கண்ணைத் திறக்க முடியாத வானதி, குந்தவை தேவியும், குடந்தை ஜோதிடர் வீட்டில் பார்த்த வாலிபரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்கிறாள். இளவரசர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார் என்ற செய்தியை வானதி கேட்கிறாள். இராஜ்யம் ஆளப்பிறந்தவர்கள் இராஜ குலத்திலே பிறந்தவரை கலியாணம் செய்ய வேண்டும் என்று குந்தவை வந்தியத்தேவனிடம் விவாதம் செய்கிறாள். வானதி கண் விழிக்கும் சமயத்தில் ஆழ்வார்க்கடியான் அங்கு பிரவேசிக்கிறான்.
Sep 08, 2022•16 min•Season 3Ep. 24
கொடும்பாளூர் இளவரசியின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடும் வர்ணனைகள். வானதியின் சுபாவத்துக்குக் பிறந்த வேளையும் வளர்ந்த காலமும் என்ற ஊகித்தலின் விளக்கம். வானதி பழையாறை அரண்மனைக்குப் போனபிறகு குந்தவைதேவியின் அன்பினால் அவளின் வாழ்க்கையிலும், மனப்போக்கிலும் ஏற்பட்ட மாற்றம். பொன்னியின் செல்வரிடம் வானதியின் உள்ளம் சென்ற விஷயம். பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கிய செய்தி கேட்ட வானதி தண்ணீரிலே விழ்கிறாள். குந்தவை வானதியின் மூர்ச்சையைத் தெளிவிக்கிறாள்.
Sep 07, 2022•22 min•Season 3Ep. 23
வந்தியத்தேவனை படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவையிடம் விட்டுவிட்டு ஆழ்வார்க்கடியான் வந்தவழியாக திரும்பிச் செல்கிறான். ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்த வந்தியத்தேவன் தன்னையே மறந்து நிற்கிறான். குந்தவை, வந்தியத்தேவனிடம் போன காரியம் என்ன ஆயிற்று என்று வினவுகிறாள். அச்சமயம் பயங்கரமான சத்தம் கேட்டு அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் சத்தம் வந்த திசையை நோக்குகிறார்கள்.
Sep 02, 2022•11 min•Season 3Ep. 22
சோழ நாட்டின் பாரத்தை கண்டராதித்த தேவர் வகிக்கும்படியாக நேர்ந்த கதையும், சுந்தர சோழர் இளவரசுப் பட்டம் கட்டிய கதையும், சுந்தர சோழரின் சந்ததியர்கள் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்ற வாக்கையும் செம்பியன் தேவி கூறுகிறார். பிறகு சோழ குலத்துச் சிம்மாசனத்தில் மதுராந்தகன் ஏற ஆசை கொண்டதைப் பற்றி கேள்வி கேட்கிறார். மதுராந்தகன் சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும், பழுவேட்டரையர்களும் தன் பக்கம் இருப்பதை தாயிடம் கூறுகிறான். இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அர...
Sep 01, 2022•20 min•Season 3Ep. 21
செம்பியன் மாதேவி மதுராந்தகனை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு முன்னால், தன்னுடைய கதையையும், கண்டராதித்த தேவரை மணந்த வரலாற்றையும் கூறுகிறார்.
Aug 30, 2022•13 min•Season 3Ep. 20
பினாகபாணி, வந்தியத்தேவனை நோக்கியதை ஆழ்வார்க்கடியான் கவனிக்கிறான். இளவரசர் அருள்மொழிவர்மர் வந்த கப்பல் சுழற்காற்றில் அகப்பட்டுக் கொண்டச் செய்தியை தஞ்சாவூர்த் தூதர்கள் கொண்டு வருகிறார்கள். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனை இளவரசியிடம் அழைத்து செல்ல முயல்கிறான்.
