The Political Pulse | Hello vikatan - podcast cover

The Political Pulse | Hello vikatan

Hello Vikatanhubhopper.com
The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

'50 தொகுதிகள்' EPS கையில் பட்டியல், வொர்க்அவுட் ஆகுமா புது Work Plan?! | Elangovan Explains

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புதுப் புது திட்டங்களை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி. அந்த வகையில், '50 தொகுதிகளை' பட்டியலிட்டு, முதற்கட்டமாக அந்த தொகுதிகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு, புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் 'டாஸ்மாக் முறைகேடு புகார், 5000 கோடி ஊழல் முறைகேடு' என ஆளும் திமுக அட்டாக் அரசியலையும் தீவிரப்படுத்தியுள்ளார். வொர்க் அவுட் ஆகுமா எடப்பாடி-யின் புது Formula?

Apr 22, 202521 min

PTR வேதனை, பின்னணி இதுதான், R.N Ravi-க்கு, Stalin நியூ செக்! | Elangovan Explains

'போதிய நிதி ஒதுக்கவில்லை' என வருத்தப்பட்ட பி.டி.ஆர். பின்னணியில் சில ஆதங்கங்கள் உள்ளன. இதை புரிந்து கொண்டு அவருக்கு எதிராக கொம்பு சீவும் சில சீனியர் அமைச்சர்கள். இன்னொரு பக்கம் கூட்டணி குறித்து தொல் திருமாவளவன் பேசியது ஒருவகையில் திமுக கூட்டணிக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது ஐந்து பின்னணிகளில் இருந்து இவ்வாறு பேசி உள்ளார் என்கிறார்கள் இதை வேறு வகையில் சமாளிக்கும் மு.க ஸ்டாலின். அடுத்து, போட்டி மாநாடு நடத்தும் ஆளுநர் ஆர்.என் ரவி. இதை பாசிட்டிவாக பார்க்கும் முதலமைச்சர். இதன் தொடர்ச்சியாக, 'இணை...

Apr 21, 202520 min

Vaiko-வுக்கு செக் வைக்கும் மகன் Durai vaiko? DMK கூட்டணியில் Seat Sharing Talk?! | Elangovan Explains

'முதன்மைச் செயலர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என ஷாக் கொடுத்துள்ளார் மதிமுக துரை வைகோ. பின்னணியில் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா-வுடனான மோதல் என்கிறார்கள். ஏப்ரல் 20 ஆம் தேதி, நாளை நிர்வாக குழு கூட்டம் கூட இருக்கும் நிலையில், இது பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்கூட்டியே இன்று அவசர அவசர ஆலோசனைக் கூட்டமும் அரங்கேறியது. கடந்த சில ஆண்டுகளாகவே துரை வைகோ மீது நிறைய அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் மல்லை சத்யா. அதே நேரத்தில் மல்லை சத்யாவின் தன்னிச்சையான செயல...

Apr 19, 202520 min

ஹிட்லிஸ்டில் 3 அமைச்சர்கள்...மீண்டும் மாற்றம்? STALIN Warning! | Elangovan Explns

'மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும்' என 'டார்கெட் 200' என்கிற கனவோடு பயணிக்கிறார் மு.க ஸ்டாலின் ஆனால் அந்தக் கனவை சிதைக்கும் வகையில் 7 வேட்டுகள் ஷாக் கொடுக்கிறது. முக்கியமாக கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி என மூன்று அமைச்சர்களை டார்கெட் செய்யும் எடப்பாடி & பாஜக. இதில் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தால் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து. இதையொட்டியும் அமைச்சரவை மீட்டிங் நடந்துள்ளது. 'பேச்சில் கவனம் தேவை' என அட்வைஸ் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், சாதி ஆணவ படுகொலைகள், சட்டம்...

Apr 18, 202523 min

'Vijay'-யை காட்டி கேம் ஆட துடித்த BJP, சுதாரித்த EPS?! | Elangovan Explains

'எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி இல்லை. கூட்டணி மட்டுமே' என்று எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். நேற்று எடப்பாடி தெரிவித்திருக்கும் நிலையில் இன்று இவர் இவ்வாறு சொல்ல, இதன் பின்னணி என்ன? பாஜக தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சிக்கான சில நகர்வுகளை தீவிர படுத்தியுள்ளனர். குறிப்பாக முதன்முதலில் அதிமுக-விடம் டிமாண்ட் வைத்த விஜய். ஒரு புதிய கட்சியை சார்ந்தவரே துணை முதலமைச்சர் பதவி வரை கேட்க, மூன்று முறை சென்ட்ரலில் ஆட்சி புரியும் நாம் ஏன் அமைச்சரவையில் பங்கு கேட்கக் கூடாது? என பாஜக ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். ...

