The Political Pulse | Hello vikatan - podcast cover

The Political Pulse | Hello vikatan

Hello Vikatanhubhopper.com
The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

Ambedkar Row: Amit shah-வை அலற வைக்கும் Rahul & Stalin டீம்?

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கடும் கண்டனங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர் இந்தியா கூட்டணி கட்சியினர். இது பாஜகவுக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளது. இதிலிருந்து மீள மோடி வகுத்திருக்கும் திட்டம் என்ன? இன்னொரு பக்கம் ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, ஸ்டாலின் முன்பு இருக்கக்கூடிய மூன்று சவால்கள்...

Dec 19, 202417 min

விசாரணை பிடியில் அமைச்சர் Anitha...STALIN-க்கு செக்?!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரித்தது அமலாக்கத்துறை. சுமார் 30-க்கும் மேற்பட்ட கேள்விகளால் குடைந்தெடுத்தது. விசாரணையில் என்ன சொன்னார் ? ஏன் விசாரணை? இதை வைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு செக் வைக்கிறார்களா? இந்த அரசியல் ஆட்டம் தான் இந்த காணொளி...

Dec 18, 202414 min

EPS-க்கு அரசியல் வெடி வைத்த KN Nehru வெளியேறுகிறாரா Velmurugan?!

'மோடியைப் பார்த்து பயப்படுகிற பழனிசாமி' என கடுமையாக அட்டாக் செய்திருக்கும் அமைச்சர் கே என் நேரு. திமுகவின் நகர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல். இன்னொரு பக்கம், இதை முறியடிக்க எடப்பாடி வியூகம். அதே நேரத்தில் திமுக கூட்டணிக்குள் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? வெடிக்கும் சர்ச்சைகள்.

Dec 17, 202417 min

'EPS' ரெடி பண்ணும் வேட்பாளர்கள் லிஸ்ட் பொங்கல் பிளான்!

அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி அரங்கேறியது. அதில் எடப்பாடி நான்கு முக்கியமான அம்சங்களை முன்வைத்து ஒரு ரூட் மேப் போட்டு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக பொங்கலிலிருந்து, புது ஃபார்முலா படி சில திட்டங்களை வகுத்திருக்கிறார். அது திமுகவை வீழ்த்தும். பாஜகவை பயமுறுத்தும் எனும் எடப்பாடியின் கணக்கு நிறைவேறுமா?!

Dec 16, 202418 min

EPS-ஐ மிரட்டும் 5 இடிகள், 'டிச 15' பொதுக்குழுவுக்குப் பின் மீள்வாரா?

நாளை 'டிசம்பர் 15' அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆனால் அதற்கு முன்பாகவே உட்கட்சி பஞ்சாயத்துகள், வழக்குகள் என எடப்பாடியை சுற்றி எக்கச்சக்க இடி. மிரட்டும் சிக்கல்களில் இருந்து மீள, நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடியிடம் திட்டம் உள்ளதா?! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனில்லாமல் காலமானார். அவர் குறித்த சுருக்கமான வரலாறு.

Dec 14, 202415 min

AMIT SHAH புது ரூட் தடுக்க STALIN போடும் ஸ்கெட்ச்!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய பாஜக மந்திரி சபை ஒப்புதல். இதற்கு பின்னால் அமித் ஷா-வின் மிகப்பெரிய பிளான் உள்ளது. இது இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கும் ஆபத்து என கருதுகிறார் மு க ஸ்டாலின். தடுக்க ஆல் இந்தியா அளவில் சீக்ரெட் நகர்வுகளை தீவிரப்படுத்துகிறார் ஸ்டாலின். என்ன நடக்கிறது? ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தா?

Dec 13, 202415 min

STALIN 'டார்கெட் 200 'பெரும் குடைச்சல் தரும் RAMADOS & EPS!

