தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பல வர்க்கத்தினருக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக எடப்பாடி, சீமான், விஜய் என இவர்களை மையமிட்டு, மு.க ஸ்டாலின், புது வகையில், தன் பட்ஜெட் பிளானை முன்னெடுத்துள்ளார்.'5' அஸ்திரங்களைக் கொண்டு '2026' - ஐ வெல்ல முடியும் என நம்புகிறார். வொர்க்அவுட் ஆகுமா மு.க ஸ்டாலினின் அரசியல் கணக்கு?!
Mar 16, 2025•10 min
டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி-க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தந்த ரிப்போர்ட்டு-க்கு, 'எந்த முறைகேடும் நடக்கவில்லை. சட்டரீதியாக சந்திக்க தயார்' என சவால் விட்டுள்ளார் செந்தில் பாலாஜி. பின்னணியில் டாப் லெவலில் நடந்த சீக்ரெட் மீட். குறிப்பாக மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட நம்பிக்கையான ஒரு மெசேஜ். அதன்பிறகே சீறி இருக்கிறார் செந்தில் பாலாஜி என்கிறார்கள். மேலும், 'டெல்லி டார்கெட்டில் ஐந்து அமைச்சர்கள் உள்ளனர். கவனமாக இருக்க வேண்டும்' என்றும் அலெர்ட் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின்.இ...
Mar 15, 2025•15 min
டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருக்கிறதாக ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை ரிப்போர்ட். அதில் எட்டு வகையில் முறைகேடு நடந்ததாக பட்டியலிட்டுள்ளனர். அதைக் கடந்து, நடந்த சோதனைகளில் முக்கியமான சில டைரிகள் சிக்கியுள்ளன. அதில் இன்னும் வெவ்வேறு வடிவங்களில், எப்படியெல்லாம் கமிஷன் விளையாடியுள்ளன என்ற குறிப்புகளும் கிடைத்துள்ளன. எனவே இதை வைத்து அடுத்தடுத்த அட்டாக்கை ஏவத்திட்டமிட்டிருக்கும் அமலாக்கத்துறை. ஏற்கனவே செந்தில் பாலாஜி பிணையை, ரத்து செய்ய ...
Mar 14, 2025•20 min
NEP விவகாரத்தையொட்டி, DMK தொடர் போராட்டங்களை முன்னெடுக்கிறது. இதை சமாளிக்க நிர்மலா சீதாராமன் & பாஜக-வினரை களமிறக்கிய அமித் ஷா டீம். இந்த நகர்வை முறியடிக்க கனிமொழி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை களமாட வைக்கும் ஸ்டாலின். இதில் பி.டி.ஆர்-க்கு, ஸ்பெஷல் அசைன்மென்ட்.
Mar 13, 2025•17 min
'டார்கெட் திமுக' என்ற பயணத்தில், ஒருங்கிணைந்த அதிமுக...பாஜக-வுடன் கூட்டணி... இதுதான் சசிகலாவின் அஜெண்டா. இதை மையமிட்டே வைத்திலிங்கம் - சசிகலா மீட் இருந்தது என்கிறார்கள். மாஜிக்களை வைத்து, அதிமுக-வுக்குள் சலசலப்புகளை உருவாக்குவது, அதன்மூலம் ஒருங்கிணைவு என திட்டமிட்டு, ஸ்லீப்பர்செல்ஸ்களை களமிறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சசிகலா தலைமையில் திருச்சியில் மாநாடு, மாஸ் பயணம் என வேலைத்திட்டம் வகுத்துள்ளனர். வொர்க்அவுட் ஆகுமா?!
Mar 12, 2025•16 min
அடுத்த தேர்தலில் 'முதலமைச்சர் நாற்காலி, உட்கட்சியிலோ தலைமை நாற்காலி' என இரண்டுக்கும் நிறைய நெருக்கடிகள். முதலாவதாக, சொல்பேச்சு கேட்காத நிர்வாகிகள், திமுக அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டும் சில மாஜி அமைச்சர்கள், கூட்டணியிலும் குழப்பங்கள் இப்படி எடப்பாடி, தலைக்கு மேலே ஏராளமான அரசியல் கட்சிகள். குறிப்பாக அவருக்கு வந்த சீக்ரெட் சர்வே ரிப்போர்ட், பெரும் ஷாக் கொடுத்துள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளித்து மீள புது ஆட்டத்தை தொடங்கியுள்ள எடப்பாடி. வொர்க்அவுட் ஆகுமா அவரின் புது அட்டம்ப்ட்?!
