சென்னையில் தன் சிறிய உலகத்தை அமைத்துக் கொண்ட ஸ்ரீ சுப்பையா பிள்ளை, குடும்பப் பொறுப்புகள், அலுவலக வாழ்க்கை, தினசரி பயணங்கள் என நடுத்தர வர்க்க வாழ்வின் சிக்கல்களுக்கு இடையே தன் உள்ளார்ந்த ஆசைகளுடன் போராடுகிறார். புதுமைப்பித்தனின் நகைச்சுவையும் நுட்பமான மனித அவதானிப்பும் நிறைந்த இந்தச் சிறுகதை, சாதாரண மனிதனின் இதயத்தில் ஒளிந்திருக்கும் பல காதல்களை அழகாக வெளிப்படுத்துகிறது. To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/me...
May 22, 2026•7 min
1. இஸ்லாம் மதத்தின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றி சொல்வீர்களா? 2. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் சொர்க்கம் நரகம் பற்றிய கோட்பாடுகள் பற்றியும் இறுதி நாள் தீர்ப்பு பற்றியும் சொல்வீர்களா? இந்துமதத்தின் சொர்க்க நரக கோட்பாடுகளிலிருந்து அவை எவ்விதம் வேறு படுகின்றன? 3. இஸ்லாம் மதத்தின் ஷியா சுன்னி பிரிவுகள் பற்றியும் அவர்களுக்கிடையே இருக்கும் போராட்டங்கள் பற்றியும் சொல்வீர்களா? 4. இஸ்லாமின் ஸூஃபி பிரிவினர், அஹ்மதியா பிரிவினர் பற்றி சிறிது விளக்குவீர்களா? 5. பாரதத்தில் இஸ்லாம் பரவிய விதம் பற்றி பற்றி சி...
May 20, 2026•21 min
ஒரு சிறுகதை எழுத்தாளருக்கு தூக்கம் பிடிக்காத இரவு. திடீரென மனதைத் தாக்கும் விசித்திர அனுபவங்கள், இருளில் மனம் அலைபாயும் பிரமைகள்… மறுநாள், வீட்டுக்கு வரும் பிச்சைக்காரி காஞ்சனையின் வருகை அவரது அமைதியான மனதை சீர்குலைக்கிறது. அவள் சொல்லும் கதைகளும், அவளைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் அவரைப் பீதியிலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றன. புதுமைப்பித்தனின் உளவியல் நுட்பமும், மர்மமும், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையிலான எல்லையை பரிசோதிக்கும் சிறுகதை. To listen to full audiobook subscribe to Kadhai Os...
May 15, 2026•10 min
In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters! For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop #podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting
May 09, 2026•7 min
In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters! For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop #podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting
May 09, 2026•6 min
உறையூர் அரசு லாயத்தில் பாரசீகக் குதிரைகள் பதினொன்று மாயமாகின்றன. தன் உயிருக்கு உலை வைக்கும் நிலையில் தலைமைச் சேவகன் மாரப்பன் கோயிலில் முறையிடுகிறான். அங்கு ‘பரிபாஷை’ தெரிந்த ஒரு மர்ம இளைஞன் வருகிறான். சோழர் காலத்தின் பக்தி, பேராசை, நட்பு ஆகியவை நிறைந்த திருப்பம் மிகுந்த சிறுகதை. To listen to more audiobooks subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id644251...
May 08, 2026•21 min
1. கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபை பற்றியும், உலகம் முழுவதும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதத்தில் அமைந்த அதன் செயல்பாட்டைப் பற்றியும் சொல்ல முடியுமா? 2. இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல இயலுமா? 3. கிறிஸ்துவ மதத்திலுள்ள பிரிவுகளான காத்தோலிக் -- ப்ராட்டஸ்டண்ட் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்வீர்களா? 4. முகம்மது நபி பற்றியும், அவர் எப்படி இஸ்லாமை மாபெரும் மத சக்தியாக உருவாக்கினார் என்பது பற்றியும், இஸ்லாம் எப்படி உலகளாவிப் பரவியது என்றும் விள...
