கமலின் 'Thug Life' பிரச்சனை. இதில் ஸ்டாலின் ஏன் மௌனமாக இருக்கிறார்? என கேள்விகள். அதற்கு முக்கியமான காரணம் உள்ளது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். இன்னொரு பக்கம், அமித் ஷா, எடப்பாடி, விஜய் என மூவர் தரும் நெருக்கடிகளை சமாளிக்க 'ஆபரேஷன் 3' என்கிற புது அசைன்மென்டை கையில் எடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். மண்டலங்களுக்கு ஒரு ரூட் பிளான். கோவையைப் பொறுத்தவரை ஆறு வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். முக்கியமாக 'செந்தில் பாலாஜி - எஸ்.பி வேலுமணி' எதிரெதிராக இருக்கும் இருவருமே,புது டீல் போட்டுள்ளனர் என்றும் ஒர...
Jun 04, 2025•21 min
ராமதாஸ் வழியை ஃபாலோ செய்யும் பிரேமலதா என்கிறார்கள். ஏனெனில் திமுக-வை பாராட்ட தொடங்கியுள்ளார். கலைஞர் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதையொட்டி தேமுதிக-வை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை. பின்னணியில் 'ஸ்டாலினின் சீக்ரெட் சப்போர்ட்' இருக்கலாம் என எடப்பாடி டவுட். இன்னொரு பக்கம், ராமதாசை கட்சியை விட்டு நீக்க அன்புமணி திட்டமிட்டு கொண்டுள்ளார். பெரியவரும் பதிலடி ஆக்ஷனில் இறங்கப் போகிறார் என்கிறார்கள். இதில் அன்புமணிக்கு டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் ...
Jun 03, 2025•17 min
ராமதாஸுக்கு எதிராக அன்புமணி போட்டிருக்கும் மூன்று நாள் மீட்டிங். அதில் குவிந்த மாவட்ட செயலாளர்கள். இது ராமதாஸை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுப்பயணம், பொதுக்குழு என வேகம் காட்டத் துடிக்கும் அன்புமணி. இதற்கு பதிலடியாக, நீதி கேட்பது போல, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராமதாஸ் திட்டம். 'அப்பா - மகன்' சண்டையை சமாதானம் செய்து வைக்க, குடும்பத்தினரும், பாமக மூத்த தலைவர்களும் முயற்சித்தாலும், இதுவரை ஃபெயிலியர் தான். என்னாகப் போகிறது பாமக? இன்னொரு பக்கம், இரண்டு ராஜ்யசபா சீட்...
May 30, 2025•18 min
Vijay-க்கு வேட்டு வைக்கும் Stalin மூவ் 3, EPS-க்கு தலைவலி தரும் Premalatha?! | Elangovan Explains
May 30, 2025•20 min
'தாயையே பாட்டில் வீசி தாக்க பார்த்தவர், என் சத்தியத்தை மீறி 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கியதுதான், நான் செய்த தவறு, ஆளுயர கண்ணாடியை உடைத்த அன்புமணி...' என நான் ஸ்டாப் அட்டாக் செய்துள்ளார் ராமதாஸ். இன்றைக்கு மே 29ஆம் தேதி பத்திரிகையாளர்களிடம் அன்புமணி பற்றி பேசிய பலவும் பகீரூட்டுகின்றன. அதிர்ச்சி விலகாமல் உள்ளனர் பாமக-வினர். இன்னொரு பக்கம், ராஜினாமா செய்துள்ளார் முகுந்தன். ஏன் அன்புமணியை அட்டாக் செய்கிறார் ராமதாஸ்? அன்புமணி ஏற்படுத்திய காயங்கள் என்ன? உடையும் அபாயத்தில் உள்ளதா பாமக? இதற்கு பின்னண...