Apr 17, 202521 min

'EPS தட்டிவிட்ட மெசேஜ், Amit shah ஷாக்? டெல்லி டார்கெட் '50!' | Elangovan Explains

'கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை கூட்டணி என்று மட்டுமே சொன்னார் அமித்ஷா' என்று எடப்பாடி இன்று பிரஸ்மீட் கொடுத்துள்ளார். ஏன் இந்த மாற்றம்? சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் அமித்ஷா ஆலோசனையில் இருந்தபோது, ஃபோன் கால் மூலம் எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது 'ஐந்து டிமாண்டுகளை' முன் வைத்தார் அதை, அமித்ஷா அக்சப்ட் செய்து கொண்டார். அதன் பிற்பாடு தான் கூட்டணி உறுதியானது. அதற்கடுத்து, தொகுதி பங்கீடு சம்பந்தமாக டாப் லெவல் லீடர்ஸ்-களுடன், பேச்சுவார்த்தையும், ஒரு பக்கம் நடந்து ...

Apr 16, 202519 min

'மாநில சுயாட்சி' Amit shah-க்கு ஷாக் தரும் Stalin! பின்னணியில் 3 எதிர்கட்சிகள்! | Elangovan Explains

'மாநில சுயாட்சி'- க்காக, சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளார் மு.க ஸ்டாலின். திடீரென இந்த அஸ்திரத்தை கையில் எடுத்ததற்கு பின்னணியில், 'அமித்ஷா - எடப்பாடி கூட்டணி' அரசியலும் உண்டு. இணைந்த கைகளால் மேற்கு மண்டலம், தென் மண்டலம் என பெரிய சேதாரத்தை திமுக சந்திக்கலாம். இன்னொரு பக்கம், விஜய் அரசியலின் மூலம், சிறுபான்மையினர், பெண்கள் வாக்குகளில் பெரிய அடி விழலாம். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும் என்றால் 'டார்கெட் பாஜக' என்ற அரசியலில் கவனம் செலுத்தலாம். அது மற்ற மாநிலங்களில், பாஜகவுக்கு நெருக்கடிகள...

Apr 16, 202523 min

Anbumani மீது Ramadoss டவுட், அவசர பொதுக்குழு? & Jayakumar-ஐ சுற்றி அனல்! | Elangovan Explains

'பாமகவின் தலைவர் நானே பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டேன்' என்று பதில் அறிக்கையை கொடுத்த அன்புமணி. இதில் கோபத்தின் உச்சத்துக்கே போன ராமதாஸ், 'எனக்கே அரசியல் பாடம் எடுக்கிறாரா?' என கொதித்துள்ளார். அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை, முக்கியமான நிர்வாகிகளை வரவழைத்து, அன்புமணிக்கு எதிராக கையெழுத்து வாங்கவும் முயற்சித்துள்ளார் ராமதாஸ். அதே நேரம், 'மே 11 வன்னியர் சங்க மாநாடு' நடக்க இருப்பதால், அது வரையிலுமாவது, இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் பெரிதாகாமல் இருக்க, பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது சீனிய...

Apr 15, 202519 min

EPS-ஐ டோட்டல் கன்ட்ரோல் எடுத்த Amit shah, ஒருவகையில் Vijay-ம் காரணம்? | Elangovan Explains

பாஜக கூட்டணிக்கு, அதிமுக ஓகே சொன்னதற்கு, பின்னணியில் பல்வேறு Twist & Turns உள்ளது. இரண்டு துருப்புசீட்டுகள், ஐந்து புல்லட்ஸ் மூலம் எடப்பாடி-யை, வழிக்கு கொண்டு வந்த அமித் ஷா. பின்னணியில் 'மிஷன் தமிழ்நாடு' ஒட்டிய, அமித் ஷா-வின் லாபக் கணக்கு உள்ளது. இதில், துருப்புச் சீட்டில் ஒருவராக விஜய் அரசியலையும் பயன்படுத்தியுள்ளது டெல்லி என்றும் தகவல். அதே நேரத்தில், எடப்பாடி இதை தனது ராஜதந்திரமாக கருதுகிறார். பாஜக கூட்டணியின் மூலம் அவர் போடும் ஐந்து லாபக் கணக்கு. பொலிட்டிகல் பரபரப்பு