Aug 29, 2022•11 min•Season 3Ep. 19
பெரிய மகாராணி மதுராந்தகரிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்கிறார். மதுராந்தகர் வந்தியத்தேவனை நிமித்தக்காரன் என்று நினைத்து அவனிடம் வருங்காலத்தைப் பற்றி கேட்கிறார். இளவரசருடைய ஆசை வெறியை அளவுக்கு அதிகமாகக் கிளப்பிவிடுகிறான் வந்தியத்தேவன். அச்சமயத்தில் பெரிய மகாராணி செம்பியன் மாதேவி இளவரசர் மதுராந்தகரை அழைக்கிறார். அரண்மனைக்கு வெளியே செல்ல வந்தியத்தேவன் மதுராந்தகரிடம் அனுமதி பெற்றுக் கொள்கிறான். நந்தினியும், சின்ன பழுவேட்டரையரும், பழையாறைக்குத் வரும் வந்தியத்தேவனை கண்டுபிடித்துச் செய்தி சொல்ல ...
Aug 27, 2022•24 min•Season 3Ep. 18
மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசிக்கிறார். சபாமண்டபத்துக்கு திருநாரையூர் நம்பியை பார்க்க வருமாறு மதுராந்தகரிடம் செம்பியன் மாதேவி கூறுகிறார். சபாமண்டபத்தில் குந்தவைப் பிராட்டியை வந்தியத்தேவன் பார்க்கிறான்.
Aug 25, 2022•13 min•Season 3Ep. 17
மதுராந்தகரைப்பற்றியும், அவருடைய பரம்பரையைக் குறித்தும், சோழ சிங்காதனம் பற்றியும், மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறி பற்றியும் வாசகர்களுக்குச் சிறிய விளக்கம்.
Aug 24, 2022•10 min•Season 3Ep. 16
வந்தியத்தேவன், காலாமுகச் சாமியார்களை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்கிறான். காலாமுகச் சாமியார்கள் பேசியச் செய்திகளை கேட்டு வந்தியத்தேவன் விரைவில் இளவரசியிடம் செய்தியைச் சொல்லிவிட்டு ஆதித்த கரிகாலரை காத்து நிற்க காஞ்சிக்குப் போக விரும்புகிறான். வந்தியத்தேவன் கோட்டைக்குள் பிரவேசிக்க மதுராந்தகத்தேவரிடம் காலாமுகரின் யுக்தியை கையாண்டு பார்க்கிறான்.
Aug 23, 2022•18 min•Season 3Ep. 15
நந்தினியின் கையில் உள்ள வாளைப் பற்றி வந்தியத்தேவன் கேட்கிறான். நந்தினி, இளவரசரைப் பற்றிய உண்மையை வந்தியத்தேவனிடம் கேட்கிறாள். வந்தியத்தேவன்,இளவரசரைப் பற்றிச் சொல்ல முடியாது என்று கூறி, பனை முத்திரை மோதிரத்தை நந்தினியிடம் திரும்பி கொடுக்கிறான். பிறகு இலங்கைக்கு நீங்கள் வந்தீர்களா? என்று விணவுகிறான். வந்தியத்தேவனை முல்லையாற்றங்கரையில் விட்டுவிட்டு அழைத்து வந்தவர்கள் ஒரு நொடியில் மறைந்துவிடுகிறார்கள்.
Aug 23, 2022•20 min•Season 3Ep. 14
உள்ளம் துணுக்குற்ற வந்தியத்தேவன், தேவராளனைப் பார்க்கிறான். தேவராளன், வந்தியத்தேவனிடம் “உன் காதல் பாட்டுக்குறியவள் உன்னைப் பார்க்க விரும்புகிறாள்” என்று கூறுகிறான். வந்தியத்தேவனின் கால்களையும், கைகளையும் துணியினால் கட்டி பல்லக்கில் பலர் ஏற்றுகிறார்கள். மயக்கம் தெளிந்து கண் விழித்த வந்தியத்தேவன் முன் நந்தினி வருகிறாள். இளவரசரைப் பற்றி அறிவதற்காக நந்தினி வந்தியத்தேவனிடம் வார்த்தைகளாகிய விஷபாணக் கேள்விகளை கேட்கிறாள்.
