பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 44 எல்லாம் அவள் வேலை
செம்பியன் மாதேவி ஆழ்வார்க்கடியானிடம் என்ன முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்க்கிறார். ஆழ்வார்க்கடியான் பார்த்த, கேள்விப்பட்ட விவரங்களை கூறுகிறான்.

செம்பியன் மாதேவி ஆழ்வார்க்கடியானிடம் என்ன முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்க்கிறார். ஆழ்வார்க்கடியான் பார்த்த, கேள்விப்பட்ட விவரங்களை கூறுகிறான்.
பழையாறையின் காட்சியை வர்ணித்தல். பழையாறை அரண்மனைகளில் வாழும் மகாராணிகளும், இளவரசிகளும் விண்ணாகரக் கோயிலில் இருந்து வெளிவருகிறார்கள். பெரிய பிராட்டி மற்றும் குந்தவைதேவியின் கவனத்தைப் பெற ஆழ்வார்க்கடியார் உரத்த சத்தம் போட்டு பாடுகிறார்.
வந்தியத்தேவன் கந்தமாறனைக் காப்பாற்ற பிரயத்தனம் செய்கிறான். கந்தமாறனை காப்பாற்ற அமுதனுடைய உதவியை நாடுகிறான். வந்தியத்தேவன் தப்பித்துச் செல்ல அமுதன் உதவி செய்கிறான்.
வந்தியத்தேவன் வழித் தவறி பொக்கிஷ நிலவறையில் அகப்பட்டு, அங்கிருந்து தப்பிக்க வழி தேடுகிறான். அப்பொழுது அங்கு அபூர்வமான காட்சியைக் காண்கிறான்.
வந்தியத்தேவன் லதா மண்டபத்து அருகில் இருந்த இருள் மாளிகைக்குள் நுழைகிறான். அங்கு கந்தமாறனும் , இளவரசர் மதுராந்தகத்தேவறும் அவ்வழியை பயன்பட்டுத்தும் மர்மம் புரிகிறது.
பெரிய பழுவேட்டரையர் நந்தினியிடம் மந்திரவாதியை அழைப்பதன் காரணத்தையும், விருப்பத்தையும் வினவுகிறார். பிறகு அவளின் வார்த்தைகளைக் கேட்டு அவரது தலை சுழறுகிறது.
சின்ன பழுவேட்டரையர் கூறிய வார்த்தைகள் பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் கலக்கம் ஏற்படுத்துகிறது. எனவே சிற்சில விஷயங்களை நந்தினியின் வாய்பொறுப்பில் கேட்டுவிட முடிவு செய்கிறார்.
சின்ன பழுவேட்டரையராகிய காலாந்தக கண்டர்,அண்ணன் பெரிய பழுவேட்டரையரை வரவேற்க்கிறார். பெரிய பழுவேட்டரையர் தான் சென்றிருந்த காரியம் பூரண வெற்றி என்று கூறுகிறார். சின்ன பழுவேட்டரையர் வந்தியத்தேவனையையும், முத்திரை மோதிரத்தையும் பற்றி வினவுகிறார். இருவறும் வாக்குவாதம் போட்டுக் கொள்கிறார்கள்.
நிஜ மந்திரவாதி யார் என்று தெரிகிறது. அவன் நந்தினி பழுவூர் இளையராணியிடம் சில சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறான். நந்தினி அவன் வந்த காரியம் எதற்கு என்று வினவுகிறாள்.
வந்தியத்தேவன் , பழுவூர் இளையராணி நந்தினியிடம் தான் தப்பிச் செல்ல உதவி கோருகிறான். நந்தினி ஒரு நிபந்தனையின் பேரில் தப்பித்து விட ஒப்புக் கொள்கிறாள். அச்சமயம் நிஜ மந்திரவாதி வருகிறான்.
வந்தியத்தேவனை மந்திரவாதி என்று அழைத்துக் கொண்டு வந்த பெண் லதா மண்டபத்துக்குள் நுழைகிறாள். வந்தியத்தேவன் தான் சந்திக்க போவது யார் என்று அறிந்து கொண்டு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான்.
வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையில் இருந்து தப்பிச் செல்லும் யுக்திகளை ஆலோசிக்கிறான். பழுவுர் இளையராணி நந்தினியிடம், ஆழ்வார்கடியான் பெயரைச் சொல்லி தப்பிக்க எண்ணி அதற்க்கான சந்தர்ப்பத்தை எதிர் கொள்கிறான்.
சின்னபழுவேட்டரையரிடம் , வந்தியத்தேவன் தனது உடையும், உடைமைகளும் திருப்பி வருமாறு ஏற்பாடு செய்ய கேட்க்கிறான்.