Apr 14, 202522 min

Police Station-ல் நடந்த தஞ்சாவூர் பகீர், முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா? | Elangovan Explains

#tnpolice #mkstalin #lawandorder #dmk #elangovanexplains #vikatan தஞ்சாவூரில் நடுக்காவேரி காவல் நிலையத்தில் தினேஷ் என்பவரை பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் சர்மிளா. 'என் தம்பி எந்த தப்பும் செய்யாதவர். அவரை விட்டுடுங்க' என அவருடைய இரண்டு சகோதரிகளும் கெஞ்சியும், கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் விஷம் குடித்துள்ளனர். ' என்ன நாடகமாடுறீங்களா...? செத்தா சாவுங்க' என சாதிய வன்மத்தோடு பேசியுள்ளார் இன்ஸ் சர்மிளா.கிட்டத்தட்ட அரை மணி நேரமாக உயிருக்கு போராட, கடைசியாக அக்கம் பக்கத்தினர் வந்து ...

Apr 12, 202522 min

நயினாருக்கு இனிமேல் தான் சவாலே...அன்புமணி பற்றிய ஷாக் ரிப்போர்ட்! | Elangovan Explains

பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முன்பு இருக்கின்ற ஐந்து முக்கியமான சவால்கள். இன்னொரு பக்கம் செயல் தலைவராக அன்புமணியை Depromote செய்துள்ளார் ராமதாஸ். அதையொட்டி குடும்பத்துக்குள்ளும் பெரும் புகைச்சல்கள். குறிப்பாக அன்புமணி வீட்டில் நடந்த முக்கியமான மீட்டிங் அதில் பெரியவருக்கு எதிராக கருத்து சொல்ல வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமகவின் சட்ட விதிகளின்படி அப்படி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என அன்புமணியிடம் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இப்போதைக்கு வ...

Apr 12, 202518 min

பொன்முடியால் தூக்கம் தொலைத்த STALIN... EPS-ஐ சரிகட்டிய Amit shah! | Elangovan Explains

அமித்ஷாவும் எடப்பாடியும் ஒரே மேடையில் ஏறி அதிமுக -பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 10 இரவில் இருந்து ஏப்ரல் 11 இரவு வரை 24 மணி நேர பரபரப்பு மினிட்ஸ். தொடக்கத்தில் எடப்பாடி முரண்டு பிடிக்க உள்ளே சில கண்டிஷன்ஸ் இருந்தது என்றும் தகவல். அதை அமித்ஷா சரிகட்ட, அட்லாஸ்ட் கூட்டணி உறுதியானது. எடப்பாடியின் அந்த முக்கிய கண்டிஷன் 'அண்ணாமலை-யின் பதவி மாற்றமா?' இன்னொரு பக்கம் மு.க ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்தவராக மாறிப் போயிருக்கும் பொன்முடி. அவருடைய சமீபத்திய அருவருக்கத்தக்க பேச்சு, பெரும் நெருக்கட...

Apr 11, 202516 min

Anbumani பதவியை பறித்த Ramados...சீண்டிய 4 சம்பவங்கள்! | Elangovan Explains

'அன்புமணி இனிமேல் செயல் தலைவராக நீடிப்பார் நானே பாமகவின் தலைவர்' என அதிரடியாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இது பாமகவுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏன் அவர் பதவியை பறித்தார்? பின்னணியில் மருமகன் முகுந்தனுடன் ஏற்பட்ட உரசல், பாஜகவுடன் கூட்டணி, அமித் ஷாவை சந்திக்க முயற்சி என பல காரணங்கள் பேசப்படுகிறது. அதே நேரத்தில் சமீப காலமாக திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுக அரசுக்கு ஆதரவாக சில பதிவுகளையும் போட்ட ராமதாஸ். இதையொட்டி அன்புமணி டீம்க்கு ஏற்பட்ட டவுட். இந்த வகையில் பெரும் புயலாக வீசிக்கொண்டிருக்க...