கேரளா வைக்கமில், தந்தை பெரியாரின் நினைவகத்தை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின் மற்றும் பினராய் விஜயன். ஒரு பக்கம் சமூக நீதி அரசியல் என அகில இந்திய அரசியலில் ஆர்வம் காட்டும் திமுக. அதே நேரத்தில் ஆறு முக்கிய சவால்கள் ஸ்டாலினுக்கு பெரும் சோதனையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய குடைச்சல்களை ராமதாஸ் மற்றும் எடப்பாடியும் கொடுத்து வருகிறார்கள். அதை சமாளிக்க ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

Dec 12, 202416 min

'Kodanadu' வழக்கு, தப்பிக்க EPS-ன் 5 சீக்ரெட் நகர்வுகள்? | Elangovan Explains

கொடநாடு வழக்கு விவகாரத்தில், எடப்பாடி, சசிகலா உள்ளிட்ட ஒன்பது பேரிடம் சாட்சி விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி. இவ்வாறு குறுக்கு விசாரணை செய்யும் போது, அதில் பகிரப்படும் தகவல்கள் எடப்பாடிக்கு சிக்கல் கொடுக்கலாம். இதையொட்டி வாய் திறக்கும் போது, அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்தாகவும் மாறலாம். இதை ஒரு ஆயுதமாக கையில் ஏந்தி, எடப்பாடிக்கு எதிரான காய் நகர்த்தல்களும் தீவிரமாகின்றன. குறிப்பாக ஓபிஎஸ்,விகேஎஸ் அணி. தப்பிக்க சில சீக்ரெட் நகர்வுகளை முன்னெடுக்கும் எடப்பாடி டீம். என்ன நடந்து கொண்டிருக்...

Dec 11, 202416 min

'STALIN Vs EPS' மோதலுக்கு காரணம் VIJAY!

'ஆதவ் அர்ஜுனா'-வை ஆறு மாத காலம் இடை நீக்கம் செய்துள்ளார் திருமாவளவன். பின்னணியில் ஸ்டாலின் டீம் கொடுத்த அழுத்தங்கள் உள்ளது என தகவல். இன்னொரு பக்கம், சட்டமன்றத்தில் காத்திரமான கேள்விகளை முன்வைத்த எடப்பாடி. பதிலடி கொடுத்த ஸ்டாலின். இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலுக்கு, விஜய் அரசியலும் ஒரு காரணம்.பரபரப்பு பின்னணிகள்.

Dec 09, 202415 min

விஜய்-திருமா-உதயநிதி...அரசியல் சரவெடி...கவனிக்கும் எடப்பாடி!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் முன்வைத்த கருத்துகள், திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனா-வுக்கு எதிராக களமாடும் திமுக. ஒரு பக்கம் அம்பேத்கர், மறுபக்கம் திமுக கூட்டணி... கவனத்தோடு தனது நகர்வுகளை எடுத்து வைக்கும் திருமாவளவன். இவை எல்லாவற்றையும் நோட்டமிடும் எடப்பாடி. புது அரசியல் சதுரங்க ஆட்டம்.

Dec 07, 202413 min

MODI பக்கம் திருப்பிவிடும் STALIN & குழப்பத்தில் EPS!

ஃபெங்கல் புயல், திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க மோடி பக்கம் பந்தை திருப்பிவிட நினைக்கும் ஸ்டாலின். இதை புரிந்து கொண்ட பாஜக கூட்டணி கட்சிகள், ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளனர். இன்னொரு பக்கம் இரட்டை இலையை வைத்து ஆடும் கேமால் விழி பிதுங்கி இருக்கும் எடப்பாடி. ஹேப்பிமோடில் பன்னீர். அடுத்து திருவண்ணாமலை பாலம் உடைந்ததில் வெளியாகியிருக்கிற ஒரு முக்கிய மர்மம்.