May 29, 2025•19 min
தமிழ்நாட்டில் அடுத்த ஓராண்டு திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்க, பவன் கல்யாணை களம் இறக்கும் பாஜக. அமித்ஷா வகுத்து கொடுத்திருக்கிற வியூகங்கள். இதை முறியடிக்க எ.வ வேலுவுக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கும் ஸ்டாலின். உதயநிதி மூலம் மேற்பார்வையும் நடக்கிறது. இன்னொரு பக்கம் அடுத்த தேர்தலில் சீனியர்கள் சிலருக்கு சீட் கட் என தகவல்கள் அதனால் தன்னுடைய தொகுதி பறிபோய்விடுமோ என்கிற பதற்றத்தில் பொன்முடி. அதே நேரத்தில், அவரின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இப்போதே ரேஸ் தொடங்கிவிட்டது. முன்னணியில் அவருடைய மகன் கவுதம்...
May 28, 2025•16 min
தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா சீட் காலியாக போகிறது. இதைக் குறி வைத்து திமுக - அதிமுகவுக்குள் போட்டா போட்டி நிலவுகிறது. 'கமலுக்கா... வைகோவுக்கா..?' என பெரிய யுத்தமே திமுக கூட்டணியில் நடக்கிறது. இன்னொரு பக்கம் ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா, விந்தியா என அதிமுகவுக்குள்ளும் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். யாருக்கு சீட்டை ஒதுக்குவது என நெருக்கடியில் உள்ளாரா எடப்பாடி. ஒற்றை ராஜ்யசபா சீட்டு எதிர்பார்த்து அன்புமணியும் பிரேமலதாவும் காய் நகர்த்துகிறார்கள். இன்னொரு பக்கம் 'மிஷன் தமிழ்நாடு' என்கிற திட்டத்தோடு,...
May 27, 2025•19 min
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்ததால், மு.க ஸ்டாலின் மோடியிடம் சரண் அடைந்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 'இல்லை இது சவால்' என்கின்றனர் திமுக-வினர். டெல்லி கூட்டத்தில் பங்கேற்றதன் பின்னணியில் சில பல நெருக்கடிகள் இருக்கின்றன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் டார்கெட் செய்யப்படுகிறார் என்றும் விமர்சனங்கள் வருகிறது. அதே நேரத்தில், 'டெல்லி, எடப்பாடி, விஜய்' என புதுப்புது நெருக்கடிகள் வருவதாலும், இதை தவிர்க்க, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள...
May 26, 2025•18 min
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வரை பயணம் செய்துள்ளார் மு.க ஸ்டாலின். அதே நேரம் இது பயத்தின் பயணம் என விமர்சிக்கிறார் எடப்பாடி. குறிப்பாக இந்த நான்காண்டு ஆட்சியில் 5 முக்கியமான பிரச்சனைகளை பட்டியலிடுகிறார் எடப்பாடி. அதே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டவைகளை சாதனைகளாக பட்டியலிடுகிறார் மு.க ஸ்டாலின். உண்மையில் இந்த நான்காண்டு ஆட்சியில் சாதித்தது என்ன? அதே நேரம் வேதனைகளாக வரிசை கட்டி நிற்பது என்ன? முழுமையான அலசல் இந்த காணொளி.
May 24, 2025•22 min
'ராமதாஸ் - அன்புமணி'-க்கு இடையிலான போர் தொடர்ந்தபடியே உள்ளது. இதில் லேட்டஸ்டாக சில டிமேண்ட்களை வைத்த அன்புமணி. அப்பாவுடனான இந்த டீல், என்ன ஆனது?. இன்னொரு பக்கம், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தி.மு.க-வை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்து இருக்கும் நயினார் நாகேந்திரன். இதற்கு ஆறு மாத கால அஜெண்டாவை வகுத்துக் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இதை வேகமாக முன்னெடுக்கும் நேரத்தில், சில தடைகள் அண்ணாமலையால் ஏற்படுகிறது. இதனால் கொதிக்கும் நயினார். பிற்பாடு டெல்லி வரை தகவல்கள் போக, தற்போது அம...