Apr 10, 202519 min

Edapadi கேட்டதற்காக Amit shah டீம் அட்டம்ப்ட், U-Turn ஆனதா?! | Elangovan Explains

கே என் நேரு அவர் சகோதரர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இ.டி ரெயிடு நடத்தியது. பின்னணியில் எடப்பாடி, அமித்ஷாவிடம் தந்த ஆறு மந்திரிகளுடைய ஃபைல்கள் என்றும் தகவல் . இன்னொரு பக்கம், திமுகவுக்கு எதிராக முழக்கங்களை வைத்து புது பரப்புரையில் ரூட் எடுத்து இருக்கும் எடப்பாடி. அதிரடி... ஆக்சன் ரூட் என்கிறார்கள் அதிமுகவினர். டார்கெட் டெல்லி...சம்பவம் செய்யும் ஸ்டாலின். புதிய திட்டம் வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் நீதிமன்றத்தில்...

Apr 09, 202520 min

R.N Ravi-க்கு பேரிடி தந்த Supreme court...ஸ்கோர் செய்த Stalin...அப்செட் Amit shah? | Elangovan Explains

'ஆளுநர் ஆர்.என் ரவி 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. ஆர்.என் ரவிக்கு பேரிடியாக மாறி உள்ளது. இன்னொரு பக்கம் மகிழ்ச்சியில் மு.க ஸ்டாலின்... அப்செட்டில் அமித்ஷா. குறிப்பாக இந்த தீர்ப்பை, அகில இந்தியளவில் 'திமுக-வின் வெற்றியாக கொண்டு செல்ல ஸ்டாலின் திட்டம். பாஜகவை ஒவ்வொரு மாநிலத்திலும் அம்பலப்படுத்தவும் திட்டம். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக, பாஜக அட்டாக் செய்ய நினைத்த வேளையில், இது எதிர்பார்க்காத பேரிடியாக மாறி உள்ளது. இன்னொரு பக்கம் டாஸ்மாக் வழக்கில், ...

Apr 08, 202521 min

Jayakumar-க்கு, DMK தூண்டில், Modi மூவ், 7 செக் வைக்கும் Stalin! | Elangovan Explains

'பாஜக தலைவர் ரேஸில் நான் இல்லை' என தெரிவித்துள்ளார் அண்ணாமலை. ஓப்பனாக இப்படி சொன்னாலும், உள்ளுக்குள் தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது என பல்வேறு ரூட்டுகளில் முயற்சிகளை எடுத்தும் வருகிறார் ஆனாலும் மாற்ற வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். முக்கியமாக லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ஓர் சர்வே ரிப்போர்ட். அதே நேரத்தில் அதிமுக - அண்ணாமலை இந்த பிரச்சனையை சரி செய்ய நிர்மலா சீதாராமன் மூலம் சில முயற்சிகளையும் எடுத்துள்ளனர். இதற்கிடையே அண்ணாமலைக்கு ஒரு முக்கியமான ஆஃபர் கொடுக்க, அதற்கும் நோ சொல...

Apr 05, 202519 min

'WAQF BILL': EPS சொல்லி அனுப்பிய மெசேஜ்...எதிர்பார்க்காத அமித் ஷா?! | Elangovan Explains

வக்ஃபு சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதற்கு எதிராக மாநிலங்களவையில் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளது அதிமுக. பாஜகவுடன் கூட்டணியில் நெருங்கும் இந்த வேளையில் ஏன் இதை எதிர்க்கின்றனர்? பின்னணியில் எடப்பாடி தட்டிவிட்ட மெசேஜ் உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம் மிட்நைட்டில் கிடைத்த மெசேஜ். ரூட்டை மாற்றி ஏழு மணி நேரத்தில் பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின். இவர்களுக்கு இடையில் நான்கு அஜெண்டாக்களோடு பாஜகவை டார்கெட் செய்யும் விஜய். எல்லோரையும் எப்படி எதிர்கொள்கிறது பாஜ...