Dec 06, 202410 min

EPS-க்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி...உடையும் MODI பிம்பம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5. இந்த நாள் வரையிலும் அதிமுகவில் நாற்காலி யுத்தத்துக்கு முடிவே இல்லை. மீண்டும் இரட்டை இலை சின்னத்திற்கு புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி ரேடாரில் எடப்பாடி மற்றும் வேலுமணி. என்ன நடக்கிறது அதிமுகவில்? தேசிய அரசியலில், பரப்புரைகளில் ஓரம் கட்டப்படுகிறாரா பிரதமர்? குறிப்பாக மோடியின் பிம்பம் உடைகிறதா? இதுதான் இன்றைய காணொளியில்.

Dec 05, 202417 min

E.V VELU-வால், STALIN-க்கு நெருக்கடி? ஸ்கோர் செய்யும் RAMADOSS!

மூன்றே மாதத்தில் திருவண்ணாமலையில் உடைந்த பாலம், நிலச்சரிவு. இவை எல்லாமே எ.வ வேலுவுக்கு நெருக்கடி கொடுக்கிறது. இன்னொரு பக்கம் சாத்தனூர் அணை விவகாரம், துரைமுருகனை திணறடிக்கிறது. இவை எல்லவற்றையும் கையில் எடுத்து எடப்பாடி, ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தீவிரமாக களமாடுகின்றனர். கடும் நெருக்கடியில் ஸ்டாலின் அரசு.

Dec 04, 202419 min

மிரட்டும் 'FENGAL புயல்' Udhayanidhi & EPS-ஐ தேடும் மக்கள்!

Fengal புயல் ஒட்டுமொத்தமான சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும் மழையில் மிதக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பயங்கர காற்று வீசுகிறது. இந்த தருணத்திலும் தி.மு.க - அ.தி.மு.க உள்ளிட்ட கரை வேட்டிகளை தேடும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தான் களத்தில் பணியாற்றுகின்றனர். எங்கே உதயநிதி? எங்கே எடப்பாடி? என்கிற கேள்விகளை புயலை மிஞ்சக் கூடிய வகையில் முன்வைக்கின்றனர் பொதுமக்கள். சென்னை Fengal புயல் களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்.

Nov 30, 202413 min

STALIN-ஐ சோதிக்கும், RAMADOSS-ன் 8 வெடிகள்!

ஸ்டாலினுக்கும் ராமதாஸ்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இதில் திமுகவுக்கு செக் வைக்கக் கூடிய வகையில் 'ஃபார்முலா 50' என்பதை கையில் எடுத்திருக்கிறார் அன்புமணி. இன்னொரு பக்கம் எல்லா தடைகளையும் முறியடிக்க புது கேம் ப்ளானை கையில் எடுத்திருக்கும் உதயநிதி. அந்த வகையில் மீண்டும் உக்கிரமான அரசியல் போர் தொடங்கியுள்ளது.

Nov 29, 202417 min

'Dec 2' BJP-யின் செக்...புது ரூட் எடுத்த EPS...பக்கா ஸ்கெட்ச்!

ஏக்நாத் ஷிண்டே போல எடப்பாடியையும், தம் பிடிக்குள் கொண்டு வர, பா.ஜ.க மீண்டும் முயற்சி. சில நெருக்கடிகளையும் கொடுக்கத் திட்டம். சுதாரித்த எடப்பாடி. டிச 15-லிருந்து ஆக்‌ஷனில் இறங்கத் திட்டம். அதற்கான ஃபார்முலா, கையில் உள்ளது என தகவல். பா.ஜ.க-வின் டார்கெட்டை சமாளிப்பாரா எடப்பாடி?!

Nov 28, 202416 min

UDHAYANIDHI-ன் 'K' Plan...பதறும் மந்திரிகள்?

கூட்டணிக் கட்சிகள், விஜய் என அடுத்தடுத்து பல்வேறு குடைச்சல்கள். இந்த நெருக்கடிகளை சமாளிக்க புதிய ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கும் உதயநிதி. இதைக் கேள்விப்பட்டு பதற்றத்தில் மந்திரிகள், மா.செ-க்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள். இதுதான் பிறந்தநாள் சபதம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலுமணி - நைனார் மீட் ... பின்னணியில் எடப்பாடி வைக்கும் ட்விஸ்ட்!

