஸ்டால...

Jun 13, 202516 min

Sowmiya-யை அட்டாக் செய்யும் Ramadoss, 3 ஆண்டு ப்ளாஷ்பேக், Anbumani ஷாக்! | Elangovan Explains

இன்று ஜூன் 12ஆம் தேதி வியாழக்கிழமை பிரஸ்மீட்டை நடத்தியுள்ளார் பாமக ராமதாஸ். 'கூட்டணியை நானே முடிவு செய்வேன். 2026 வரை நான் தான் தலைவர். பலர் சமாதானத்திற்காக பஞ்சாயத்து செய்தார்கள் ஆனால் ஆட்டம் டிராவில் முடிந்துவிட்டது. எங்கள் வீட்டில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என தெரிவித்தேன் ஆனால் மீறி வந்தார் சௌமியா. கட்சிக்காக உழைக்கத் தெரியாதவர் அன்புமணி. என்னை குல சாமி என்றபடியே நெஞ்சில் குத்தி விட்டார். என்னை நடைப்பிணமாக்கிவிட்டு இன்று நடைபயணம் போகிறார்' என அடுக்கடுக்காத அட்டாக் செய்துள்ளார் ...

Jun 12, 202518 min

Vaiko-வுக்கு வலை விரிக்கும் Nainar, தலைவலியில் Stalin? | Elangovan Explains

'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா பேசியதற்கு பெரிய ரியாக்‌ஷன் வேண்டாம் என தெரிவித்துள்ளார் எடப்பாடி. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி கொடுத்த பதில் பேசுபொருளாக மாறியுள்ளது. இன்னொரு பக்கம் கூட்டணி மட்டுமல்ல, உட்கட்சியிலும் ஆயிரதெட்டு பிரச்சினைகள். நயினார் Vs அண்ணாமலை கோல்ட் வார் உச்சத்தை தொட்டுள்ளது. எல்லாமே அமித் ஷா டேபிளுக்கு போயுள்ளது என்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள். இன்னொரு பக்கம், திருமா, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்ப்பார்க்கிறார்கள். இது ஸ்டாலினுக்கு புது தலைவலி என்கிறார்கள். இந...

Jun 11, 202520 min

Anbumani-க்கு அரசியல் வெடி, Amit shah-க்கு மட்டும் ஸ்வீட், Ramadoss ஆடும் கேம்! | Elangovan Explains

மூன்று எக்ஸ் எம்.எல்.ஏ-க்கள் உட்பட ஆறு பேர்கள் த.வெ.க-வில் இணைந்துள்ளனர். அடுத்த கட்டமாக மூன்று மாதங்களுக்கான வொர்க் ப்ளான் போட்டுள்ளார் விஜய். ஜூன் 22 -லிருந்து திமுகவை டார்கெட் செய்து பயணத்தை தொடங்க உள்ளார் என்கிறார்கள். விஜயின் திட்டம் என்ன ?இன்னொரு பக்கம், ராமதாஸ் Vs அன்புமணி வார். அதில் இருவராலும் சமாதான குழுவினர் படும் பாடு. முக்கியமாக டெல்லி தலைவலியாக உணர்கிறது ஆனாலும் அமித் ஷா-வுக்கு இனிப்பு மெசேஜை தட்டி விட்டுள்ளார் ராமதாஸ் என்கிறார்கள்.

Jun 10, 202519 min

மதுரையை மையமிடும் Amit shah, எதிர்பார்ப்பில் EPS, ஷாக் தரும் Stalin! | Elangovan Explains

அமித்ஷாவின் மதுரை விசிட், தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய புதிய அசைன்மென்ட் என முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி சம்பந்தமாக புதிய ஹின்ட் கொடுத்துள்ளார் ராமதாஸ். நம்பிக்கையோடு உள்ளது பாஜக. அதே நேரத்தில், பாஜக முன்னெடுக்கும் ஆன்மீக மாநாடு உள்ளிட்ட அடுத்தடுத்த அஜெண்டாக்களை, தொகுதி மறு வரையறை அஸ்திரம் மூலமாக பதிலடியாக ஏவுகிறார் மு.க ஸ்டாலின். இங்கே பாஜகவுக்கு துணையாக எடப்பாடி உள்ளார் என்றும் துணை கனைகளையும் வீசுகிறார். இதையொட்டி, அதிமுக தரப்பில் இருந்தும் பதிலடிகள...

Jun 08, 202520 min

Amit shah குறித்து கொடுத்த 76 தொகுதிகள், EPS-க்கு ஷாக்? | Elangovan Explains

இரு நாட்கள் முன்பு ராமதாஸை சந்தித்தார் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன். பலரை கட்சியில் இணைத்து தம்மை பலமாக மாற்றி, அன்புமணியை ஓரங்கட்ட திட்டமிடலாம் என 'டெல்லி'-யும் எச்சரித்தது. அதன் பிற்பாடே பதறியடித்து தைலாபுரம் பறந்தார் அன்புமணி என்கிறார்கள். இன்னொரு பக்கம் மதுரையில் 'முருகன் மாநாடு' நடக்கவுள்ளது. இதை வைத்தும், ஒரு 5 முக்கியமான திட்டங்களும் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக முன்னெடுக்க உள்ளார் நயினார். இதன் முன்னோட்டமாகவும், அமித் ஷா-வின் 'மதுரை விசிட்' இருக்கும் என்கிறார்கள் கமல...

Jun 06, 202517 min

Amit shah-வின் அசைன்மென்ட், ஆஜரான Auditor Gurumoorthy, தைலாபுரம் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமதாஸை சந்தித்து, சுமார் 45 நிமிடங்கள் உரையாடியுள்ளார் அன்புமணி. கட்சி, சொத்து விவகாரம் பேசப்பட்டது. 3 டிமாண்டுகளை ராமதாஸ் முன்வைத்தார் என்கிறார்கள். இன்னொருபக்கம் ஆடிட்டர் குருமூர்த்தி & சைதை துரைசாமி ஆகியோர், தைலாபுரத்தில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக , ராமதாஸிடம் உரையாடியுள்ளனர். அமித் ஷா மதுரைக்கு வரும்போது, பாமக கூட்டணி உறுதியாகிவிட வேண்டும் என்பதற்கான மீட்டிங் என்றும் தகவல். இதில், உள்ளே இருந்து ஆடிட்டர் யாருக்கோ போன் போட்டுக் கொடுக்க, அதற்குப்பின் ராமதாஸ் ...

Jun 05, 202517 min
For the best experience, listen in Metacast app for iOS or Android