Apr 04, 202522 min

Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah...பற்ற வைத்த Annamalai? | Elangovan Explains

அமித்ஷா ஏறக்குறைய கூட்டணியை உறுதிப்படுத்தினாலும், இன்னும் அதை உறுதிப்படுத்தாதவராக இருக்கிறார் எடப்பாடி. பின்னணியில் நான்கு புது டிமாண்ட்களை முன் வைத்துள்ளார். அதே நேரம், 'எடப்பாடி-யை நம்ப வேண்டாம்' என போட்டுடைத்து இருக்கிறார் அண்ணாமலை. இதையொட்டி, அண்ணாமலையே பாஜக தலைவர் பதவியில் நீடிக்க வாய்ப்புகள் அதிகம். இன்னொரு பக்கம் திமுக கூட்டணிக்குள்ளும் குழப்பங்கள். குறிப்பாக சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி சில செக்குகளை வைத்துள்ளது. மதுரை மாநாட்டின் மூலமும் சில சிக்னல்கள் காட்டப்பட்டுள்ளது. இதை சரிகட்டவே, ஸ்டா...

Apr 03, 202518 min

Annamalai-க்கு,Amit shah லாக், 'நயினார் Vs வானதி' அடுத்த தலைவர் யார்? | Elangovan Explains

சமீபத்தில் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தபோது, 'அதிமுகவை எந்த அளவுக்கு மோசமாக பேசியுள்ளார்' என்கிற வீடியோ எவிடன்ஸை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அமித்ஷா, அதன் பிறகே அண்ணாமலையை மாற்றும் ஆக்ஷனிலும் இறங்கினார்.அதிமுக ஆதரவு கிடைக்கும் போது பாஜகவின் வெற்றி எளிது என கணக்கிட்டு தான், அனுசரித்து செல்கிறார் அமித் ஷா என்கிறார்கள். இதனால் அண்ணாமலையின் தலைவர் பதவி பறிபோக வாய்ப்பு. புதிய தலைவரை தேர்வு செய்யும் வேலைகளும் மறைமுகமாக நடந்து வருகிறது. ரேஸில் பலர் இருந்தாலும், நயினார் நாகேந்திரன் - வானதி சீனிவாசனுக்கு...

Apr 02, 202522 min

Modi ஓய்வு? ரேஸில் மூவர், 'நாக்பூர்' விசிட் சீக்ரெட்ஸ்! | BJP | Elangovan Explains

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டுக்களாக இல்லாமல் தற்போதைய இந்த திடீர் விசிட் பல்வேறு கேள்விகளையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. இதற்குப் பின்னணியில் மூன்று நெருக்கடிகள் பேசப்படுகிறது. பாஜகவில் 75 வயதை தொட்டுவிட்டால் பிரதமர் பதவியில் இருப்பவர்கள், இளைய தலைமுறைகளுக்கு வழி விட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.வரும் செப்டம்பர் மாதம் மோடி 75 வயதை அடைகிறார். மற்றொன்று, ஏப்ரல் இறுதிக்குள் பாஜகவின் அடுத்த தலைவரை...

Apr 01, 202521 min

Sengottaiyan தலைமையில் ADMK? Amit Shah-வின் Plan B... | Elangovan Explains

செங்கோட்டையனின் டெல்லி பயணத்தையொட்டி , ஐந்து விதமான அனுமானங்கள் வட்டமடிக்கின்றன. முக்கியமாக, எடப்பாடிக்கு பதிலாக செங்கோட்டையனை வைத்து, அதிமுக-வை லீட் செய்வது என்கிற ஒரு முடிவும் இருக்கிறது. இது அமித் ஷா-வின் பிளான் பி என்கிறார்கள். வெளியே சசிகலா, பன்னீர்செல்வம் என நெருக்கடி. உள்ளே செங்கோட்டையன் மூலமாக செக் என டெல்லி ஆட்டத்தால் உறக்கமிழந்து தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். அதேநேரம் இதை சமாளிக்க, கவனத்தோடு தம் அடிகளை எடுத்து வைத்து , ஆட்டத்தை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் எடப்பாடி என்...

Mar 31, 202515 min

அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files...சரணடைந்த எடப்பாடி? | Elangovan Explains

'அதிமுக - பாஜக இடையில் கூட்டணி அமையுமா?' என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, 'ஆலோசனை நடந்து வருகிறது விரைவில் முடிவு அறிவிக்கப்படும்' என அமித் ஷா பேசியுள்ளார். இன்னொரு பக்கம், செங்கோட்டையன் அவசர அவசரமாக டெல்லி பறந்துள்ளார். அதே நேரத்தில், 'ஒரு தொண்டராக இருந்தாவது திமுகவை வீழ்த்த பாடுபடுவேன்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது பாஜக அதிமுகவை சுற்றி? முக்கியமாக அமித் ஷா-வுடனான எடப்பாடி-யின் சந்திப்பு நடந்த பொழுது,மாஜிக்களுடைய சில முக்கிய ஃபைல்களை போட்டு உரையாடலை தொடங்கியுள்ளார் அமித் ஷா. அ...

