யானை இறவுத் துறையில் சேநாதிபதி, ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், மற்றும் இரு வீரர்கள் பிரயாணம் தடைப்படுகிறது. சிக்கிய படகை உபயோகித்துக் நள்ளிரவு வரையில் படகுக்காரனுடன் அவர்கள் கடலோரமாகப் படகில் பிரயாணிக்கிறார்கள். பாய்மரம் விரித்த மரக்கலத்தைப் பார்த்து இளவரசர் அதில் இருக்கிறார் என்று எண்ணி வந்தியத்தேவன் அப்படகில் ஏறுகிறான். கப்பலில் அரபு நாட்டு மனிதர்களையும், மந்திரவாதி ரவிதாஸனையும் பார்த்து தப்பிச் செல்ல எண்ணிய வந்தியத்தேவனை கட்டி அடித்தளத்தில் போடுகிறார்கள். ஆழ்வார்க்கடியான் தனக்கு அறிந்த வரைய...
Dec 28, 2021•19 min•Season 2Ep. 47
இளவரசரைச் சிறைப் பிடித்துப் போக வந்த கப்பல்களில் ஒன்று சேற்றில் கிடப்பதை பூங்குழலியும் இளவரசரும் பார்க்கிறார்கள். புதைந்த கப்பலில் ஊமை மூதாட்டியை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். அதிகாலையில் பூங்குழலி பெரிய மரக்கலத்தை இளவரசருக்கு காட்டிவிட்டு ஊமை ராணி போய்விட்டதையும் கூறுகிறாள்.அத்திசையில் சிறிய படகு வருவதும் அதில் ஒரு ஆள் குறைவாயிருப்பதும் கண்டு இளவரசர் மனக் கவலை அடைகிறார். சேநாதிபதி ஓடிவந்து இளவரசரைக் கட்டிக் கொள்கிறார்.
Dec 21, 2021•23 min•Season 2Ep. 46
இளவரசர் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் செய்த சூழ்ச்சியை கூறியது பூங்குழலியைக் கனவு உலகத்திலிருந்து பூமிக்கு வரச்செய்தது. எல்லாரும் தன்னைச் சிம்மாசனத்திலே தூக்கி வைக்கும் காரணத்தை இளவரசர் கூறுகிறார். மேலும் சக்கரவர்த்தியிடம் ஊமை ஸ்திரீ பற்றிய முக்கியமான விவரத்தை தெரிவிக்கவேண்டும் என்கிறார். பிறகு இருவறும் தங்களுக்கு மிகவும் பிடித்த சில காரியங்களைப் பற்றி பகிர்கிறார்கள். புலிக் கொடியுடன் கூடிய மரக்கலங்கள் பார்த்த இடத்தில் இல்லை என்று பூங்குழலி கூச்சலிடுகிறாள்....
Dec 20, 2021•22 min•Season 2Ep. 45
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்கிறான். இளவரசர், சேநாதிபதி, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி மற்றும் நாலு வீரர்களும் புறப்பட்டார்கள். வழியில் இளவரசரைக் குறி பார்த்து ஓர் அம்பு பாய்ந்து வந்தது. தடைப்பட்ட பிரயாணம் மறுபடியும் யானை மீது தொடர்கிறது.
Dec 15, 2021•22 min•Season 2Ep. 44
சக்கரவர்த்தியின் கட்டளை பேரில் இளவரசரைப் பிடித்துக்கொண்டு போக கப்பல்கள் வந்திருப்பதை பூங்குழலி விவரமாக சொல்லுகிறாள். பார்த்திபேந்திரன் மூலம் தெரிந்து கொண்ட பயங்கரமான விஷயத்தைத் சேநாதிபதி இளவரசரிடம் கூறிகிறார். இளவரசர் சமுத்திரகுமாரியிடம் கப்பல் இருக்கும் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போக சொல்லுகிறார்.
Dec 14, 2021•27 min•Season 2Ep. 43
சேநாபதியிடம் கூறிய செய்தியை இளவரசரிடம் வந்து சொல்லுமாறு வந்தியத்தேவன் பூங்குழலியிடம் கூறுகிறான். பூங்குழலியின் கத்தியைப் வந்தியத்தேவன் வீசி எறிந்த சம்பவத்தைப்பற்றி மண்டபத்தில் இருந்தவர்கள் கேட்கிறார்கள்.