Mar 11, 2025•19 min
முதல்நாளே அனல் வீசிய நாடாளுமன்ற கூட்டத் தொடர். 'தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரவில்லை' என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி. இதற்கு பதில் சொல்லும்போது, 'தமிழ்நாடு அரசு மற்றும் திமுக எம்.பி-கள் நாகரீகமற்றவர்கள்' என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. 'நாவடக்கம் தேவை' என ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாடு முழுக்க, பாஜக அமைச்சருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. அதே நேரம், 'திமுக எம்பிக்களுக்கு' ஆறு முக்கிய அசைன்மென்ட் கொடுத்துள்ளார் ஸ்டாலின். இது அகில இந்தி...
Mar 10, 2025•15 min
மார்ச் 09 அன்று அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் அரங்கேறியது. இது 'எடப்பாடியின் சண்டே சம்பவம்' என வர்ணிக்கின்றனர். காரணம் மாஜிக்கள் மீது காட்டம், மா.செ-க்களுக்கோ ஆறு கட்டளை என புது ரூட் எடுத்திருக்கிறார் எடப்பாடி. இன்னொரு பக்கம், 'கூட்டணிக்கு தவம் இருக்கின்றனர்' என்ற அண்ணாமலையின் கருத்துக்கு, வேறொரு வகையில் விளக்கம் கொடுத்திருக்கும் எடப்பாடி. இதை வைத்து 'உட்கட்சி என்றால் சீற்றம்... டெல்லி என்றால் சரண்டரா? என்கிற கேள்விகளும் வட்டமடிக்கின்றது. அதிமுகவைச் சுற்றி அரங்கேறும் பரபரப்புகள். இதற்கு மத்தியில் ...
Mar 10, 2025•16 min
தி.மு.க மந்திரிகள் மீது அடுத்தடுத்த ஆக்ஷனில் இறங்கும் அமித் ஷா ஆபரேஷன். இதை சமாளிக்க உட்கட்சியில் சர்ச்சைக்குரிய மந்திரிகள் பவரை குறைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஸ்டாலின் திட்டம். அதேபோல, பா.ஜ.க-வோடு கைக்கோர்க்கும் அ.தி.மு.க-வை சமாளிக்க மாஜிக்களுக்கென்று புது வொர்க்பிளான் போட்டுள்ளார். அதற்கென தனி திட்டம் அமைத்து, மந்திரிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார். இதில் மந்திரி மூர்த்தி முழக்கத்தால், மாஜி மந்திரி செல்லூர் ராஜூ கலக்கம் என்கிறார்கள் மதுரை அரசியல் வட்டாரம். இப்படி தி.மு.க Vs பா ...
Mar 08, 2025•19 min
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் இரண்டு நாட்களாக அமலாக்குத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் ரெய்டு தொடர்கிறது. இன்னொரு பக்கம் ஜெகத்ரட்சகன் நிறுவனத்திலும் ரெய்டு நடந்துள்ளது. இதற்குப் பின்னணியில் அமித்ஷா-வின் ஆபரேஷன் உள்ளது. மேலும் அவரின் ஹிட் லிஸ்டில் ஐந்து மந்திரிகள் உள்ளார்கள் என்றும் தகவல். என்ன நடக்கிறது? இந்த ரெய்டு பின்னணி என்ன?!
Mar 07, 2025•14 min
Delimitation முன்வைத்து Stalin முன்னெடுக்கும் 'தென்னிந்திய கூட்டு நடவடிக்கை குழு'. இதற்காக தென் மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் ஆதரவு, எம்.பி-களின் பங்களிப்போடு இந்த குழுவை அமைக்கிறார். இக்குழு 5 முக்கிய நகர்வுகளை முன்னெடுக்கும். அது அமித் ஷா-வின் அஜெண்டாவுக்கு பெரும் குடைச்சலாக மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதன்மூலம் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து, அந்த நெருக்கடிகளில் இருந்தும் தப்பிக்கிறார் ஸ்டாலின். இன்னொரு பக்கம், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண...