Mar 29, 202522 min

Vijay அட்டாக்கிங் DMK ஆனால் ஸ்கெட்ச் EPS-க்கு...கவனிக்கும் Amit Shah! | Elangovan Explains

தவெக-வின் பொதுக்குழு கூட்டத்தில் திமுகவையும், வழக்கத்துக்கு மாறாக பாஜகவையும் மிகக் கடுமையாக அட்டாக் செய்துள்ளார் விஜய். நேரடியாக இரண்டு ஆளும் கட்சியை அட்டாக் செய்தாலும், உள்ளூர எடப்பாடிக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் என்கிறார்கள். இன்னொரு பக்கம் அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு அமைய காரணமாக இருந்த்து பவன் கல்யாண் என்கிறார்கள். என்ன நடந்தது? முக்கியமாக, அமித் ஷா காண்பித்த ஃபைல்களால் ஆடிப்போன எடப்பாடி. அதேநேரம், அமித் ஷா-விடம் நான்கு டிமாண்டுகளை முன்வைத்த எடப்பாடி அதை ஏற்றுக் கொண்டாரா அமித் ஷா?

Mar 28, 202522 min

EPS குறிவைக்கும் 75 தொகுதிகள், 66 MLA-களில் 15 பேர் அவுட், வாரிசு தந்த லிஸ்ட்! | Elangovan Explains

எடப்பாடி டேபிளுக்கு வந்த முக்கியமான ரிப்போர்ட். அது, சிட்டிங் 66 எம்எல்ஏக்கள் குறித்த முழுமையான ரிப்போர்ட். இதில் 15 எம்எல்ஏக்கள் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும் ஷாக் கொடுத்துள்ளது ரிப்போர்ட். இதை முழுமையாக சர்வே செய்து, வடிவமைத்து கொடுத்தது அவரின் வாரிசு. அதே நேரத்தில், 234 தொகுதிகளிலும் சீக்ரெட் சர்வே எடுத்து, அதில் 75 பாசிட்டிவ் தொகுதிகளை பட்டியலிட்டு, அங்கே 'இவை எல்லாம் செய்தால் வெற்றி நிச்சயம்' என்றும் ரூட் போட்டுக் கொடுத்துள்ளது வாரிசு டீம்.மிக முக்கியமாக, ஒவ்வொரு தொகுதியிலும், மூன...

Mar 25, 202512 min

அமைச்சர்களுக்கு செக், Udhayanidhi ரெடி செய்த வேட்பாளர்கள் லிஸ்ட்?! | Elangovan Explains

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை இப்பொழுதே தொடங்கிவிட்டது திமுக. முக்கியமாக வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சிப் பணிகள், சமுதாய பலம் என பலவற்றையும் பட்டியலிட்டு சீக்ரெட் சர்வேவை எடுத்து வந்துள்ளது மேலிடத்துக்கு நெருக்கமான தனியார் நிறுவனம். இன்னொரு பக்கம், சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள், கட்சி செயல்பாடுகள் எல்லாவற்றையும் உளவுத்துறை தனியாக சர்வே எடுத்துள்ளது. அந்த வகையில் ஒரு '50 எம்.எல்.ஏ-க்கள்' ஹிட் லிஸ்டில் உள்ளனர் என்கின்றனர் தலைம...

Mar 24, 202516 min

Sabarisan-ன் டெல்லி டீல்? & Vijay பிளான் பண்ணும் தொகுதி? | Elangovan Explains

அமலாக்கத் துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம் இதனால் சந்தோஷத்தில் செந்தில் பாலாஜி. முக்கியமாக டெல்லி பயணத்துக்கு பின் நம்பிக்கை. அதேபோல சபரீசனின் டெல்லி பயணம். பின்னணியில் ஸ்பெஷல் மீட். டெல்லியை நோக்கு தீவிரமாக இருக்கும் அதே நேரத்தில், திமுக அமைச்சர்களுக்கு இடையே சில கோல்ட் வாரும், உள்அரசியலும் ஓடிக் கொண்டுள்ளது. குறிப்பாக பழனியை மையமிட்டு அமைச்சர்கள் இடையே ஆடுபுலி ஆட்டம். திண்டுக்கல் ஐ பெரியசாமி, சக்கரபாணி, சாமிநாதன் இடையே உள் அரசியல், உள் கணக்குகள் பெரியளவில் வெடித்து வருகிறது. ஆளுங்கட்சியில் இப்...