May 23, 2025•23 min
துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தமாக இடைக்கால தடை உத்தரவு போட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதை வைத்து திமுகவுக்கு செக் என கொண்டாடத் தொடங்கியது பாஜக மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி டீம் ஆனால் அமலாக்கத்துறையின் டாஸ்மாக் சோதனைக்கு, இடைக்கால தடை உத்தரவு போட்டு, 5 குட்டு வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பிஜேபிக்கு சுப்ரீம் கோர்ட் தந்த ஷாக் என திமுக கொண்டாடத் தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் நிம்மதி பெருமூச்சு விடும் உதயநிதி. அப்செட் எடப்பாடி. காரணம் உதயநிதியை அதிமுக டார்கெட் செய்ய, பதிலடியாக எடப்பாடி வாரிசு ...
May 22, 2025•18 min
'வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா...' என சீண்டிய எடப்பாடி. ' இது உரிமை கொடி' என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார். இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின். முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட்டது. துரை சந்திரசேகரன் தொட்டு நீலமேகம் வரை பலர் போட்டியில் உள்ளனர். மண்டல பொறுப்பாளர் மீட்டிங்கில் வெளிப்படவில்லை எ...
May 21, 2025•22 min
சமீபத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் சசிகலா. இன்னொரு பக்கம், கொடநாட்டில் 'ஜெயலலிதா மணிமண்டபம்' கட்ட வேண்டும் என்பதை கையில் எடுத்துள்ளார். இதற்கடுத்து தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளை சந்தித்து பேச உள்ளார். தீவிர சுற்று பயணம் மேற்கொள்ளவும் பிளான்கள் வகுத்துள்ளார். இந்த நகர்வுகளுக்கு பின்னால், எடப்பாடியை வழிக்குக் கொண்டு வரும் திட்டம் உள்ளது என்கிறார்கள். இதற்கு சூத்திரம் வகுத்துக் கொடுத்தது டெல்லி தான். மீடியேட...
May 20, 2025•19 min
அதிமுக,பாஜக, விசாரணை அமைப்புகள் என வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள். இதை சமாளிக்க உட் கட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தையும், தொகுதியையும் வலுப்படுத்த மண்டல பொறுப்பாளர்களை உருவாக்கிய மு.க ஸ்டாலின். 'மிஷன் 200' என்கிற டார்கெட்டை நோக்கி ஒவ்வொரு மாவட்டங்களாக செல்ல, அங்கே ஆயிரமாயிரம் சிக்கல்கள். 'இப்படி ஒரு மாவட்டத்தை நான் பார்த்ததே இல்லை' என கொதிக்கும் கே.என் நேரு. நயினாருடன் நெருக்கமான நட்பில் நெல்லை திமுக. 'மன்னிப்பை நானே கேட்கிறேன்' எனும் ஆ.ராசா.இப்போதே தொகுதியை எதிர்பார்க்கும் பட்டுக்கோட்டை ரேஸ் ...
May 19, 2025•20 min
'ராமதாஸ் - அன்புமணி' இடையிலான மோதலில், சமரச முயற்சியில் இறங்கி இருக்கும் ஜி கே மணி. இதில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனக்கே ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை காட்டி, அன்புமணியை ஓரம் கட்ட திட்டமிட்டு இருந்தார் ராமதாஸ். இதை புரிந்து கொண்டு, ராமதாஸை ஓரங்கட்ட, தனக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதை அன்புமணி உணர்த்தும் விதமாக ஆப்சன்ட் ஆகியுள்ளார். இரண்டு பேரும் விடாப்பிடியாக இருக்க, 'இரட்டை பாமக' உருவாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருக்கும் தொண்டர்கள். இன்னொரு பக்கம், விஜய்யுடன் கூட்டணி ...
May 17, 2025•18 min
பாமகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை, தைலாபுரத்தில் கூட்டினார் ராமதாஸ் ஆனால் 108 பேரில் வெறும் பதினோரு பேர் மட்டுமே ப்ரெசென்ட். அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் ஆப்சென்ட். பின்னணியில் 'ராமதாஸ் - சௌமியா அன்புமணி' இடையிலான குடும்ப மோதலும், அன்புமணி க்கு மாநாட்டில் ராமதாஸ் பாடம் எடுத்ததும் காரணம் என்கிறார்கள். இதற்கிடையே ஜூலை 25ஆம் தேதி வரை கெடு வைத்துள்ளார் ராமதாஸ். இன்னொரு பக்கம், இதே போல மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வேகம் எடுத்துள்ளார் விஜய். கூட்டணி சம்பந்தமாக அவர் முன்பு நான்கு ஆப்சன்கள் இருக்க,...