May 06, 2026•19 min
அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை. To listen to more audiobooks subscribe to Kadhai Osai - Premium: YouTube - htt...
Apr 24, 2026•1 hr 31 min
ஹாஸ்யமும் திகிலும் கலந்த ‘horror comedy’ இன்றய திரைப்படங்களில் நாம் நிறையவே பார்க்கிறோம். ஆனால் 1940களிலேயே கல்கி இந்த கதையை படைக்கிறார். ஒரு விதத்தில் நம் மனம் என்னும் வீட்டில் குடி இருக்கும் மூட நம்பிக்கை என்னும் பேய்களை உருவகமாக இதில் காட்டியதாக கொள்ளலாம். To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https...
Apr 17, 2026•26 min
1. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றும் ஆபிரஹாமிய மதங்கள் எனக் குறிப்பிடப்படுவது ஏன்? 2. யூத மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 3. கிறிஸ்துவ மதம், அதன் கோட்பாடுகள், நம்பிக்கைகள், கலாசாரம் பற்றி விளக்க முடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_...
Apr 17, 2026•15 min
விரலுக்கேத்த வீக்கம் வேண்டும் என்பது வீட்டு வரவு செலவுக்கு பொருத்தமான சொற்கள். மனைவியின் தங்க ஒட்யான ஆசையை நிறைவேற்ற கணவன் படும் அவஸ்த்தையை ஒரு ஹாஸ்யமான புனைவாக தருகிறார் கல்கி To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamilaudiobooks #tamilbooks #kalki...
Apr 13, 2026•38 min
அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு ம...
Apr 10, 2026•39 min
காட்டை வென்று, தன் மக்களுக்கான ஒரு நிலத்தை உருவாக்கத் துடிக்கும் ஒரு மனிதனின் தீரா வேட்கையே இக்கதை. மண்ணை ஆக்கிரமிக்கும் மனிதனுக்கும், அந்த மண்ணின் ஆதி உரிமையாளனான ஒரு யானைக்கும் இடையே நடக்கும் தார்மீகப் போராட்டம். காலத்தின் சுழற்சியில் காடு கருகி, நிலம் வரண்டு, அதிகாரத்தின் திமிர் அடங்கும்போது, எஞ்சியிருப்பது என்ன? பகையும் குரோதமும் கரைந்து போகும் ஒரு புள்ளியில், தாகம் கொண்ட இரு உயிர்கள். மனித அறத்தின் உச்சத்தையும் இயற்கையின் மகா கருணையையும் பேசும் ஜெயமோகனின் சிறுகதை. To listen to the full audi...
Apr 07, 2026•16 min
ஒரு பிரபல பெண் நட்சத்திரம் தன் வாழ்க்கையை தானே பகிரும் ஒரு சுய சரிதை புனைவு . To listen to more audiobooks Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamilaudiobooks #tamilbooks #kalki #kalkishortstories #deepikaarun #kadhaiosai #audiosintamil #tamilaudiostory #tamilaudiostorybook...
Apr 07, 2026•52 min
ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - h...
Apr 03, 2026•28 min
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்...
Mar 31, 2026•2 hr 2 min
அப்பாசாமி என்னும் மாஸ்டர் மெதுவடை ஒரு பெண் மேல் கொள்ளும் மையலை கல்கியின் ஹாஸ்யத்துடன் கலந்து கேளுங்கள். To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil...
Mar 30, 2026•18 min
ஒரு கிராமத்துப் பையனின் அப்பாவித்தனமான பார்வையில் தொடங்கும் உலகம் — ஆற்றங்கரை, பலாப்பழ மணம், புழுங்கல் நெல் வாசம், சந்திரி அக்காவின் சிரிப்பு — மெல்ல மெல்ல ஒரு பழைய, ஆழமான இருள் நோக்கி நகர்கிறது. ஜோசியர் தாத்தா கொண்டு வரும் செய்தி, வீட்டில் நடக்கும் அமைதியற்ற நிகழ்வுகள், மரபு சார்ந்த சடங்குகளின் கோர ஒலிகள்… எல்லாமே ஒரு குழந்தை மனதில் பதியும் நிழல்களாக மாறுகின்றன. பயம், ஆச்சரியம், புரியாத ரகசியங்கள் நிறைந்த ஜெயமோகனின் இந்த சிறுகதை, தீபிகா அருணின் உணர்ச்சிகரமான குரலில் உயிர்ப்பிக்கப்படுகிறது. To l...