Mar 22, 202521 min

Velmurugan-ஐ சீண்டிய சேகர்பாபு? & 'Mar 22' டெல்லிக்கு ஷாக் தரும் Stalin! | Elangovan Explains

தமிழ்நாட்டில் எதிரும் கிரைம் ரேட். இதையொட்டி ஸ்டாலின் Vs எடப்பாடி உக்கிரமான வார். இன்னொரு பக்கம், வேல்முருகன் Vs சேகர் பாபு அனல் வீசும் அரசியல் பஞ்சாயத்து. குறிப்பாக சட்டமன்றத்தில் என்ன நடந்தது? இவையெல்லாம் வைத்து வேல்முருகனை அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி முயற்சி. அதே நேரத்தில், மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் மையமிடும் மூன்று மாநில முதல் அமைச்சர்கள்,பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த கூட்டத்தின் மூலம் டெல்லிக்கு ஷாக் மெசேஜ் தருகிறார் ஸ்டாலின். என்ன திட்டமிடப் போகிறார்கள்?!

Mar 21, 202520 min

PTR அடித்த அடி...ரூட்டையே மாற்றும் BJP? Amit shah ஆக்‌ஷன்! | Elangovan Explains

தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க ஐந்து முக்கிய அசைன்மென்ட் களை கொடுத்துள்ளார் அமித் ஷா. இன்னொரு பக்கம், அதை முறியடிக்க, ஐந்து அஸ்திரங்களை ஏவியுள்ளார் மு.க ஸ்டாலின். அதே நேரத்தில், மூன்று பேட்டிகள் மூலம் பாஜகவை பதற வைக்கும் பி.டி.ஆர். முக்கியமாக, 'தமிழ்நாட்டு அமைச்சர்களின் பிள்ளைகள் மும்மொழி படிக்கின்றனர்' என்ற விமர்சனத்துக்கு, பி.டி.ஆர் தந்த பதிலால் கொதிக்கும் அண்ணாமலை டீம்.

Mar 20, 202520 min

EPS-க்கு செக் வைத்த Premalatha, பின்னணியில் Udhayanidhi ஸ்கிரிப்ட்! | Elangovan Explains

'திமுக பட்ஜெட் சிறப்பாக உள்ளது' என பாராட்டியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 'கூட்டணி சம்பந்தமாக தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பிரேமலதா. இந்த அட்டாக்குக்கு பின்னால், எ.வ வேலுவை வைத்து, ஸ்டாலின் ஆடும் ஆட்டமும் உள்ளது. அதிமுக கூட்டணியை உடைக்கும் வேலையில் இறங்கி உள்ளது உதயநிதி டீம். இன்னொரு பக்கம் ராமதாஸ் வைத்த செக்கை எதிர்பாக்காத எடப்பாடி. இந்த நெருக்கடிகளுக்கு நடுவில், கை கொடுத்த ஓபிஎஸ். இதற்குப் பின்னணியிலும் டெல்லியின் கணக்குகள் உள்ளது. அதே நேரத்தில் ஒரே ...

Mar 18, 202519 min

பற்ற வைத்த செங்கோட்டையன்...சிக்கலில் EPS நாற்காலி... மூவர் குறி?! | Elangovan Explains

ஓயாத போராக தொடர்கிறது எடப்பாடி வெர்சஸ் செங்கோட்டையன் இடையிலான பனி போர். இதில், இன்று மார்ச் 17-ம் தேதி சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது. அந்த பரபரப்பை விட செங்கோட்டையன் - எடப்பாடி மோதல் தான், முக்கிய டாக்காக இருந்தது. காரணம், மார்ச் 15-ம் தேதி, பத்திரிகையாளர் ரங்கராஜ பாண்டே நிகழ்ச்சியில், பேசியதில் இருந்து இன்று சட்டமன்றத்திற்கு முன்பு அதிமுக கூட்டிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது வரை பலவற்றை பற்ற வைத்துள்ளார் செங்கோட்டையன். எடப்பாடி தலைமைக்கு எதிரான...

Mar 17, 202516 min
For the best experience, listen in Metacast app for iOS or Android