Nov 27, 202415 min

வார்த்தை தவறிய STALIN...அட்டாக் மோடில் PMK...வலை வீசும் EPS!

அதானி விவகாரத்தை ஒட்டி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் சில கேள்விகளை முன்வைத்த மருத்துவர் ராமதாஸ். இதற்கு ஸ்டாலின் கொடுத்த பதில், தங்களை அவமதித்து விட்டதாக கொதிக்கின்றனர் பா.ம.க-வினர். இதையொட்டி தி.மு.க Vs பா.ம.க என அனல் வீசும் அரசியல் பரபரப்புகள். தி.மு.க-வுக்கு எதிரான அடுத்தடுத்த அட்டாக்குகளுக்கு தயாராகும் பா.ம.க. அதே நேரத்தில், இதுதான் தருணம் என கூட்டணி தூண்டில் போடும் அ.தி.மு.க. இரண்டு மாஜி-க்களை, தைலாபுரத்துக்கு அனுப்பும் எடப்பாடி. என்ன நடக்கிறது?!

Nov 26, 202413 min

EPS-ஐ பதம் பார்க்கும் அரசியல் கத்திகள்...15 மாத பரீட்சை!

ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா, அதிமுகவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலமாகவும் தன் அரசியல் எதிர்காலத்துக்காக சில நகர்வுகளை எடப்பாடி தீவிரப் படுத்துகிறார் ஆனாலும் கள ஆய்வு குழுவில் நடக்கும் மோதல்கள், தலைமையைச் சுற்றி பஞ்சாயத்துகள் என கிட்டத்தட்ட ஏழு நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கிறார் எடப்பாடி. இதில் மிக முக்கியமாக, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், எடப்பாடியை யோசிக்க வைக்கின்றன. என்ன நடக்கிறது அதிமுகவில்?

Nov 25, 202415 min

Rajini-யை வைத்து Seeman ஆட நினைக்கும் கேம்...வொர்க்அவுட் ஆகுமா?

சீமானும் ரஜினியும் திடீர் சந்திப்பு.... பின்னணியில் அவர்கள் பேசிய முக்கிய சமாச்சாரங்கள். த.வெ.க குறித்தும், விஜய் குறித்தும் தமது ஆதங்கத்தையும் சீமான் பகிர்ந்து கொண்டார். அடுத்த கட்ட நகர்வு குறித்தும் பேசியதாகவும் தகவல். அதே நேரம், உட்கட்சிக்குள்ளும் நிர்வாகிகள் வெளியேறுதல், சீமானின் தன்னிச்சையான செயல்பாடுகள் என நிறைய நெருக்கடிகளும் நா.த.க-வில் உள்ளன. மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நா.த.க.

Nov 23, 202415 min

திண்டுக்கல் சீனிவாசன் வெடி...தடுமாறிய தங்கமணி...ADMK குஸ்தி?!

அதானிக்கு லாக் போட்ட அமெரிக்கா. தீவிரமடையும் ரூ 2200 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த விவகாரம். இதை வைத்து மோடி அரசுக்கு நெருக்கடி தரும் ராகுல். இன்னொரு பக்கம் அ.தி.மு.க கள ஆய்வுக்குழு கூட்டங்களில், வெடிக்கும் கோஷ்டி மோதல்கள். இதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல கொளுத்தி போட்ட திண்டுக்கல் சீனிவாசன். தடுமாறிய தங்கமணி பின்னணியில் எடப்பாடி?!

Nov 22, 202412 min

புரளி கிளப்பிய EPS டீம்...End Card போட்ட VIJAY!