Mar 06, 2025•17 min
அனைத்து கட்சி கூட்டத்தில், தென்னிந்தியளவில் ஒரு கூட்டுக்குழுவை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின். இதை சக்சஸாக பார்க்கிறார். இன்னொரு பக்கம் பாஜகவுடன் நெருங்கும் எடப்பாடி. பின்னணியில் ராஜ்யசபா சீட் கணக்கும், 2026 இலக்கும் உள்ளது. அதேநேரம் பிரேமலதா அப்செட். பின்னணியில் , எடப்பாடியிடம், அன்புமணி போட்ட சீக்ரெட் டீல்
Mar 05, 2025•19 min
எஸ் பி வேலுமணி மகன் திருமணத்திற்கு, பாஜகவினர் பெருந்திரளாக வந்திருக்க, எடப்பாடி மட்டும் ஆப்சென்ட். இதற்குப் பின்னணியில் சில உள்-அரசியல் ஓடுவதாக தகவல். அதே நேரம், எடப்பாடி ஆப்சன்ட் ஆனதற்கு பின்னணியில், வேறொரு அரசியல் கணக்கு உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக இரண்டு முக்கியமான அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். அதில், முதற்கட்ட வெற்றி கிடைத்ததாகவும் கருதுகிறார். அந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். அவரை போல இன்னும் பல்வேறு அஸ...
Mar 04, 2025•17 min
ேனியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய எடப்பாடி. அவருடைய தேனி உரையை, ஐந்து விதமாக பிரிக்கலாம். இதன் மூலம் டார்கெட் பன்னீராக இருந்தாலும் மெசேஜ் டெல்லிக்கானதாக இருந்தது. தன் நெருக்கடிகளை சமாளிக்க புதிய புதிய வடிவங்களில் பயணத்தை தொடர்கிறார் எடப்பாடி. இரண்டே இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று 'TVK'. இதை புரிந்துக் கொண்டு, தம் வழிக்கு கொண்டு வர ஒரு கேமை தொடங்குகிறார். அதை அறிந்துக் கொண்ட எடப்பாடி, ஆட்டத்தை தன் கன்ட்ரோலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். இப்படியான நகர்வுகளால் அதகளமாகிறது அரசிய...
Mar 03, 2025•19 min
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார் சீமான். அங்கே 'விஜயலட்சுமியை எப்படி தெரியும்?, திருமணம் ஆனதா?' என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. முக்கியமாக மிட்நைட்டில், ஸ்டாலின் கொடுத்த முக்கிய மெசேஜ். அடுத்து என்ன திட்டமிட்டிருக்கிறார் சீமான். திமுகவின் வியூகம் என்ன?
Mar 01, 2025•17 min
சீமானுக்கு, காவல்துறை அனுப்பிய சம்மன், அதை கிழித்த சீமான் பாதுகாவலர் என பரபரக்கும் அரசியல். 'என்னை பார்த்து திமுகவுக்கு பயம்' என்கிறார் சீமான். உண்மையில் பயப்படுவது சீமான் தான் என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள். இந்த பிரச்சினையை இரண்டு கட்சிகளும் எப்படி பார்க்கிறது? இன்னொருபக்கம், அமித் ஷா - வேலுமணி சந்திப்பு நடந்துள்ளது. முக்கிய நகர்வுகள் குறித்து, இருவரும் பேசியுள்ளனர். எடப்பாடி சொன்னதை பகிர்ந்துள்ளார் வேலுமணி. அடுத்து, திமுகவிலோ, மு.க ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கிறது தருமபுர...
Feb 28, 2025•16 min
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-வை வலுவாக்க வேண்டும். முக்கியமாக, தமிழ்நாட்டில் வெற்றி பெற எட்டு அம்சத் திட்டங்களோடு முக்கிய அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார் அமித் ஷா. இதை முறியடிக்க, மு.க ஸ்டாலின் புது ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். மிரட்டும் அமித் ஷா-வின் 'மிஷன் தமிழ்நாடு'. அதை விரட்டுமா 'ஸ்டாலினின் விஷன்?'
