பொன்னியின் செல்வன் - podcast cover

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ?

சுந்தர சோழர் தம்முடைய வாழ்க்கையில் நடந்த வரலாற்றைக் குந்தவையிடம் கூறுகிறார். பெரிய பாட்டியை இங்கே வரும்படி செய்ய குந்தவையிடம் சொல்லி அனுப்புகிறார். சோழ மகாராஜ்யத்துக்கும், அந்த ராஜ்யத்துக்குத் தன் சகோதரர்கள் பெற்றுள்ள உரிமைக்கும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது என்று குந்தவை உணர்கிறாள்.

Oct 27, 202126 minSeason 2Ep. 17

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை

சுந்தர சோழ சக்கரவர்த்தி தன் அருமைக் குமாரி குந்தவையிடம் தன் மனதில் உள்ள உண்மையைச் சொல்லுகிறார். அதற்கு குந்தவை தன் சகோதரர்களுக்குப் பட்டம் இல்லையென்று செய்துவிட்டு சித்தப்பா மதுராந்தகனுக்கு பட்டம் கட்ட சிலர் துரோகம் செய்கிறார்கள் என்று கூருகிறார். அவர்கள் முயற்சி பலித்தால் நன்று என்று கூறி, சுந்தர சோழர் தன் பூர்வ ஜன்ம நினைவுகளான பிரமைச் சிலவற்றை கூறிகிறார். மேலும் தன்னை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு சோகமான காட்சியை சொல்லட்டுமா? என்று கேட்க்கிறார்....

Oct 26, 202125 minSeason 2Ep. 16

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்

சுந்தர சோழரின் பாட்டனாரான கோப் பரகேசரி பராந்தகருடைய கதை மற்றும் அவர் மூத்த புதல்வராகிய இராஜாதித்தரின் நாடகக்கதை. பராந்தகத் தேவர் நாடகம் நடந்த அன்று இரவு சக்கரவர்த்தி சுந்தர சோழரின் தீனமான துயரக் குரல் புலம்பலை கேட்டு வானதி மயக்கம் அடைகிறாள்.

Oct 20, 202118 minSeason 2Ep. 15

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்

சோழ நாட்டின் இரு பேரழகிகளான இளவரசி குந்தவை தேவியும், பழுவூர் இளைய ராணி நந்தினிதேவியும் சந்திக்கும் காட்சியும் அவர்களின் சம்பாஷணையும்.

Oct 07, 202111 minSeason 2Ep. 14

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 13 - "பொன்னியின் செல்வன்"

குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் தஞ்சை நகர் செல்கிறார்கள். குந்தவை தேவி சக்கரவர்தியின் நிலைமை, இராஜ்யத்தின் பேரபாயம், வந்தியத்தேவன் குறித்தும் உள்ளம் குழம்புகிறாள். வழியில் குந்தவை, இளவரசருக்குப் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் வந்த காரணக் கதையை வானதியிடம் கூறுகிறாள்.

Oct 06, 202113 minSeason 2Ep. 13

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 12 - குருவும் சீடனும்

சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ‘மான்ய மந்திரி’யான அன்பில் அநிருத்தப்பிரமராயருக்கு அளித்த பத்து வேலி நில சாஸனத்தைப் பற்றிய விவரங்களும் அத்துடன் அநிருத்தரின் பரம்பரைக் குறிப்பும். அநிருத்தர் இளவரசரைப் பற்றியும் இலங்கை செய்திகளையும் ஆழ்வார்க்கடியானிடம் கூறுகிறார். ஆழ்வார்க்கடியான் தான் தெரிந்து வந்த செய்திகளை பகிரங்கமாகச் சொல்லும்படியாக இல்லை என்று கூறுகிறான்.

Oct 05, 202122 minSeason 2Ep. 12

பாகம் 2 - சுழற்காற்று - அத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை

அநிருத்தப் பிரம்மராயர் தம்மைப் பார்க்க வந்திருந்த வர்த்தகர்களை விசாரிக்கிறார். தெரிஞ்ச கைக்கோளப் படையைப் பற்றிய விளக்கம். அநிருத்தர், இளவரசர் அருள்மொழிவர்மரின் திட்டத்தை பற்றிக் தெரிஞ்ச கைக்கோளப் படைச் சேனாதிபதிகளிடம் கூறுகிறார். பிறகு சக்கரவர்த்தி சுந்திரச்சோழரிடம் அவர்களின் விருப்பத்தைத் தெரியப்படுத்துகிறேன் என்று வாக்களிக்கிறார்.