Dec 13, 2021•9 min•Season 2Ep. 42
இளவரசர் வந்தியத்தேவனிடம் பூங்குழலியை அழைத்து வர சொல்கிறார். சேநாதிபதி கூறிய செய்தியின் கருத்து என்ன என்று அருள்மொழிவர்மர் கேட்கிறார். ஆழ்வார்க்கடியான் இளவரசரை பார்த்திபேந்திர பல்லவருடன் அனுப்புவதைவிட பழுவேட்டரையர்களிடமே பிடித்துக் கொடுத்துவிடலாம் என்கிறான்.
Dec 10, 2021•11 min•Season 2Ep. 41
வந்தியத்தேவன் ‘சமுத்திர குமாரி’ பெயர் நினைவிருக்கிறதா?”என்று இளவரசரிடம் கேட்கிறான். இளவரசர் பார்த்திபேந்திரனிடம் , தன் தமையனாரும், பாட்டனாரும் அனுப்பிய செய்தியை கேட்க்கிறார். பிறகு இளவரசர் , சேநாதிபதியின் யோசனை என்ன என்று வினவுகிறார். சேநாதிபதி, பூங்குழலி கொண்டு வந்த செய்தியைக் கூறுகிறார். கடைசியில் இளவரசர் "தனக்கு வரும் செய்திகளே தன்னை கொன்றுவிடும் போலிருக்கிறது!” என்று சொல்லிக் கொள்கிறார்.
Dec 09, 2021•16 min•Season 2Ep. 40
இளவரசரும், வந்தியத்தேவனும் கத்திச் சண்டை போடுகிறார்கள். ஆழ்வார்க்கடியான் வருகிற வீரர்கள் யார் என தெரிய குதிரைகளை சாலையின் குறுக்கே நிறுத்துகிறான். பூதி விக்கிரம கேசரியும், பார்த்திபேந்திரனும், பூங்குழலியும் கத்திப்போரை பார்க்கிறார்கள். இளவரசர், பார்த்திபேந்திர பல்லவரிடம் முக்கிய செய்தி என்ன என்று கேட்கிறார்.
Dec 08, 2021•11 min•Season 2Ep. 39
மூதாட்டி சென்ற வழியில் அருள்மொழிவர்மர் தோழர்கள் இருவரையும் தொடர்ந்து வரும்படி சொல்கிறார். மூதாட்டி ஒரு கதையில் நிகழ்ந்த சம்பவத்தொடர் சித்திரங்களையும், இளவரசருக்கு நேரக்கூடிய அபாயங்களைப் பற்றிய சித்திரங்களையும் இளவரசருக்குக் காட்டுகிறாள். மறுநாள் ஆயத்தமாக நின்ற குதிரைகளை பிடித்துக்கொண்டு இளவரசரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் புறப்பட்டார்கள்.
Dec 08, 2021•17 min•Season 2Ep. 38
வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் ஆர்வத்துடன் அந்த மாதரசியின் கதையைக் இளவரசர் செல்ல கேட்கிறார்கள். காவேரி அம்மன் தான் அந்தப் பெண் என்றும், அவள் ஊமை என்றும் , கொடிய நோய் பற்றி எச்சரிக்கை செய்ததாகவும் இளவரசர் கூறுகிறார்.
Dec 06, 2021•14 min•Season 2Ep. 37
நம் உயிரைக் காப்பாற்றிய அம்மாள் யார் என்று வந்தியத்தேவன் இளவரசரிடம் கேட்கிறான். இளவரசர், அவளைப் பற்றி தனக்குத் தெரிந்த செய்திகளை சொல்லுகிறேன் என்று சொன்னார்.
Dec 03, 2021•13 min•Season 2Ep. 36
பிக்ஷு சுரங்கப் பாதை வழியாக வழிகாட்ட, இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் பின் தொடர்ந்தார்கள். பிக்ஷு புத்த சங்கத்தால் எவ்வாறு இலங்கை அரசர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்பதைக் இளவரசரிடம் கூறிகிறார். பிறகு இளவரசரிடம் இலங்கை சிம்மாசனத்தில் அமர சம்மதமா என்று வினவுகிறார். இளவரசர் தன் உள்ளத்திலே உள்ள குரலின் கட்டளையை கூறுகிறார். பிறகு இளவரசர் அருள்மொழிவர்மரையும், ஆழ்வார்க்கடியானையும், வந்தியத்தேவனையும் யாரோ கையைத் தட்டி வீதியைக் கடக்க செய்து காப்பாற்றுகிறார். வந்தியத்தேவன...