Feb 27, 2025•19 min
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் த.வெ.க. விஜயின் பேச்சும், அவரிடம் எதிர்பார்ப்புகளும். இன்னொரு பக்கம், 'குறையும் எம்.பி தொகுதிகள். இது பா.ஜ.க-வின் கேம். இதற்கெதிராக, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். 'மார்ச் 5' கெடு வைத்துள்ளார் ஆனால் 'தொகுதிகள் குறையாது' என இதை மறுக்கிறார் அமித் ஷா. ஸ்டாலின் இந்த அஸ்திரத்தை வீசுவதற்கு பின்னால், தமிழ்நாட்டில் அவர் ஆட்சிக்கு சில நெருக்கடிகள், குடைச்சல்கள் உள்ளன என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். என்ன நடக்கிறது?
Feb 26, 2025•18 min
'டார்கெட் 200' என்பதை நோக்கி புது புது வியூகங்களை வகுக்கும் மு.க ஸ்டாலின். அதை உடைக்க புது புது ஆபரேஷன்களை தொடங்கும் அமித் ஷா. லேட்டஸ்டாக எம்.பி தொகுதிகளை குறைக்கும் டெல்லி மூவ். இதை எதிர்த்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஸ்டாலின். இப்படி பா.ஜ.க ஒரு பக்கம் தரும் நெருக்கடி இன்னொரு பக்கம் அ.தி.மு.க தரும் குடைச்சல்கள். இதை உடைக்க கையில் எடுக்கப்பட்ட ரைடு அஸ்திரம். அதேநேரம், உட்கட்சியிலோ பலநூறு பஞ்சாயத்துகள். முக்கியமாக தலைவலி கொடுக்கும் தருமபுரி. கட்சியை வலுவாக்க மாவட்ட செயலாளரை மாற்றினா...
Feb 25, 2025•18 min
ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி 'ஓநாயும், வெள்ளாடும்' என விரிவான கடிதம் எழுதியுள்ளார் எடப்பாடி. இது பன்னீருக்கு மட்டுமல்ல, அமித் ஷா-க்கும் கொடுக்கப்பட்ட ஸ்ட்ராங் மெசேஜ் என்கிறார்கள் அதிமுகவினர். புது பரபரப்பு
Feb 24, 2025•16 min
'டார்கெட் 200' அதை அடைவதற்காக ஸ்டாலினுக்கு புது ரூட்டை போட்டுக் கொடுத்துள்ளனர் மகனும் மருமகனும். அது சமுதாய ரீதியிலான கவரேஜ். இன்னொரு பக்கம், தன் மகனுக்கு ஒதுக்கிய மாவட்டத்தின் மூலமாக அப்செட் பொன்முடி. ஆறுதல் தந்த மு.க ஸ்டாலின். அடுத்து, எடப்பாடியை சந்தித்த ஜி.கே மணி. சீக்ரெட் டீல் போட்டு இருப்பதாக தகவல். இன்னொரு பக்கம் எடப்பாடியிடம், ஆர்.பி உதயகுமார் ஃபீலிங்கோ ஃபீலிங். ஆறுதல் கொடுத்து, நம்பிக்கை கொடுத்த எடப்பாடி.
Feb 22, 2025•18 min
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ 5000 கோடி தர முடியாது என மீண்டும் தெரிவித்த மத்திய பாஜக அரசு. இதை எதிர்த்து அடுத்தகட்ட திட்டங்களைத் தீட்டும் ஸ்டாலின்... இன்னொருபக்கம், தமிழ்நாடு வரியாக மத்திய அரசுக்கு கொடுத்தது ரூ 8.04 லட்சம் கோடி...திரும்பி வந்தது ரூ 1.58 லட்சம் கோடி... தமிழ்நாட்டை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? அடுத்து, 'உதயநிதி Vs அண்ணாமலை' இந்த புதிய Getout war - க்கு பின்னே உள்ள சீக்ரெட் அஜெண்டா.
Feb 21, 2025•16 min
அமலாக்க துறையின் அடுத்த நகர்வால் நெருக்கடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி டீம் என்கிறார்கள். அவருடைய பதவிக்கு மீண்டும் ஆபத்து, ஜாமீன் ரத்தாகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தினர். என்ன நடக்கிறது செந்தில் பாலாஜி வழக்கில்? இன்னொரு பக்கம், அடுத்தடுத்த தொடர் நெருக்கடிகள். முக்கியமாக டெல்லி தரும் அழுத்தம். இதனால் அதிமுகவில், ஓயாத குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சமாளிக்க , புது ஆட்டத்தை தொடங்கியுள்ள எடப்பாடி. வொர்க்அவுட் ஆகுமா?