Oct 04, 202114 minSeason 2Ep. 11

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்

வந்தியத்தேவனும், இளையபிராட்டியும் பேசியதைக் ஒட்டுக் கேட்ட ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் இலங்கைத் தீவில் இறங்கிய அதே நாள் மாலையில் இராமேசுவரம் வந்து சேர்கிறான். சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற முதன் மந்திரி அன்பில் அநிருத்தப் பிரமராயரும் இராமேசுவரம் வருகிறார். அநிருத்தப் பிரமராயார் ஆழ்வார்க்கடியானை நம் இடத்துக்குக் கொண்டு வாருங்கள் என்று படை வீரர்களிடம் கூறுகிறார்.

Oct 02, 202112 minSeason 2Ep. 1

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 9 - "இது இலங்கை!"

இலங்கையின் காட்சியைக் கண்டு மெய்மறந்து நிற்க்கிறான் வந்தியத்தேவன். பூங்குழலி கூறியபடி இளவரசர் எங்கே என்று விசாரித்து விஷயத்தைக் கூறுகிறாள். வந்தியத்தேவன் நாகத் தீவின் கரையில் விடை பெற்றுக்கொண்டான்.

Sep 29, 202111 minSeason 2Ep. 9

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 8 - பூதத் தீவு

வந்தியத்தேவன் முன் இரவில் தான் நடந்து கொண்டதை நினைத்து பூங்குழலியிடம் மன்னிப்புக் கோருகிறான். வந்தியத்தேவன் பூங்குழலியிடம் இளவரசர் அருள்மொழிவர்மர் இருக்குமிடம் அரிய வழி இருக்கிறதா? என்று கேட்க்கிறான். பூதத் தீவின் கரையில் நீ தாமதித்தால் அருள்மொழிவர்மர் எங்கே இருக்கிறார் என்று விசாரித்துச் சொல்கிறேன் என்றாள் பூங்குழலி.

Sep 29, 202115 minSeason 2Ep. 8

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 7 - "சமுத்திர குமாரி"

இரவில் பூங்குழலியும், வந்தியத்தேவனும் கடற்கரையில் ஆயத்தமாயிருந்த படகில் ஏறிக்கொள்ளகிறார்கள். படகின் ஆட்டத்தினால் வந்தியத்தேவனின் மனத்தில் திகிலும், சந்தேகமும், பயமும் ஏற்ப்பட்டு கடலில் குதிக்கிறான். சமுத்திரக்குமாரியான பூங்குழலி, வந்தியத்தேவனைக் கடலில் இருந்து காப்பற்றினாலா?

Sep 29, 202122 minSeason 2Ep. 7

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 6 மறைந்த மண்டபம்

வந்தியத்தேவன் காட்டிற்குள் பூங்குழலியைத் தேடிக்கொண்டு போனான். வந்தியத்தேவனின் துணிச்சுருளை எடுத்துக் கொண்டு வந்த காரணத்தை பூங்குழலி கூறுகிறாள். பூங்குழலியிடம் படகு வலித்து வந்து தன்னை இலங்கையில் சேர்ப்பிக்க வேண்டும் என்று கோருகிறான். பூங்குழலி சம்மதித்து வந்தியத்தேவனை மறைந்த மண்டபத்தில் இருக்கச் சொல்கிறாள்.

Sep 28, 202120 minSeason 2Ep. 6

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 5 - நடுக்கடலில்

இருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்க, சோழ ராஜியப்பட்டம் யார்க்கு என்று பூங்குழலி கேட்க்கிறாள். வந்தியத்தேவன் பூங்குழலியிடம் சக்கரவர்த்திக்கு மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் படகு வலிக்க உதவி கேட்கிறான்.

Sep 24, 202112 minSeason 2Ep. 5

பாகம் 2 - சுழற்காற்று - அத்தியாயம் 4 - நள்ளிரவில்

வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவர் தியாகவிடங்கக் கரையர்ரை சந்தித்து இலங்கைக்குத் தான் அவசரமாகப் போக உதவி கேட்க்கிறான். அன்று நள்ளிரவில் பூங்குழலி எழுந்து போகிறதைக் கவனித்த வந்தியத்தேவன் அவளை தொடர்நது செல்கிறான்.