May 16, 2025•21 min
அதிமுகவுக்கு வீக்காக உள்ளது தென்தமிழ்நாடு. இதை சரிகட்ட, தென் மாவட்டங்களை பாஜகவுக்கு ஒதுக்கி, வெற்றி பெற்றுவிடலாம். மேற்கு மண்டலத்தை அதிமுக மூலம் வெல்லலாம் என்பது கணக்கு ஆனால் ஒட்டுமொத்தமாக தென்னகத்தை, பாஜக பக்கம் தள்ளிவிடுவது, அதிமுக எதிர்காலத்திற்கு ஆபத்து மேலும் அதிமுக கூட்டணியால் தங்களை வலுப்படுத்திக் கொள்கிறது பாஜக. அதே நேரம் பாஜக கூட்டணியால், அதிமுகவுக்கு நன்மைகள் குறைவு. பாஜக வளர நாம் மேடை அமைத்து தருவதா? என குமுகின்றனர் தென் தமிழ்நாடு அதிமுக சீனியர்கள். என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?...
May 15, 2025•17 min
பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்பது பேருக்கு, 'சாகும் வரை சிறை' என்ற தீர்ப்பை கொடுத்து உள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். இதை வைத்து, 'இந்த வெற்றி எங்களால்தான் வந்தது' என மு.க ஸ்டாலின் Vs எடப்பாடி இடையே பெரும் போர். எடப்பாடிக்கு எதிராக அடுத்த கட்டமாக, கொடநாடு அஸ்திரத்தை ஏவும் ஸ்டாலின். இன்னொரு பக்கம், 234 தொகுதிகளுக்கும் 7 மண்டல பொறுப்பாளர்களை நியமத்துள்ளார் ஸ்டாலின். வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி பசை பார்சல் வரை வேலைகளை தொடங்கிவிட்ட ஏழு பேர். அவர்களுக்கு கொடுக்கப...
May 14, 2025•20 min
பாமகவின் மாமல்லபுரம் மாநாட்டில் நான்கு முக்கியமான அம்சங்களை முன்வைத்து பேசினார் ராமதாஸ் மற்றும் அன்புமணி. இந்த மாநாட்டிலும், வெளிப்பட்ட அப்பா மகனுக்கிடையிலான மெல்லிய வார். இதில் சிலருக்கு வார்னிங்கும் கொடுத்திருந்தார் ராமதாஸ். ஏன்? அவர் முன்பு இருக்கக்கூடிய ஐந்து நெருக்கடிகளை, சமாளிக்குமா மாநாட்டில் திசை காட்டப்பட்ட வியூகங்கள்? இன்னொரு பக்கம், எடப்பாடியின் 71- வது பிறந்தநாள். இதையொட்டி ஐந்து சவால்களும், அதை வெல்ல வகுத்திருக்கும் வியூகங்களும்.
May 12, 2025•19 min
'ஆபரேஷன் சிந்தூர்' ஏன் நடந்தது? அந்த பெயர் எப்படி வந்தது? இன்னொரு பக்கம், நான்காண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது திமுக. '2026'-ல் வெற்றி பெற, ஐந்தாம் ஆண்டில் சில வியூகங்களை வகுத்துள்ளன. அதை விரைவாக அடையவிடாமல் தடை போடும் வகையில் சில உட்கட்சி பிரச்சினைகள் உள்ளன. முக்கியமாக, ஒவ்வொரு மாவட்டங்களையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம், திமுக தலைமைக்கு உள்ளது. அந்த வகையில் விடுபட்ட மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின். இதில்தான் சீனியர் அமைச்சர்களான கே.என் நேரு, எ.வ...
