அகஸ்தியர் கால் பதியாத தேசமே இல்லை Agasthiya Yathirai
Jul 02, 2024•10 min
Episode description
வேதம் பிறந்தபோதே அகஸ்தியரும் தோன்றி விட்டார். இமயம் முதல் குமரி வரை அகஸ்தியர் கால் பதியாத தேசமே இல்லை. விந்திய மலையைக் கடந்ததன் மூலம் பாரத தேசத்தில் வடமுனைக் கோடி இமயத்திலிருந்து தென்முனைக் கோடி பொதிகை வரையில் ஓர் மிகப் பெரிய இணைப்புப் பாலமாக அகஸ்தியர் விளங்கினார்.
சங்ககாலச் செய்யுள்களில் அகஸ்தியர் இடம் பெற்றுள்ளார். அகஸ்தியரின் பெயரைக் குறிப்பிடாமல் எந்தவொரு மருத்துவ நூலும் கடந்த நூற்றாண்டுகளில் இல்லை. பாரதத்தில் மட்டுமின்றி ஈழம், சாவகம், கடாரம், மலாய் நாடுகளிலும் அகஸ்தியர் குறித்த சான்றுகள் உள்ளன.
அகஸ்தியரைக் குறித்துப் பற்பல தகவல்கள் செய்திகளாக, இலக்கியச் சான்றுகளாக, கட்டுக் கதைகளாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு அவரது இமயம் முதல் பொதிகை வரையிலான பயணத்தைக் கூறும் நூல் இது. சித்தராக, மருத்துவராக, தமிழுக்கு ஆதி இலக்கண நூல் படைத்தவராக அறியப்படும் அகஸ்தியரின் பயணத்தை முழுமையாக, இலக்கியச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார் சத்தியப்பிரியன்.
எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Author:
Sathiyapriyan
Narrator:
Bhavani Anantharaman
Publisher:
Itsdiff Entertainment
For the best experience, listen in Metacast app for iOS or Android
Open in Metacast