Aug 19, 2022•23 min•Season 3Ep. 13
கொல்லன் காய்ச்சிச் செப்பனிட்ட வாளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்வி கேட்கிறான். பிறகு தூக்கத்தில் வல்லவரையன் பல பயங்கரக் கனவுகள் காண்கிறான். பெரிய பழுவேட்டரையரும், அவர் பரிவாரங்களும் கடந்து போனதை கொல்லன் வல்லவரையனிடம் கூறுகிறான். குதிரைக்குளம்புக்கு லாடம் அடித்து முடிந்ததும், வல்லவரையன் பழையாறைக்கு முல்லையாற்றங்கரை வழியாகப் பயணிக்கிறான். வழியில் மனிதக் குரல் சிரிக்கும் சத்தம் கேட்டு மிரட்சி அடைகிறான்.
Aug 19, 2022•25 min•Season 3Ep. 12
இளவரசி குந்தவை கூறிய பணியை நிறைவேற்றிவிட்டதாக சொல்ல வந்தியத்தேவன் பழையாறைக்கு போகிறான். வழியில் குதிரைக்குளம்புக்கு இரும்புக் கவசம் போட கொல்லுப்பட்டறைக்குள் பிரவேசிக்கிறான்.
Aug 17, 2022•9 min•Season 3Ep. 11
சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றிய, வரலாற்றை கூறுகின்றனர். தலைமைப் பிக்ஷுவும், சேந்தன் அமுதனும் இளவரசருக்கு உதவுகிறார்கள். இளவரசர் விஹாரத்திற்குல் செல்வதைப் பூங்குழலி பார்த்துக்கொண்டு நிர்க்கிறாள்.
Aug 16, 2022•16 min•Season 3Ep. 10
இளவரசரயை சூடாமணி விஹாரத்தில் கொண்டு போய் விடுமாறு பூங்குழலியிடமும், சேந்தனிடமும் வந்தியத்தேவன் கூறுகிறான். பிறகு வந்தியத்தேவன் பழையாறைக்கு புறப்படுகிறான். பூங்குழலியும், சேந்தனும் படகை நாகைப்பட்டினத்துக்கு செலுத்துகிறார்கள்.
Aug 15, 2022•10 min•Season 3Ep. 9
பூங்குழலி இளவரசிரடம், இளையபிராட்டி சேந்தன் அமுதனிடம் அனுப்பிய செய்தியை கூறுகிறாள். மந்திரவாதியைச் சேற்றிலிருந்து எடுத்து விட ஓடும் பூங்குழலியை பின் தொடர்கிறான் வந்தியத்தேவன்.
Aug 12, 2022•14 min•Season 3Ep. 8
பூங்குழலியைத் தொடர்ந்து மந்திரவாதி வருகிறதை சேந்தன் அமுதன் எச்சரிக்கை செய்கிறான் .மந்திரவாதி பூங்குழலியைத் துரத்துகிறான். மந்திரவாதி புதைசேற்றுக் குழியில் அகப்படுகிறான். அமுதன், குந்தவை தேவி தன்னை அனுப்பிய காரணத்தை கூறுகிறான். வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரை தூக்கி கொள்கிறார்கள். பூங்குழலி பின் தொடர்கிறாள்.
Aug 11, 2022•22 min•Season 3Ep. 7
மந்திரவாதியும், நந்தினியும் பேசியதை தாழைப் புதரின் மறைவில் இருந்து பூங்குழலி கேட்கிறாள். மறைந்த மண்டபம் ராக்கம்மாளுக்கும், மந்திரவாதிக்கும் தெரிந்ததை அறிந்து, பூங்குழலி பெருந்திகில் அடைகிறாள். யாரோ பூங்குழலியை மறைவாக தொடர்கிறார்கள்.