May 07, 2025•21 min
'ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது' என எடப்பாடியை டார்கெட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ். பின்னணியில் 'அதிமுக & திமுக' இரண்டு கட்சிகளிடமும், சில டிமாண்ட் பாலிடிக்ஸை முன் வைக்கிறார். '40 சீட்டுகள்' எதிர்பார்க்கிறார்கள் என்றும் தகவல். இன்னொரு பக்கம், ஐந்து முக்கியமான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் ஜே.பி நட்டா. இதை முறியடிக்க, இரண்டு அஜெண்டாக்களை கையில் எடுத்த மு.க ஸ்டாலின் மேலும் இரண்டு முக்கிய டாஸ்க்குகளை உதயநிதியிடமும் ஒப்படைத்துள்ளார். 'பாஜக V திமுக' வாரில் வெல்லப்போவது யா...
May 05, 2025•21 min
அதிமுக செயற்குழு கூட்டத்தில், நான்கு முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளார் எடப்பாடி. குறிப்பாக 'மிஷன் 1200' என்ற அசைன்மென்டை ர.ர-க்களுக்கு கொடுத்துள்ளார். ஜெ பாணி அரசியலை தீவிரப்படுத்த உள்ளார் என்கிறார்கள். அதேநேரத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 'ஃபார்முலா 1244' என்பதை கொடுத்து, நான்கு கட்டளைகளையும் போட்டுள்ளார் மு.க ஸ்டாலின். புது வொர்க் பிளானையும் வகுத்துக் கொடுத்துள்ளார். '2026' தேர்தலையொட்டி வேகம் எடுக்கிறது திமுக Vs அதிமுக வார். இன்னொரு பக்கம், செங்கோட்டையனின் புது சபதமும், அன்ப...
May 03, 2025•21 min
எடப்பாடியோடு நெருங்கும் டிடிவி...எதிர்ப்பு காட்டாத அதிமுக என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் எடப்பாடிக்கு, மாஜிக்கள் கொடுத்த சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் உள்ளது. 5 விஷயங்கள் ஷாக் கொடுத்துள்ளன. இதை களைய , அமமுக-வுடன் நட்பு பாராட்டுவது தவறில்லை என கருதுகிறார்கள். இதில் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்த, நயினார் நாகேந்திரன் எடுத்த முயற்சிகளும் உள்ளன. இந்த அசைன்மென்ட் கொடுத்தது அமித் ஷா என்கிறார்கள்.
May 02, 2025•17 min
தேமுதிக இளைஞரணி பொறுப்புக்கு வந்திருக்கும் விஜய பிரபாகரன். இதன் பின்னணியில் பிரேமலதாவின் மூன்று முக்கியமான மூவ். டெல்லிக்கு பறந்த நயினார் நாகேந்திரன் அங்கே மோடியிடம் கொடுத்த முக்கிய டாக்குமெண்ட்ஸ். இன்னொரு பக்கம் நயினாருக்கு ஆசி கொடுத்த ஆர்எஸ்எஸ். ஏன்? இங்கே திமுகவுக்குள் '2.0' நோக்கிய பயணம். அதை அடைவதற்கு முன்பாக நிறைய சிக்கல்களும் தலைகாட்ட தொடங்கியுள்ளன. முக்கியமாக ஐந்து பஞ்சாயத்துகள். அதில் முக்கியமாக வீக் மாவட்டங்கள், உட்கட்சியில் சீனியர்கள் - ஜூனியர்கள் மோதல், இளைஞர் அணியை கண்டு கொள்ளாத மாவ...
Apr 30, 2025•22 min
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி. இதை கொண்டாடும் எடப்பாடி & அமித்ஷா டீம். இதில், 'துரைமுருகன்,திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என அடுத்த ஹிட் லிஸ்டில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களை நெருக்குவதன் மூலம், மு.க ஸ்டாலின் அரசை சாய்த்து விடலாம் என்பது அதிமுக - பாஜக கூட்டணி கணக்கு. இந்த நெருக்கடிகளை சமாளிக்,க புது வியூகங்களை நோக்கி நகரும் மு.க ஸ்டாலின். அதை முறியடிக்க 'ரைமிங் ரோஸ்ட்' அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி. இவர்கள் ...