Mar 28, 2026•10 min
ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யான...
Mar 26, 2026•1 hr 22 min
கணவனின் அன்புக்கும் ஸ்பரிசத்துக்கும் ஏங்கும் ஒரு பெண் தன்னோடு ஒத்த வயது பெண்ணின் தாம்பத்திய அந்யோன்யத்தை பொருக்க முடியாமல் தவிக்கிறாள். ஆசூயைக்கு வடிகால் நிம்மதி தருமா? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai...
Mar 24, 2026•10 min•Season 9Ep. 5
1. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து வந்த மதங்கள்தாம் ஜைன மதமும் புத்த மதமும் என்றால் அது சரியா? 2. சமண மதமும், ஜைன மதமும் ஒன்றா? 3. ஜைன மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 4. ஜைனத்தில் தீர்த்தங்கரர் என்பவர்தான் கடவுள் என்றோ இல்லை அவதாரம் என்றோ சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் சொன்னால் பொருந்துமா? 5. பாரதத்தில் ஜைன மதத்தைப் பின்பற்றுவோர்கள் எத்தனை சதவீதம்? பௌத்தம் போல் ஜைனமும் பல நாடுகளில் பரவியுள்ள ஒரு மதமா? 6. புத்த மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள்...
Mar 24, 2026•20 min
1. நீங்கள் இதுவரை சொல்வதைக் கேட்டால் ஒருவர் பிரபத்தி செய்துகொண்டுவிட்டால் அவருக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதாகத் தெரிகிறது. உண்மை அப்படி இருக்க, அவரது வாரிசு 13 நாள் ஈமக் கிரியைகளும் சிராத்தமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே? ஆனால் யாரும் செய்யாமல் விடுவதாகத் தெரியவில்லையே? 2. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்த உறவினரின் அஸ்தியை எடுத்து கங்கையில் இடுவதன் மூலம் அன்னாரது ஆத்மாவுக்கு நற்கதி கிடைக்குமா? 3. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் இறந்தவர்கள் கடவுளுக்கு சமம் என்கின்றனர், ஆனால்...
Mar 12, 2026•20 min
1. இறந்த பெற்றவர்களுக்கு செய்யும் ஈமக் கிரியைகளும், சிராத்த சடங்குகளும் ஒரு இல்லறத்தான் கட்டாயமாக செய்யவேண்டிய கடமையா? ஆண் மகன் இல்லாத குடும்பத்தின் நிலை என்ன? பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள், உலக வாழ்க்கையைத் துறந்த சன்னியாசிகளின் நிலை என்ன? 2. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நரகத்தில் போய் வீழ்வார்கள் என்று வேத சாஸ்திரங்கள் உண்மையிலேயே சொல்கின்றனவா? 3. முக்தி அல்லது மோட்சத்தை அடையத் தகுதி பெற்ற ஒருவனின் மரணத்துக்குப் பிந்தைய பயணத்தைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? 4. இன்றை...
Feb 28, 2026•20 min
1. மரணம் எப்போது நிகழும் என்று யார் அல்லது எது தீர்மானிக்கிறது? 2. உயிரோடு வாழ்கையில் நமக்கெல்லாம் ஸ்தூல தேகமும், சூட்சும தேகமும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இவற்றை சற்று மேலும் விளக்குவீர்களா? சூட்சும தேகம் உடலை விட்டு நீங்குவதுதான் மரணமா? 3. மரணத்துக்குப் பிறகு என்ன நேர்கிறது? அந்த ஜீவாத்மாவின் நிலை, அதற்காக செய்யப்படும் சடங்குகள், பின் அதன் பயணம் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? 4. எம லோகம், பித்ரு லோகம், சொர்க்கம், நரகம் இவை பற்றி புராணங்களில் சொல்லப் படும் கருத்துகள் என்ன? 5. தற்கொலை ச...