Feb 20, 2025•13 min
மீண்டும் மொழிப்போருக்கு தயாராகும் திமுக ஆனால் அதை வெல்லக்கூடிய வகையில் உட்கட்சி பலமாக உள்ளதா? மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகள். இதனால் கடும் அதிர்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள். இதை சரி செய்ய மாவட்டச் செயலாளர்களை மாற்றியும், புதிய மாவட்டங்களை உருவாக்கியும் வருகிறார் மு.க ஸ்டாலின் மேலும், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் இருக்கிறார். எனவே திமுகவில் காத்திருக்கிறது பல்வேறு அதிரடிகள் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
Feb 19, 2025•19 min
ஓ.பி.எஸ் - ஆர்.பி உதயகுமார் இடையிலான சீரியஸான வார்த்தை போர், இன்னொரு பக்கம் சிரிப்பை வரவழைத்துக் கொண்டுள்ளது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஏன் இருவரும் அடித்துக் கொள்கிறார்கள்? இதில் டெல்லி குளிர் காய்கிறதா? இன்னொரு பக்கம் நான்கு ஷாக் ட்ரீட்மென்ட்களை கொடுக்கும் பா.ஜ.க. இதனால் நெருக்கடியில் எடப்பாடி? என்ன நடக்கிறது அ.தி.மு.க-வை சுற்றி? டெல்லி போடும் கண்டிஷன் என்ன? பரபரப்பு பின்னணிகள்.
Feb 18, 2025•14 min
மீண்டும் மும்மொழிக் கொள்கை... தி.மு.க Vs பா.ஜ.க மூர்க்கமான போர்! ஸ்டாலின் கையிலெடுக்கும் 1965 டைரி... மீண்டும் மொழிப் போராட்டம்?!
Feb 18, 2025•12 min
திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. நான்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரத்தில், லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், சி.வி சண்முகத்துக்கு வைக்கப்படும் செக் உள்ளது. ஈரோட்டில், தோப்பு வெங்கடாசலம் கொண்டு வந்ததன் பின்னணியில், செந்தில் பாலாஜி உள்ளார். 'டார்கெட் வெஸ்ட்' என்பது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பட்டுக்கோட்டையில், அண்ணாதுரை கட்டும் கட்டப்பட்டதற்கு பின்னணியில் இருக்கும் பரபரப்புகள். விரைவில் 100 மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம். இதில், 'தங்கள் மாவட...
Feb 15, 2025•21 min
ஒரு பக்கம் செங்கோட்டையன், மறுபக்கம் தேர்தல் கமிஷன் பின்னணியில் பாஜகவின் கேம் என டோட்டலாக ஆடிப் போயிருக்கும் எடப்பாடி. இதில் செங்கோட்டையனை சரிகட்ட சமாதான குழுவையும் அனுப்ப, அதன் பிறகு மாறிய காட்சிகள். தேர்தல் கமிஷனை சமாளிக்க, புது ரூட்டை எடுத்திருக்கும் எடப்பாடி. என்ன நடந்து கொண்டிருக்கிறது அதிமுகவில்?
Feb 14, 2025•17 min
செங்கோட்டையன் வைத்த செக்... மிரண்டு போன எடப்பாடி! உசுப்பேற்றிய எடப்பாடி டீம்... வெகுண்டெழுந்த செங்கோட்டையன்... 3 கோபங்கள்! கட்டுத் தொகை இழந்த சீமான்... ஆனாலும் ஹேப்பி...ஏன்?!
Feb 10, 2025•16 min
டெல்லி தேர்தலில் அமோக வெற்றி அடைந்துள்ளது பாஜக. கெஜ்ரிவால் கோட்டை விட்ட 10 இடங்கள் இதுதான். அமித்ஷா ஸ்கோர் செய்த ஐந்து வியூகங்கள் மூலம், 27 ஆண்டு சபதத்தை நிறைவேற்றியது பாஜக. அடுத்த முதல்வராக பர்வேஷ் வர்மா வர வாய்ப்பு அதிகம். இன்னொரு பக்கம், ஈரோடு கிழக்கில் சரிந்த சீமான்... சாதித்த ஸ்டாலின். திமுக வெற்றி சொல்லும் செய்தி இதுதான்.
Feb 08, 2025•20 min