Aug 10, 2022•10 min•Season 3Ep. 6
கலங்கரை விளக்கின் காவலர் தியாக விடங்கரின் மருமகள் ராக்கம்மாள், நந்தினியை மந்திரவாதியிடம் அழைத்து செல்கிறாள். குழகர் கோவிலுக்குப் போவதாகச் சொல்லி கொண்டு இருவறும் போகிறார்கள்.
Aug 09, 2022•12 min•Season 3Ep. 5
இளவரசர் பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவனும், பூங்குழலியும் படகில் இருந்தனர். வந்தியத்தேவனும், இளவரசரும் எங்கு செல்லவேண்டும் என்று வாதிடுகிறார்கள். இளவரசர் குளிர் காய்ச்சலினால்சுய உணர்வை இழக்கிறார். வந்தியத்தேவனும் பூங்குழலியும் பீதியடைகின்றனர். பூங்குழலி குழகர் கோயில் குருக்களிடம் கோடிக்கரைக்கு வந்திருப்பவர்கள் யார் என்று கேட்கிறாள். கோட்டான் குரல் கேட்ட திசையில் இருவர் பேசுவதை மறைந்து நின்று கேட்கிறாள்
Aug 08, 2022•27 min•Season 3Ep. 4
பார்த்திபேந்திரன் நந்தினியிடம் தன் விருப்பத்தைக் கூறுகிறான். நந்தினி, இளையபிராட்டி குந்தவையின் ஆசை என்ன என்றும், தனக்கு உதவி செய்யுமாறு பார்த்திபேந்திரனிடம் கோட்கிறாள். பழுவேட்டரையர் பார்த்திபேந்திரனுடைய கப்பலை முற்றுகையிட்டு விட்டு வருகிறார். பிறகு பார்த்திபேந்திரனை, சக்கரவர்த்தியிடம் நடந்ததை சொல்ல நேரில் வர கோபத்துடன் அழைக்கிறார். நந்தினி ஆந்தையின் சத்தம் கேட்டு இன்னும் ஒருநாள் இருக்கலாம் என்று கூறுகிறாள்.
Aug 06, 2022•27 min•Season 3Ep. 3
பழுவேட்டரையரும் ,நந்தினியும் பார்த்திபேந்திரன் வந்த காரியத்தை கேட்கிறார்கள். பழுவேட்டரையர் பார்த்திபேந்திரன் சொன்ன செய்தி கேட்டு தரையில் வீழ்கிறார். நந்தினி பார்த்திபேந்திரனிடம் பழுவேட்டரையருக்கு உண்மையை எடுத்துச் சொல்லவேண்டும் என்று கோறுகிறாள்.
Jan 05, 2022•24 min•Season 3Ep. 2
தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரின் யோசனையைச் சக்கரவர்த்தி ஆமோதித்து கட்டளை அனுப்பப்படுகிறது. இளவரசரை முதலில் சந்திக்க பெரிய பழுவேட்டரையர், நந்தினியுடன் நாகைப்பட்டினத்தில் காத்திருக்கிறார். சுழிக்காற்றினால் இரு கப்பல்கள் தத்தளித்தை அறிந்த இருவறும் கோடிக்கரை செல்கிறார்கள். பார்த்திபேந்திரர் வந்தியத்தேவனைக் காப்பாற்றச் சென்ற இளவரசர் அருள்மொழிவர்மரை பற்றி கோடிக்கரையில் விசாரிக்க தீர்மானிக்கிறான். பார்த்திபேந்திரனை பழுவேட்டரையரின் கூடாரத்துக்கு அழைத்து செல்கிறார்கள்....
Jan 04, 2022•20 min•Season 3Ep. 1
இளவரசர் அருள்மொழிவர்மர் பார்த்திபேந்திரனுடைய கப்பலுக்கு சென்ற பிறகு சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி பூங்குழலியை எச்சரிக்கிறார். பூங்குழலியின் மனஆத்திரம் அவளை கடலை நோக்கிப் படகைச் செலுத்த செய்தது. இளவரசரும், வந்தியத்தேவனும் அலைகடலில் மிதந்ததைப் பார்த்து பூங்குழலி செயலிழந்து நிற்கிறாள்.