வந்தியத்தேவன் தஞ்சைக்கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு ஒரு யுக்தி கண்டுபிடிக்கிறான்.
வந்தியத்தேவன் சோழ வம்சத்தின் பூர்விக அரசர்களின் சித்திரங்களைச் சித்திரமண்டபத்தில் பார்க்கிறான். நூறு வருச சோழ மன்னரகளின் பரம்பரைக் சுருக்கம்.
சக்கரவர்த்தினி வானமாதேவி , சின்ன பழுவேட்டையரிம் வந்தியத்தேவன் நம் விருந்தாளி என்று கூறுகிறார். மேலும் சக்கரவர்த்தி இரண்டு இளவரசர்களுக்கும் அழைப்பு அனுப்பவும் கூறுகிறார்.
வந்தியத்தேவன் குந்தவை தேவிக்குக் கொண்டு வந்த ஓலைக் காணாததால் , புலவர்களுடனே நழுவ எண்ணுகிறான்.
வந்தியத்தேவன் சக்கரவர்த்தியிடம் சொல்ல விரும்பியதை முழுதும் சொல்ல விரும்பி புலவர் கூட்டத்துடன் உட்கார்கிறான்.
வந்தியத்தேவன் சின்ன பழுவேட்டரையரிடம் அனுமதி பெற்று சக்கரவர்த்தியைப் பார்க்க செல்கிறான். அவன் இளவரசர் ஆதித்தரின் ஓலையையும், விண்ணப்பத்தையும் சக்கரவர்த்தியிடம் கூறினான?
வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையை காஞ்சியுடன் ஒப்பிட்டு பிரம்மிக்கிறான். கோட்டைக்குள் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு யுக்தி செய்கிறான்.
வந்தியத்தேவன் சக்கரவர்த்தியின் தரிசனத்துக்காகப் புறப்படுகிறான். வழியில் அமுதனுடன் பேச்சுக் கொடுத்து சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.
வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையை சுற்றி பார்க்கிறான். பூக்கார வாலிபனான சேந்தன் அமுதனை சந்திக்கிறான். அவனிடம் கோட்டைக்குள் யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறான்.
வந்தியத்தேவன் பல்லக்கில் பழுவேட்டரையரின் மனைவி நந்தினியை சந்திக்கிறான். தஞ்சைக் கோட்டை வாசலில் வேளக்காரப் படையின் ஊர்வலத்தை பார்க்கிறான்.
தஞ்சாவூர் கோட்டைக்குள் பிரவேசித்து மகாராஜாவிடம் ஓலையைக் கொடுக்கும் வழியை யோசிக்கிறான். கடம்பூரிலிருந்து வந்த பல்லக்கை அவன் பின் தொடர்ந்து செல்லத் தீர்மானிக்கிறான்.
கூட்டத்தின் தலைவனான ரவிதாஸன் சோழ குலத்தை அடியோடு அழிப்பதற்க்கான ஆலோசனையைக் கூறுகிறான். மேலும் ஆழ்வார்க்கடியானைப் பற்றியும் எச்சரிக்கை செய்கிறான்.
திருப்புறம்பியம் சண்டையில் நடந்த வீரச்செயலும், அப்படையில் உயிர் நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக பள்ளிப்படை கட்டிய வரலாறு. ஆழ்வார்க்கடியானுக்கு சதிகார்களின் பேச்சு தெளிவாக கேட்க்காததால் அருகில் செல்ல முனைகிறான். சதிகார்கள் சத்தம் கேட்டு பார்க்கின்றனர்.
வந்தியத்தேவனுக்கு குதிரை பிடித்துக் கொண்டு வந்த இடும்பன்காரியின் மீது ஆழ்வார்க்கடியானுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
குந்தவைத்தேவி வானதியின் பயந்த சுபாவத்தைப் போக்க பொம்மை முதலை விளையாட்டை தோழிகளுடன் விளையாடுகிறார். வந்தியத்தேவன் தன் வேல்லை எடுத்துக் கொண்டு சினத்துடன் குதிரையில் பாய்கிறான்.
சுந்தரசோழரின் கடைசி புதல்வர் அருள்மொழிவர்மரை இலங்கைக்கு அனுப்பும் சைன்யத்துக்கு தளபதி ஆக்குகிறார் குந்தவைதேவி. அருள்மொழிவர் போர்க்குப் புறப்படும் நேரம் வானதியின் மீது கவனம் விழும்படி நிகழ்ச்சி நடைப்பெறுகிறது.
குந்தவை வானதியை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றதால், மற்றத் தோழிமாற்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அதனால் வானதியிடம் பொறாமைக் கொண்டு போட்டி கொள்கிறார்கள்.