Feb 13, 2026•24 min
1. முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களுக்கு மீண்டும் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாலாலயம் என்பது என்ன? 2. கோவில்களில் வழிபடும் தெய்வங்களுக்கு ஏன் இத்தனை ஆடை அலங்காரங்களும், பொன் வைர வைடூரிய நகைகளும், ஆடம்பரங்களும், நைவேத்தியங்களும், உபசாரங்களும் திருவிழாக்களும் அவசியம்? பகவத் கீதையில் பகவான், தான் ஒருவன் பூரண பக்தியோடு இலையோ, பூவோ, பழமோ, நீரோ சமர்ப்பித்தாலும் தான் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறாரே? 3. தமிழக பக்தர்கள் கடவுளை தேடி ஏன் அண்டை மாநிலங்களுக்...
Feb 04, 2026•18 min
1. முழுதாக கட்டி முடிக்கப் பட்ட ஒரு கோவிலில் இறை விக்ரகத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்து அது முறைப்படி வணங்கத்தக்கதாக ஆவதற்கு உள்ள நடைமுறைகளைப் பற்றி சற்று விளக்க முடியுமா? 2. எல்லாக் கோவில்களும் பிரபலமாவதில்லையே? ஏன் ஒரு சில கோவில்கள் மாத்திரம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன? எத்தனையோ பல கோவில்கள் நலிவுற்று, அன்றாட விளக்கு ஏற்றவோ பூஜை செய்யவோ இயலாத அளவுக்கு ஏன் நலிவுற்றுப் போகின்றன? மிகத் தொன்மையான, பாடல் பெற்ற ஸ்தலங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையே? 3. பரவலாக மக்கள் தொடர்ந்து வந்து பூஜைகளும் ...
Jan 27, 2026•21 min
"விஷம் இல்லாவிட்டால் அமுதம் இல்லை." ஜனமேஜயனுக்கும் தட்சகனுக்குமான பகையை அடிப்படையாகக் கொண்ட இக்குறுநாவல், மகாபாரதத்தின் கிளைக்கதையை ஒரு தத்துவ தரிசனமாக மாற்றுகிறது. தட்சகனை காமத்தின், இயக்கத்தின் குறியீடாக மாற்றிக் காட்டும் ஜெயமோகன், அவனூடாக வாழ்வின் இருமையை ஆராய்கிறார். உலகப்புகழ் பெற்ற ‘வெண்முரசு’ நாவல் வரிசைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும், மனித மனதின் ஆழங்களை ஊடுருவும் படைப்பாகவும் இது திகழ்கிறது. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtub...
Jan 21, 2026•11 min
1. அகில இந்தியாவிலும் பரவியுள்ள எல்லாத் தொன்மையான கோவில்களும் ஆகம முறைப்படி உருவாக்கப் பட்டு, அவற்றின் படி பூஜைக்கிரமங்களை மேற்கொள்கின்றனவா? 2. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான சிவன் கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன? 3. வைஷ்ணவ ஆகமங்களான பாஞ்சாராத்ரம், வைகானஸம் இரண்டுக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசங்கள் என்ன? 4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் உள்ள பிரபலமான வைஷ்ணவ கோவில்களில் எந்த ஆகம முறைகள் பின்பற்றப் படுகின்றன? 5.கேரள சைவ வைஷ்ணவ கோவில்களில் பின்பறப்படும் ...
Jan 13, 2026•16 min
To join the community, please fill the form given below: https://forms.gle/CRhVg4aKhu5Y32VaA #deepikaarun #audiobooks #audiobookcommunity #lovetolisten #stories #tamilaudiobooks
Jan 04, 2026•2 min
ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள். அவள் அழகி. அவள் தைரியசாலி. அவள் சாமர்த்தியசாலி. அவள் ஏமாற்றுக்காரி. மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள். கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.yout...
Dec 29, 2025•11 min