Dec 02, 2021•26 min•Season 2Ep. 35
கூட்டத்தோடு கூட்டமாக நம் கதாபுருஷர்கள் மூவரும் அநுராதபுர நகருக்குள் பிரவேசித்துச் செல்கிறார்கள். இலங்கை நாட்டின் மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் வந்தியத்தேவனுக்கு இளவரசர் கூறுகிறார். குறிப்பிட்ட நேரத்துக்கு புத்தர்சிலை, செய்தி சொன்ன சிங்க முக அருவி விழும் தடாகத்துக்கு மூவரும் வந்தார்கள். சிங்க தடாகத்தில் திடீரென்று விளக்கு வெளிச்சம் கண்டு வந்தியதேவன் வியப்புடன் பார்க்கிறான்.
Dec 01, 2021•24 min•Season 2Ep. 34
இளவரசர் அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் ஆகிய மூவரும் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டு செல்கிறார்கள். வழியில் வந்தியத்தேவன், அரசிளங்குமாரின் வீரப் பிரதாபங்களையும், குணாதிசயங்களையும் கேட்டு அதிசியக்கிறான். இளவரசர்க்கு புத்தர் சிலையின் பாதங்களில் கிடைத்த ஒரு முக்கியமான செய்தியை இருவரிடமும் அறிவிக்கிறார்.
Dec 01, 2021•8 min•Season 2Ep. 33
வந்தியத்தேவனிடமும், ஆழ்வார்க்கடியானிடமும் அவர்கள் கொண்டு வந்த செய்தியை எல்லாம் விவரமாகச் கேட்கிறார் இளவரசர் அருள்மொழிவர்மர். அவர்களுக்கு பதில்களாக பெருங்கிள்ளி வளவன் யானைப் பாடலை கூறுகிறார். பிறகு இளவரசர், பார்த்திப பல்லவரை சந்தித்து அவர் சொல்வதையும் கேட்டுவிட்டு தன் முடிவை சொல்வதாக கூறுகிறார்.
Nov 30, 2021•14 min•Season 2Ep. 32
இளவரசர் அருள்மொழிவர்மரைச் சுற்றி எல்லைக்காவல் தளபதியும், வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் உட்கார்ந்து "ஏலேல சிங்கன்" சரித்திரக்கூத்து பார்க்கிறார்கள். பிறகு இளவரசர், ஆழ்வார்க்கடியானிடம் தனக்கு மூன்று மூத்தவர்கள் அனுப்பிய மூன்று விதமானச் செய்தியை ஊகித்துச் சொல்ல வினவுகிறார்.
Nov 27, 2021•10 min•Season 2Ep. 31
குதிரையிலிருந்த வீரனுக்கும், வந்தியத்தேவனுக்கும் துவந்த யுத்தம் நடந்தது. வீரன் வந்தியத்தேவனிடம் இருந்த ஓலையைக் கைப்பற்றினான். ஆழ்வார்க்கடியான்,வந்தியத்தேவனிடம் வீரன் யார் என்று கூறுகிறான்.
Nov 26, 2021•10 min•Season 2Ep. 30
வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் தம்பளை என்னும் புத்த புண்ணிய க்ஷேத்திரத்தை அடைந்தார்கள். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் யானைப் பாகனைப் பற்றி கூறுகிறான். யானைப் பாகன் ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னான். யானைப் பாகன் யாராக இருக்கும் என்று வந்தியத்தேவனுடைய உள்ளம் குமுறியது.
Nov 25, 2021•16 min•Season 2Ep. 29
ஆழ்வார்க்கடியான் மதயானையிடம் இருந்து தப்பியதைப் பார்த்து வந்தியத்தேவன் குதூகலம் அடைகிறான். இராஜபாட்டையில் பார்த்திரபேந்திர பல்லவனையும், அவனுடனிருந்த ஆட்களையும் பார்த்து வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் குழப்பம் அடைகிறார்கள்.
Nov 24, 2021•17 min•Season 2Ep. 28
சேநாதிபதி பூதி விக்கிரம கேசரிக்கு வந்தியத்தேவனிடம் நல்ல அபிப்பிராயம் உண்டாகியது. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இளவரசரைக் கண்டுபிடிக்க காட்டு பாதையில் செல்கிறார்கள். பிரயாணத்தில் காட்டு மிருகங்களினால் ஏற்படக் கூடிய அபாயங்களைப் பற்றி ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் பேசுகிறான். அங்கு ஒரு மதயானை வெறி கொண்டு அவர்களை நோக்கி வருகிறது.
Nov 23, 2021•15 min•Season 2Ep. 27
ஆழ்வார்க்கடியான் எப்படி அங்கு வந்தார் எதற்காக வந்திருக்கிறார் என்பதைப்பற்றி வந்தியத்தேவனுடைய உள்ளம் கலக்கமடைகிறது. சேநாதிபதி விக்கிரமகேசரி கொடுத்த ஓலையையும், பழுவூர் பனை இலச்சினையையும் வந்தியத்தேவனிடம் ஆழ்வார்க்கடியான் கொடுத்தான்.