த.வெ.க-வை வைத்து, சில திட்டங்களை போட்டு இருந்தார் எடப்பாடி. அதில் உள்ள நுண் அரசியலை புரிந்துக் கொண்டு, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதனால் தமது ரூட்டை மொத்தமாக மாற்றிய அ.தி.மு.க. இன்னொரு பக்கம், 'டார்கெட் 200' என்பதை நோக்கி திட்டங்களை வகுக்கும் ஸ்டாலின். இதில் உட்கட்சி பிரச்சனைகள், கூட்டணி, அ.தி.மு.க, எல்லாவற்றையும் சமாளிக்க, உளவுத்துறைக்கு, புது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!

Nov 21, 202414 min

தரமில்லாத மருந்துகள் மரணங்கள் என்ன செய்கிறார் மந்திரி மா.சு?!

சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர், கத்திகுத்துக்கு ஆளானார். பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவர்கள், மருத்திவமனைகள் உள்ளன. இன்னொரு பக்கம், தரமில்லாத மருந்துகள், போதிய அளவில் இல்லாத மருத்துவர்கள், செவிலியர்கள், காலிப் பணியிடங்கள் என ஐ.சி.யு-வில் தவித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை. அமைச்சர் மா. சுப்பிரமணியனும் முன்னுக்கு பின் முரணாகவே பேசிக் கொண்டிருக்கிறார். காப்பாற்றப்படுமா தமிழ்நாடு சுகாதாரத்துறை? முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் எடுப்பாரா?!

Nov 16, 202419 min

EPS-ன் SPY டீம்...& வேட்பாளர்கள் தேர்வில் UDHAYANIDHI!

பாஜக இல்லாத ஒரு பெரிய கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் எடப்பாடி. சீக்ரெட் டீம், சுற்றுப் பயணம், களையெடுப்பு என 2026-க்கு ஸ்கெட்ச் போட்டு வேலையை தொடங்கி விட்டார் எடப்பாடி. திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விஜயை, அதிமுக பக்கம் கொண்டு வரவே உருவாக்கப்பட்டுள்ளது சீக்ரெட் டீம். இந்த பக்கம், திமுகவின் 'நவம்பர் 20 தேதி' கூட்டத்தை வைத்து, உதயநிதி சில ஸ்டெப்ஸ் எடுக்கிறார். மாசெ-கள் மாற்றம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, வேட்பாளர்கள் தேர்வு என வேகம் காட்டும் உதயநிதி...என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!...

Nov 15, 202413 min

இளமை மருந்து... சர்வதேச நெட்வொர்க்... Nithyanantha Secrets!

Nithyananda has claimed that he has escaped abroad and established a new country called Kailasa, where he is living. At the same time, he is reportedly using women as test subjects for experiments, while also speeding up the search for rare medicinal plants that may exist in Tamil Nadu. He is also involved in preparing an "eternal youth" medicine to remain youthful. Inside his camp, there are reportedly shocking details emerging. The court has also issued a summons for Nithyananda....

Nov 14, 202414 min

'STALIN Vs EPS' எதிர்ப்பின் வழியாகவே போடும் சீக்ரெட் டீல்!

ஸ்டாலின் Vs எடப்பாடி இருவரும் மோதிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் சில சீக்ரெட் டீல்கள். பா.ஜ.க கூட்டணி விவகாரத்தையொட்டி, எடப்பாடியிடம் எகிறிய மாஜிக்கள். மீண்டும் இ.டி ரெய்டால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.

Nov 12, 202411 min

குழப்பியடிக்கும் EPS...பயமுறுத்துகிறதா BJP?!

'பாஜகவுடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும் போது முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பதில். இது அதிமுகவுக்குள்ளும் பல்வேறு கேள்விகளை உருவாக்கி உள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைவலிகள், எடப்பாடியை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படி ஒரு பதிலை அவர் சொல்லி உள்ளார் என்கிறார்கள் உள்விவகாரங்களை நன்கறிந்தவர்கள். என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் காட்சிகள் மாறுகிறதா?!

Nov 11, 202414 min
For the best experience, listen in Metacast app for iOS or Android