Sep 23, 202112 minSeason 2Ep. 4

பாகம் 2 -சுழற்காற்று - அத்தியாயம் 3 சித்தப் பிரமை

வந்தியத்தேவன் பூங்குழலியிடம் உரையாடியதில், அவளுக்கு சித்தப் பிரமை போலும் என்று எண்ணுகிறான். பூங்குழலி தன் பெற்றோர்களிடம் சக்கரவர்த்தியின் வைத்தியத்துக்காக மூலிகை தேடி இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூறுகிறாள்.

Sep 22, 202110 minSeason 2Ep. 3

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 2 சேற்றுப் பள்ளம்

பூங்குழலியைத் தொடர்ந்து சென்ற வந்தியத்தேவன் புதை சேற்றுக் குழியில் அகப்படுகிறான். பூங்குழலி வந்தியத்தேவனை சேற்றுக் குழியிலிருந்து காப்பாற்றிக் கரைசேர்த்து விடுகிறாள். வந்தியத்தேவன் சேந்தன் அமுதனைப் பற்றியும் அவளை துரத்திக் கொண்டு வந்ததன் காரணத்தையும் கூறுகிறான்.

Sep 21, 202111 minSeason 2Ep. 2

பாகம் 2 சுழற்காற்று - அத்தியாயம் 1 பூங்குழலி

கோடிக்கரையின் காட்சியும், கோடிக்கரைக் குழகர் கோயிலின் வரலாறும் விவரித்தல். சேந்தன் அமுதனின் மாமன் மகளான பூங்குழலியை பற்றி வர்ணிப்பு. அங்கு வந்தியத்தேவன் பூங்குழலியைப் பார்த்து பின்தொடர்ந்து பிடிப்பதற்கு ஓடுகிறான்.

Sep 20, 202116 minSeason 2Ep. 1

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 57 மாய மோகினி

கரிகாலன் தனக்குப் பட்டாபிஷேகம் நடந்த அன்று, எற்பட்ட அனுபவத்தைப் பார்த்திபேந்திரனிடம் கூறுகிறார். பிறகு நந்தினியை மறுபடி சந்தித்தது பற்றியும் அவள் இஷ்டப்படி என்னைச் செய்ய வைத்து விடுவாளோ என்றும் பயப்படுவதாகக் கூறுகிறார். பொன்னியின் செல்வன் முதலாவது பாகம் புதுவெள்ளம் முடிவடைந்தது.

Aug 18, 202113 minSeason 1Ep. 57

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 56 அந்தப்புரசம்பவம்

பார்த்திபேந்திரன் கரிகாலனிடம் நந்தினியைப் பிறகு எப்போது பார்த்தீர்கள்? பழுவூர் இளையராணி ஆன பிறகா? அதற்கு முன்னமேயா?” என்று கேட்கிறான். அதற்கு ஆதித்த கரிகாலன் பதில் கூறி தன் நெஞ்சில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை! என்று மனவேதனை அடைகிறான்.

Aug 13, 202119 minSeason 1Ep. 56

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 55 நந்தினியின் காதலன்

நந்தினி பழுவூர் ராணியாவதற்கு முன்னால் அவளைச் சந்தித்தது பேசிப் பழகியது உள்ளத்தைக் கவர்ந்தது பற்றி ஆதித்த கரிகாலன் பார்த்திபேந்திரனிடம் கூறுகிறான். வீரபாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்திய நிகழ்ச்சியையும் கூறுகிறான்.

Aug 12, 202117 minSeason 1Ep. 55

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 54 "நஞ்சினும் கொடியாள்"

பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனின் மனத்திலுள்ள வேதனையைக் கேட்கிறான். 1கரிகாலன் தன் மனவேதனைக் காரணம் பழுவூர் இளையராணி நந்தினி என்று கூறுகிறார்.

Aug 11, 202111 minSeason 1Ep. 54

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 53 மலையமான் ஆவேசம்

கரிகாலனிடமும், பார்த்திபேந்திரனிடமும் மலையமான் அரசர் நம்மைப் பெரிய அபாயம் சூழ்ந்திருக்கிறது என்றும் அதற்க்கான உபாயத்தையும் ,வந்தியத்தேவனைப் பற்றிய செய்தியையும் கூறுகிறார். பிறகு பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனின் மனவேதனையைக் கேட்க்கிறான்.

Aug 09, 202114 minSeason 1Ep. 53

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 52 கிழவன் கல்யாணம்

ஆதித்த கரிகாலன் உணவுப் பண்டங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய அவசியத்தைப் பார்த்திபேந்திரனிடம் கூருகிறான். கரிகாலனின் தாத்தா மிலாடுடையார், பழுவேட்டரையர்கள் கூட்டம் போடுவதின் நோக்கத்தையும், சுந்தரச் சோழரை தஞ்சைக் கோட்டையில் வைத்திருக்கும் காரணத்தையும் கூருகிறார்.