Jan 03, 2022•23 min•Season 2Ep. 53
வந்தியத்தேவன் தீப்பற்றிய கப்பலின் வெளிச்சத்தில் இளவரசர் அருள்மொழிவர்மர் ஒரு கப்பலிலிருந்து இறக்கப்பட்ட படகில் தன்னைத் தேடி வருவது தெரிகிறது. பார்த்திபேந்திரனும், கலபதியும் தடுத்தும், இளவரசரும் இரு மலுமிகளும் படகில் ஏறிச் செல்கிறார்கள். படகில் இருந்த இளவரசரக்கும் வந்தியத்தேவனுக்கம் திசையும், கப்பலும் தெரியாததால் அபாயம் அவர்களை நெருங்குகிறது.
Jan 02, 2022•16 min•Season 2Ep. 52
மந்திர தந்திரங்களில் தேர்ந்த இரண்டு காளி பக்தர்களின் உயிர்ப் பலி கேட்கிறான் சமுத்திர ராஜன் என்று வந்தியத்தேவன் கூவுகிறான். தாங்கள் பலியாவதற்கு முன்பு குலதெய்வ பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறான் ரவிதாஸன். வந்தியத்தேவன் தனியாக கப்பலில் சுழிக்காற்றை எதிர்கொள்ள முன் ஜாக்கிரதையாக பாய்மரத்தின் அடித்தண்டுடன் தன்னைக் கட்டிக் கொள்கிறான். அவன் இருந்த கப்பலின் பாய்மரம் உச்சியில் தீப்பற்றி எரிவதைக் காண்கிறான்.
Jan 01, 2022•26 min•Season 2Ep. 51
இளவரசர் பார்த்திபேந்திரன் கப்பலில் ஏறியதும் அராபியர் வசப்பட்ட கப்பலில் இருக்கும் வந்தியத்தேவனை தப்புவித்தாக வேண்டும் என்கிறார். கலபதி சுழிக்காற்று எங்கேயோ உருவாகிக் கொண்டிருக்கிறது என்று இளவரசரிடம் கூறுகிறான். அதே வேளையில் வந்தியத்தேவன் தன் அவசர புத்தியினால் அகப்பட்டதனால், தப்பிவிட வேண்டும் என்று எண்ணுகிறான். மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய தோழனும் வந்தியத்தேவனிடம் அராபியர்களை தாக்கிக் கொல்ல உதவி கேட்கிறார்கள். பிறகு வந்தியத்தேவனை தங்களுடன் சேர்ந்துவிட சொல்லி அவர்களின் எல்லா இரகசியத்தையும் சொல்லுக...
Dec 31, 2021•25 min•Season 2Ep. 50
வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு போக வேண்டும் என்று இளவரசர் சேநாதிபதியிடம் விவாதம் செய்கிறார். பூங்குழலி கண்ணில் நீர் ததும்ப அப்படகுக்காரன் யார் என்று இளவரசரிடம் கூறுகிறாள். பார்த்திபேந்திரர் கப்பலில் தன்னை ஏற்றிவிடும்படி படகோட்டியிடம் கூறுகிறார்.
Dec 30, 2021•10 min•Season 2Ep. 49
காட்டில் கண்ட அதிசயத்தை குதிரை மேல் வந்த ஸ்திரீ கூற இளவரசரும் , மற்றவர்களும் அவளை பின் தொடர்ந்து செல்கின்றனர். மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கலபதியிடம் இளவரசரை ஊமை ராணி அழைத்துப் போகிறாள். பிறகு கலபதி தான் வந்த காரணத்தையும், தன் கட்டளையைக் கப்பல் மாலுமிகள் மீறியதையும், அரபு நாட்டாரின் தாக்குதலையும் கூறிகிறான்.
Dec 29, 2021•12 min•Season 2Ep. 48