Nov 20, 2021•11 min•Season 2Ep. 26
வந்தியத்தேவன் மாதோட்ட மாநகரை அடைந்து சோழ சேநாதிபதியைப் பார்க்க வேண்டும் என்கிறான். அச்சமயம் இலங்கைப் படையின் சேநாதிபதியாக இருந்த கொடும்பாளூர்ப் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி , முதன் மந்திரி அநிருத்தப்பிரமராயருடன் பேசிக் கொண்டிருந்தால் வந்தியத்தேவனைக் காவலில் வைக்க சொல்கிறார். பிறகு வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை அறையில் பார்க்கிறான்.
Nov 19, 2021•10 min•Season 2Ep. 25
பழுவேட்டரையரைப் பார்த்து நந்தினியும் கந்தமாறனும் திடுக்கிடுகிறார்கள். ஆதித்த கரிகாலனுக்கு ஓலை கொடுத்து கடம்பூர் மாளிகைக்கு அழைக்கும் காரணத்தை பழுவேட்டரையர் அவர்களிடம் வினவுகிறார். நந்தினி காரணத்தைக் கூறி பழுவேட்டரையரைப் பார்த்த பார்வை அவரை குழறச்செய்தது.
Nov 18, 2021•16 min•Season 2Ep. 24
நந்தினி காஞ்சியில் உள்ள இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு ஒரு நிருபம் ஒன்று எழுதுகிறாள். கந்தன்மாறனிடம் நிருபத்தைக் கொடுத்து இளவரசரிடம் சேர்ப்பித்து அவரைக் கடம்பூர் அரண்மனைக்கு விருந்தாளியாக அழைக்க வேண்டும் என்று கூறுகிறாள். அச்சமயம் பழுவேட்டரையர் அரண்மனைக்குள் வருகிறார்.
Nov 17, 2021•13 min•Season 2Ep. 23
குந்தவையும் வானதியும், தங்க நாணயங்களை வார்ப்படம் செய்ய தனாதிகாரி பழுவேட்டரையர் ஏற்படுத்திய தங்க சாலையைப் பார்வையிடுகிறார்கள். பிறகு பாதாளச் சிறையில் சேந்தன் அமுதனை பார்க்கிறார்கள். ஒற்றன் தப்பித்த செய்தியை அவனிடமிருந்து தெரிந்து கொள்ளகிறார்கள்.
Nov 05, 2021•18 min•Season 2Ep. 22
குந்தவை, நந்தினி, கந்தன்மாறன் மூவரும் அரண்மனை மேன்மாடத்தின் முகப்பில் நின்று ஒற்றனைப் பார்க்கிறார்கள். பிறகு இரண்டு பெண் புலிகளாகிய குந்தவைக்கும், நந்தினிக்கும் நடந்த போராட்டம்.
Nov 02, 2021•9 min•Season 2Ep. 20
இளைய பிராட்டியை சின்னப் பழுவேட்டரையர் காத்திருந்து சித்திர மண்டபத்துக்குள் வரவேற்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் நடைபெறுகின்றன. பிறகு குந்தவை வைத்தியர் மகனை விடுதலை செய்ய பாதாளச் சிறையின் சாவியைப் பெற்று லாப நஷ்டங்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளகிறாள்.
Nov 02, 2021•15 min•Season 2Ep. 21
சக்கரவர்த்தியிடமும் அவர் குடும்பத்தாரிடமும் மக்கள் கொண்ட விசுவாசம் பெரிய பழுவேட்டரையருக்கும், சின்னப் பழுவேட்டரையருக்கும் எரிச்சலை உண்டுபண்ணின. பெரிய பழுவேட்டரையர் அரண்மனைக்கு குந்தவை வருவது பற்றி நந்தினியிடம் பெரியவர் கேள்வி கேட்கிறார். கந்தன்மாறனின் கதையைக் குந்தவை தேவி கேட்டு எண்ணமிடுகையில், ஒற்றன் அகப்பட்டான் என்ற செய்தி வந்தது.
Nov 01, 2021•12 min•Season 2Ep. 19
குந்தவை தன் தந்தையின் பெயரால் ஆதுரசாலையை ஆரம்பித்தும் அதற்குரியதான சாஸனங்களை எழுதிக் கொடுக்கும் வைபவம். பழுவூர் இளையராணி நந்தினியும், குந்தவை தேவியும் பேசும் உரையாடல். பிறகு குந்தவை தேவி நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மாறுதல் நிகழந்ததா?
Oct 29, 2021•13 min•Season 2Ep. 18