Aug 06, 202117 minSeason 1Ep. 52

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 51 மாமல்லபுரம்

மாமல்லபுரம் சுமார் முந்நூறு ஆண்டு காலத்துக்கு, முன்னும் பின்னும் காலத்தில் இருந்த காட்சி. ஆதித்த கரிகாலன், திருக்கோவலூர் மலையமான், பல்லவர் குலப் பார்த்திபேந்திரன் மூவரும் தஞ்சாவூரிலிருந்து வந்த செய்திகளைப் பற்றி பேசுகிறார்கள்.

Aug 05, 202113 minSeason 1Ep. 51

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 50 பராந்தகர் ஆதுரசாலை

குந்தவையும் வானதியும் ‘பராந்தகர் ஆதுரசாலை’ வைத்திய சாலைக்கு செல்கிறார்கள். குந்தவை குறிப்பினால் கோடிக்கரைக் காடுகளில் இருந்து மூலிகைகளை கொண்டு வர வந்தியத்தேவனும், வைத்தியரின் மகனும் புறப்படுகிறார்கள். வந்தியத்தேவனுடைய கண்களும் கண்ணிமைகளும் ஏதோ இரகசிய பாஷையில் குந்தவையிடம் பேசின.

Aug 04, 202118 minSeason 1Ep. 50

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 49 விந்தையிலும் விந்தை!

குந்தவைப் பிராட்டி வந்தியத்தேவன் நீட்டிய ஓலையைப் பெற்றுக் கொண்டு படித்தாள். வந்தியத்தேவன், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்து முதல் தான் வழியெல்லாம் சம்பாதித்துக் கொண்டப் பகைவர்களை பற்றிக் குந்தவை தேவியிடம் விவரமாகக் கூருகிறான். குந்தவை, இளவரசர் அருள்மொழிவர்மர்க்கு ஓலையையும் செய்தியையும் வந்தியத்தேவனிம் கொடுத்து அபாயம் நிறைந்த வேலையையும் கூருகிறாள்.

Aug 02, 202118 minSeason 1Ep. 49

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 48 நிர்ச் சுழலும் விழிச் சுழலும்

வந்தியத்தேவனை ஈசான சிவபட்டர் குந்தவை தேவியைத் தனிமையில் பார்க்க அழைத்து செல்கிறார். வல்லவரையனும் குந்தவை தேவியும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். வல்லவரையன் குந்தவை தமையனாரின் ஓலையை எடுத்து நீட்டிகிறான்.

Jul 30, 202115 minSeason 1Ep. 48

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 47 ஈசான் சிவபட்டர்

ஆழ்வார்க்கடியான் அவனுடைய தமையனார் ஈசான சிவ பட்டரின் வீட்டுக்குச் செல்கிறான். அவனுக்கு வீதி நாடக கோஷ்டியின் நினைவும் ,குரலும், அக்குரல் யாருடைய குரல் என்பது பற்றியும் விளக்கம் ஏற்படுகிறது. பிறகு ஆழ்வார்க்கடியான் குந்தவை தேவியின் மாளிகைத் தோட்டத்தின் மறைவான இடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

Jul 27, 202117 minSeason 1Ep. 47

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 46 மக்களின் முணுமுணுப்பு

ஆழ்வார்க்கடியான் இளையபிராட்டியின் மாளிகைக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் வீதிகளின் காட்சிகள் ,மக்களின் குதூகலத்தைப் பாழ்படுத்திய பறை முழக்கம் மற்றும் பழுவேட்டரையர்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய ஜனங்களின் எண்ணங்களை அறிந்து கொள்கிறான். ஆழ்வார்க்கடியானிடம் உலக நடப்பைக் குறித்துப் இளையபிராட்டி குந்தவை அறிந்து கொள்கிறாள்.

Jul 22, 202119 minSeason 1Ep. 46

பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 45 குற்றம் செய்த ஒற்றன்

குந்தவையும் வானதியும் ஒருவரை ஒருவர் கிண்டல் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது பறை சப்தம் கேட்டு, அதன் காரணச்செய்தியையும், பழுவேட்டரையர் காலாந்தககண்டரின் கட்டளையையும் கேட்டு குந்தவை ஏனோ நடுங்குகிறாள்.

Jul 01, 202112 minSeason 1Ep. 45
For the best experience, listen in Metacast app for iOS or Android