Apr 29, 2025•18 min
'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எதனால் ராஜினாமா செய்தார்கள்? முக்கியமாக முரண்டு பிடித்த பொன்முடி... வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின். ஏன்? இன்னொரு பக்கம், நால்வரை ஸ்டாலின் டிக் அடித்ததற்கு பின்னணியில், சில அரசியல் கணக்குகளும் உள்ளது. இதில் தமது ஸ்மார்ட் மூவ் மூலம் உள்ளே வந்த எஸ்.எஸ் சிவசங்கர்.இதில், இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா...
Apr 28, 2025•24 min
அடுத்த சட்டமன்றத் தேர்தல், உதயநிதி ஸ்டாலினுக்குமான ஒரு பரீட்சை என்கிறார்கள் தி.மு.க-வினர். கட்சியை கரை சேர்ப்பது மட்டுமில்லாமல், 'டார்கெட் 200' - ஐ சக்சஸாக்க வேண்டும் ஆனால் கூட்டணி, அமைச்சர்கள், உட்கட்சி பிரச்சனைகள் என '13' - க்கும் மேற்பட்ட சிக்கல்கள், ஷாக் கொடுக்கின்றன. அதை முறியடிக்க புதிய திட்டங்களையும் கையில் எடுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினிடம், இரண்டு டிமாண்டுகளை முன்வைத்த வைகோ. அடுத்து, பா.ஜ.க-வுக்காக சீமானிடம் டீல் பேசிய ஓ.பி.எஸ். அவர்களின் கணக்கு என்ன? இ...
Apr 26, 2025•18 min
அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு, திடீரென தடபுடல் விருந்து வைத்துள்ளார் எடப்பாடி. அவர்களுக்கு பெரியளவில் பரிசு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் பெரிய அளவிலான 'இனிப்பு மூட்டைகள்' இதற்குப் பின்னணியில் கூவத்தூர் சென்டிமென்ட் உள்ளது என்கிறார்கள். அடுத்து, மாவட்ட செயலாளர்களுக்கும் புதுப்புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அவர் முன்பு உள்ள சவால்களை சமாளித்து, சக்சஸ் கொடுக்குமா இந்த கூவத்தூர் ஃபார்முலா? இன்னொரு பக்கம், போட்டி மாநாடு நடத்தி, அப்செட்டில் இருக்கும் ஆளுநர் ஆர்.ன் ரவி. 'அவரால்தான் ஆறுதலே' என வேறு கோ...
Apr 25, 2025•19 min
'துரைமுருகன், கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி' என நான்கு பேரை டார்கெட் செய்யும் 'எடப்பாடி - நயினார் நாகேந்திரன்' டீம். நால்வருக்கும் இருக்கின்ற வழக்கு சிக்கல், நீதிமன்றம் டபோட்டிருக்கும் செக் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதை கையில் எடுத்து அட்டாக் செய்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க. இதன் மூலம் மு.க ஸ்டாலினுக்கு நெருக்கடி தருவது, அமித்ஷா போட்டுக் கொடுத்திருக்கிற வொர்க் பிளான். இதை சமாளிக்க,எங்கள் மு.க ஸ்டாலினிடம், பக்கா பிளான் உள்ளது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.
Apr 24, 2025•20 min
காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தாக்குதல். உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த அமித் ஷா. அவர் கொடுத்த உத்தரவாதம். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு அரசியலில், நீதிமன்றம் தந்த உத்தரவு, அமலாக்கத்துறைக்கு பூஸ்டாக அமைந்துள்ளதால், சிக்கலில் செந்தில் பாலாஜி. அடுத்து, பி.டி.ஆர் ஓபனாக அட்வைஸ் செய்த ஸ்டாலின். பின்னணியில் , பி.டிஆர்-க்கு எதிராக காய்நகர்த்திய சில அமைச்சர்கள். முக்கியமாக, டி.ஆர்.பி ராஜா டீம் வருத்தத்தில் உள்ளதாகவும் தகவல்.
Apr 23, 2025•21 min